பங்களாதேஷ் இலங்கைபோன்று நெருக்கடிக்கு முகம்கொடுக்காது

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா

0 279

எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் பங்­க­ளாதேஷ் இலங்­கை­யைப்­போன்று பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு முகங்­கொ­டுக்­காது என்றும், தமது அர­சாங்கம் உரிய திட்­ட­மி­டலின் பிர­காரம் நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தா­கவும் பங்­க­ளாதேஷ் பிர­தமர் ஷேக் ஹஸீனா தெரி­வித்­துள்ளார்.

‘எமக்கு எதி­ராகப் பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்­பதில் எவ்­வித அர்த்­தமும் இல்லை. பங்­க­ளாதேஷ் ஒரு­போதும் இலங்­கை­யா­காது என்­ப­துடன் அவ்­வாறு ஆகவும் முடி­யாது’ என்றும் அந்­நாட்டு பிர­தமர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

கடந்த 1975 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் திகதி ‘வங்­க­பந்து’ ஷேக் முஜிபுர் ரஹ்மான் படு­கொலை செய்­யப்­பட்­ட­மையை நினை­வு­கூரும் வகையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிகழ்வில் உரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் ஷேக் ஹஸீனா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் உரை­யாற்­று­கை­யில்­நாட்டின் தொடர்ச்­சி­யான அபி­வி­ருத்­தியை இலக்­கா­கக்­கொண்டு தமது அர­சாங்கம் ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்­ட­வா­றான முறை­களில் வரவு, செல­வுத்­திட்­டத்தை முன்­வைத்­தி­ருக்­கிறோம். ஒவ்­வொரு அபி­வி­ருத்­தித்­திட்­டமும் அதன்­மூலம் நாட்டின் பொரு­ளா­தார ரீதி­யான நன்­மையை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு அமைந்­தி­ருக்­கி­றது

‘நாம் ஒவ்­வொரு அபி­வி­ருத்தி செயற்­திட்­டத்­திற்கு அனு­மதி வழங்க முன்­னரும், அது பூர்த்­தி­ய­டைந்­ததன் பின்னர் நாட்­டுக்கும் பொது­மக்­க­ளுக்கும் எத்­த­கைய நன்­மை­களைப் பெற்­றுத்­தரும்?’ என்­பது குறித்து சிந்­திப்போம். மாறாக பாரிய அபி­வி­ருத்­தித்­திட்­ட­மொன்றின் மூலம் பெரு­ம­ள­வான நிதியை தர­குப்­ப­ண­மாகப் பெற்­றுக்­கொள்­ள­மு­டியும் என்­பது குறித்து நாம் சிந்­திப்­பதே இல்லை’ என்று கூறி­யுள்ள பிர­தமர் ஷேக் ஹஸீனா, ‘நாம் பிறரிடம் நிதியைப்பெற்று, அதன்மூலம் ‘நெய்’ உண்பதில்லை. யாரினுடையதும் கடன்பொறிக்குள் சிக்கும் அளவிற்கு எமது கடன்தொகை மிகவும் உயர்ந்ததல்ல’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.