என்.டி.எச்.அப்துல் கபூர் நம்பிக்கை நிதியம் தனியார் வெளிப்பாட்டு நிதியமாக செயற்படுகிறது

அறிக்கையொன்றின் ஊடாக சுட்டிக்காட்டு

0 372

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
என்.டி.எச்.அப்துல் கபூர் நம்­பிக்கை நிதியம் ஒரு இஸ்­லா­மிய கரு­ணை­கொடை நம்­பிக்கை நிதி­யமோ அல்­லது சட்­டத்தின் கீழான ஒரு கரு­ணை­கொடை நம்­பிக்கை நிதி­யமோ அல்ல. எனவே குறிப்­பிட்ட நம்­பிக்கை நிதியம் முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் கரு­ணைக்­கொடை நம்­பிக்கை நிதி­யமோ அல்­லது 1956 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க வக்பு சட்ட ஏற்­பா­டு­க­ளுக்கு உட்­பட்­ட­தல்ல. இது ஒரு தனியார் வெளி­ப்பாட்டு நம்­பிக்கை நிறு­வ­ன­மா­கவே தொடர்ந்து இயங்கி வரு­கின்­றது என அப்துல் கபூர் நம்­பிக்கை நிதியம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்றில் குறிப்­பிட்­டுள்­ளது.

மஹ­ர­கம கபூ­ரியா அர­புக்­கல்­லூரி மற்றும் வக்பு சொத்­தாக கூறப்­படும் கிரேண்ட்பாஸில் சுலைமான் வைத்­தி­ய­சாலை அமைந்­தி­ருந்த காணிக்கு ஆபத்து ஏற்­பட்­டுள்ள நிலையில் சமூ­கத்தின் மத்­தியில் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தை­ய­டுத்தே அப்துல் கபூர் நம்­பிக்கை நிதியம் மேற்­கு­றிப்­பிட்ட அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது. அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

மர்ஹும் அப்துல் கபூ­ரினால் 1935.11.22 ஆம் திகதி 2125 ஆம் இலக்க நம்­பிக்கை பத்­தி­ரத்தின் கீழ் உரு­வாக்கப்­பட்­டதே அப்துல் கபூர் நம்­பிக்கை நிதியம். அமைப்பின் நிறு­வுனர் அப்துல் கபூர் 2125 ஆம் இலக்க நம்­பிக்கை நிதியப் பத்­தி­ரத்தின் 6 ஆவது சரத்தில் நம்­பிக்கை நிதியம் ஆங்­கில சட்­டத்தின் கீழ் நிர்­வ­கிக்­கப்­ப­ட­வேண்டும் என்றே கூறி­யுள்ளார். எனவே இச்­சொத்­துகள் வக்பு சட்­டத்தின் கீழ் உள்­ள­டங்­காது.

அத்­தோடு இந்த நம்­பிக்கை அமைப்பு தற்­போது பதி­வாளர் நாயகம் திணைக்­க­ளத்தின் தனியார் பொது வெளிப்­பாட்­டுப்­பி­ரிவின் கீழ் 011 ஆம் இலக்­கத்தை உடைய ஒரு நம்­பிக்கை அமைப்­பாக பதிவு செய்­யப்­பட்­டுள்­ளதே அல்­லாது கரு­ணைக்­கொடை அமைப்­பாக பதி­யப்­ப­ட­வில்லை என்­ப­துடன் அது ஒரு தனியார் வெளிப்­பாட்டு நம்­பிக்கை அமைப்­பாக உள்­நாட்டு இறை­வரி திணைக்­க­ளத்­துக்கு வரி­க­ளையும் செலுத்­து­கி­றது.
இது வக்பு சட்­டத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்­டில்லை. அதன் கூறப்­பட்ட நோக்­கங்கள் நம்­பிக்கைப் பத்­தி­ரத்தின் விட­யங்­க­ளுக்கு ஏற்ப அமைந்­தவை என்­ப­துடன் அதில் முஸ்லிம் கருணை நம்­பிக்கை நிதியம் அல்­லது வக்பு விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.
கொழும்பு மாவட்ட நீதி­மன்றம் நம்­பிக்கைப் பத்­தி­ரத்தை ஆராய்ந்து DTR/08/2020 இலக்க வழக்கில் ஒரு கட்­ட­ளையைப் பிறப்­பித்­துள்­ளது. இது நம்­பிக்கை அமைப்­புக்கு சொந்­த­மான விடய ஆத­னத்தை அதில் கூறப்­பட்ட நோக்­கங்­களை நம்­பிக்கை அமைப்பின் எண்­ணத்­துக்கு ஏற்ப அடை­வ­தற்கு குத்­த­கைக்கு, விடு­வ­தற்கு செல்­லு­ப­டி­யா­னதும் கட்­டுப்­பட்­டதும் அனு­ம­திப்­ப­து­மாகும். அப்துல் கபூர் நம்­பிக்கை அமைப்பால் நிறை­வேற்­றப்­படும் ஒவ்­வொரு குத்­த­கையும் நம்­பிக்கை பத்­திரம் மற்றும் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய சட்­டத்­துடன் கட்­டா­ய­மாக இணங்­க­க்கூ­டி­ய­தாக மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

அப்துல் கபூர் நம்­பிக்கை நிதியம் நிறு­வ­னரால் அவ­ருக்­கா­கவும் மற்றும் அவ­ரது தற்­போ­துள்ள நம்­பிக்­கை­யா­ளர்­களால் நிய­மிக்­கப்­படும் அடுத்த நம்­பிக்­கை­யா­ளர்­க­ளுக்­கா­கவும் மட்­டுமே உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­துடன் நம்­பிக்கை பத்­தி­ரத்தில் கூறப்­பட்ட நோக்­கங்கள் மற்றும் விட­யங்­களை செயற்­ப­டுத்­து­வ­தற்கு கொடுக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்கை அதி­கா­ரங்­க­ளுடன் உரி­மை­யா­ளரின் ஆத­னங்­களை மாற்­று­வ­தற்கு அவர்­களின் விருப்­பத்­துக்கு ஏற்ப விட­யங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

அப்துல் கபூர் நம்­பிக்கை அமைப்பின் நம்­பிக்­கை­யா­ளர்கள் அவர்­களின் அனைத்து முயற்­சி­க­ளிலும் எதிர்­கால செயற்­பா­டு­க­ளிலும் மர்ஹும் அப்துல் கபூரின் நோக்­கங்­க­ளுக்கு ஏற்ப நம்­பிக்கை அமைப்பின் விதி­மு­றை­களின் கீழ் அவர்­களின் கடப்­பா­டு­களை நிறை­வேற்­று­வதில் எப்­பொ­ழுதும் அர்ப்­ப­ணிப்­புடன் உள்ளனர். தற்போது அவர்கள் அரபுமொழி பாடசாலைகள் மற்றும் மேம்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எம்மால் மேற்கொள்ளப்படும் நல்ல செயற்பாடுகளை தடுக்கும் வகையில் இகழ்ச்சியான போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாமெனவும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாமெனவும் சம்பந்தப்பட்டவர்களை வேண்டுகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.