முஸ்லிம் முக்கியஸ்தர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் முற்றுப்பெறவில்லை

மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக புலம்பெயர் இலங்கை முஸ்லிம்கள் சுட்டிக்காட்டு

0 342

கைது­செய்­யப்­பட்ட முஸ்லிம் முக்­கி­யஸ்­தர்­களின் மீதான சட்ட நட­வ­டிக்­கைகள் இன்­னமும் முற்­றுப்­பெ­ற­வில்லை. அத்­தோடு, முஸ்­லிம்கள் பல்­வேறு மனித உரிமை மீறல்­களின் விளை­வு­களை எதிர்­நோக்­கி­வ­ரு­கின்­றனர் என புலம்­பெயர் இலங்கை முஸ்லிம் மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

அத்­தோடு, நல்­லி­ணக்க விவ­கா­ரங்­க­ளையும் உறு­தி­செ­யயும் வித­மான நட­வ­டிக்­கை­களை தொடர்ந்தும் அமு­லாக்­க­வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.
செப்­டம்பர் 12 முதல் ஒக்­டோபர் 7ம் திக­தி­வரை இடம்­பெ­ற­வி­ருக்கும் ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 51வது கூட்­டத்­தொ­டரில் இலங்­கையின் மனித உரிமை விவ­கா­ரங்கள் முக்­கி­யத்­துவம் பெற்­றுள்­ளன.

46/1 மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் முன்­மொ­ழி­வுகள் காலா­வ­தி­யா­கின்ற சூழ்­நி­லையில் குறித்த முன்­மொ­ழி­வு­களை மீளவும் ஒரு புதிய பிரே­ர­ணை­யாக பிரித்­தா­னியா முன்­வைக்கும் எனவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் பொது­வான அறிக்­கை­யிடல் மற்றும் விஷேட பிர­தி­நி­தி­களின் அறிக்­கை­யிடல் என்­பன தற்­போது வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. A/HRC/51/5 மற்றும், A/HRC/51/26/Add.1 என்­ப­னவே அவ்­வ­றிக்­கை­க­ளாகும். இவற்றின் அடிப்­ப­டையில் சர்­வ­தே­சத்தில் வசிக்­கின்ற இலங்கை முஸ்லிம் சிவில் சமூ­கப்­பி­ர­தி­நி­திகள், மற்றும் மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் தங்­க­ளது அவ­தா­னங்­களை முன்­வைத்­துள்­ளார்கள்.
புலம்­பெயர் இலங்கை முஸ்லிம் மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்­களின் கலந்­து­ரை­யா­ட­லொன்று கடந்த ஞாயி­றன்று இடம்­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போது, இலங்­கையில் இடம்­பெறும் மனித உரிமை மீறல் தொடர்­பான விவ­கா­ரங்கள் குறித்து அவ­தானம் செலுத்­தப்­பட்­ட­துடன் நடை­பெ­ற­வுள்ள மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் கூட்­டத்­தொ­டரின் போது இடம்­பெறும் இணை நிகழ்­வுளின் போது இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் சர்­வ­தே­சத்தின் கவ­னத்­திற்கு கொண்டு செல்­வது குறித்தும் ஆரா­யப்­பட்­டது.

இலங்கை ஒரு அசா­தா­ர­ண­மான பொரு­ளா­தார நெருக்­க­டி­யையும், அர­சியல் மாற்­றங்­க­ளையும் எதிர்­நோக்கியிருக்­கின்­றது. இந்­நி­லையில் மனித உரிமை விவ­கா­ரங்­களில் சர்­வ­தேச சமூ­கத்தின் முன்­னாலும், ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் முன்னும் இலங்கை தனது பொறுப்­புக்­கூ­றலை ஒரு­போதும் தட்­டிக்­க­ழிக்­க­மு­டி­யாது. கடந்த இரண்டு தசாப்­தங்­க­ளாக இலங்­கையில் இடம்­பெற்­று­வரும் மனித உரிமை மீறல்கள் விட­யத்தில் பொறுப்பில் இருந்த அர­சாங்­கங்கள் நம்­பிக்­கைத்­த­ரு­கின்ற முன்­னேற்­ற­க­ர­மான நட­வ­டிக்­கைகள் எத­னையும் மேற்­கொள்­ள­வில்லை என்­பது பொது­வான அவ­தானம். இந்­நி­லையில் பொறுப்பில் இருந்த அர­சாங்­கங்கள் மிகப்­பா­ரிய பொரு­ளா­தார முறை­கே­டு­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றமை தற்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. பொரு­ளா­தார முறை­கே­டுகள் மூலமும் இலங்­கையில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றுள்­ளன என்­ப­தையும் அங்­கி­ருந்து கிடைக்­கின்ற தர­வுகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்­கின்ற கார­ணத்­தினால் அரச மட்­டத்­தி­னா­லான முறை­கே­டுகள், சட்­ட­வி­ரோத கைதுகள், தடுத்­து­வைப்­புகள் அடக்­கு­மு­றைகள் தொடர்­கின்­றன. ஈஸ்டர் குண்­டுத்­தாக்­கு­த­லுக்­கான முறை­யான விசா­ர­ணை­களோ சட்ட நட­வ­டிக்­கை­களோ இது­வரை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் இதனைக் கார­ண­மாக வைத்து 300ற்கும் அதி­க­மான முஸ்லிம் இளைஞர்­களும் யுவ­தி­களும் பல மாதங்­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். முஸ்லிம் அமைப்­புக்­களின் மீதான தடைகள் தொடர்­கின்­றன. ஏற்­கெ­னவே சட்­ட­வி­ரோ­த­மாக கைது­செய்­யப்­பட்ட முஸ்லிம் முக்­கி­யஸ்­தர்­களின் மீதான சட்ட நட­வ­டிக்­கைகள் இன்­னமும் முற்­றுப்­பெ­ற­வில்லை. இவ்­வா­றாக இலங்கை மக்கள் பொது­வா­கவும் முஸ்லிம் மக்கள் குறிப்­பா­கவும் பல்­வேறு மனித உரிமை மீறல்­களின் விளை­வு­களை எதிர்­நோக்­கி­ய­வண்­ண­மே­யி­ருக்­கின்­றார்கள்.

இந்த அடிப்­ப­டை­களில் ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரி­மைகள் ஆணை­யகம் இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரங்­க­ளையும், சமூ­கங்­க­ளுக்­கி­டை­யே­யான நல்­லி­ணக்க விவ­கா­ரங்­க­ளையும் உறு­தி­ செய்யும் வித­மான நட­வ­டிக்­கை­களை தொடர்ந்தும் அமு­லாக்­க­வேண்டும், அத்­தோடு இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­கடி நிலை­மை­க­ளுக்கு ஏது­வான சர்­வ­தேச சமூ­கங்­களின் ஒத்­து­ழைப்­புக்­களை உறு­தி­செய்தல் வேண்டும் என்­பதும் சர்­வ­தே­சங்­களில் வாழ்­கின்ற இலங்கை முஸ்லிம் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக அமைந்திருக்கின்றது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.