கல்முனை முஹைதீன் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் நியமனம்: வக்பு சபையின் தீர்மானத்தை இடைநிறுத்த சமய விவகார, புத்தசாசன அமைச்சு உத்தரவு

0 317

(றிப்தி அலி)
கல்­முனை முஹைதீன் பெரிய ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்­கான புதிய நிர்­வாக சபை உறுப்­பி­னர்­களை நிய­மிப்­ப­தற்கு வக்பு சபை மேற்­கொண்ட தீர்­மா­னத்­தினை உட­ன­டி­யாக இடை­நி­றுத்­து­மாறு சமய விவ­கார மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்க உத்­த­ர­விட்­டுள்­ள­தாக அமைச்சு வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

இந்த உத்­த­ரவு, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஐ. அன்­சா­ரிற்கு அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்­க­வினால் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­கா­லிக அடிப்­ப­டையில் ஒரு வரு­டத்­திற்­காக நிய­மிக்­கப்­பட்ட கல்­முனை முஹைதீன் பெரிய ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் பதவிக் காலம் கடந்த 2008ஆம் ஆண்­டுடன் நிறை­வ­டைந்து விட்­டது. அர­சியல் தலை­யீ­டுகள் கார­ண­மாக இப்­பள்­ளி­வா­ச­லுக்­கான புதிய நிர்­வாகம் கடந்த 14 வரு­டங்­க­ளாக வக்பு சபை­யினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

இதனால் பல கோடி ரூபாய் சொத்­துக்­களைக் கொண்ட இப்­பள்­ளி­வாசல், தனி­ந­ப­ரொ­ரு­வ­ரினால் கடந்த ஒரு தசாப்­தத்­திற்கு மேலாக நிர்­வ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்த விடயம் தொடர்பில் பல்­வேறு தரப்­பி­னரால் வக்பு சபையின் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து, வக்பு சபையின் உத்­த­ர­விற்­க­மைய முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் குழு­வொன்று கல்­மு­னைக்கு கள விஜயம் செய்து பல்­வேறு தரப்­பி­னரை நேடி­யாக சந்­தித்­தனர்.

இதன் பின்னர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் வக்பு சபைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்­கை­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு 31 பேர் கொண்ட புதிய நிர்­வாக சபை­யினை நிய­மிக்க வக்பு சபை அண்­மையில் தீர்­மா­னித்­தது.
இதன் பிர­காரம், குறித்த பள்­ளி­வா­ச­லுக்­கான புதிய நிர்­வாக சபை உறுப்­பி­னர்கள் நிய­மனம் தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு இன்னும் ஓரிரு தினங்­களில் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருந்­தது.

இந்த நிலை­யி­லேயே குறித்த நிய­ம­னத்­தினை உட­ன­டி­யாக இடை­நி­றுத்­து­மாறு சமய விவ­கார மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்­க­வினால் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. இப்­பி­ர­தேச அர­சி­யல்­வா­தி­யொ­ரு­வரின் அழுத்தம் கார­ண­மா­கவே அமைச்­ச­ரினால் இந்த உத்­த­ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
எவ்­வா­றா­யினும், வக்பு சபையின் தீர்­மா­னத்தில் தலை­யீ­டு­களை மேற்­கொள்ளும் அதி­காரம் சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­ருக்­கில்லை என 1956ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க வக்பு சட்­டத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.