மதஸ்தலங்களுக்கான மின் கட்டணம் அசாதாரண முறையில் அதிகரிப்பு
ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அனைத்து மத ஸ்தலங்களுக்குமான மின் கட்டணம் அசாதாரண முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. மதஸ்தலங்களின் மின் பாவனை 180 அலகுகளுக்கு மேற்பட்டால் தற்போதைய கட்டணத்தை விட 691 வீதம் அதிகமாக செலுத்தவேண்டியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையின்போது சுட்டிக் காட்டினர்.
அத்தோடு இது விடயத்தில் அரசாங்கம் மதஸ்தலங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.
மதஸ்தலங்கள் இதுவரை காலம் மின்கட்டணமாக 180 அலகுகளுக்கு மேற்பட்டால் ஒரு அலகுக்கு 9 ரூபா 40 சதமே செலுத்தி வந்தன. ஆனால் தற்போது இக்கட்டணத்தை ஒரு அலகுக்கு 65 ரூபாவாக அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.