ஹஜ் யாத்திரை விண்ணப்பங்கள் பதிவுக் கட்டணத்தை மீளவும் பெறமுடியும்

அரச ஹஜ் குழு அறிவிப்பு

0 322

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கடந்த வரு­டங்­களில் ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு விண்­ணப்­பங்­களைச் சமர்ப்­பித்து 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்­டணம் செலுத்­தி­யுள்­ள­வர்கள் இது­வரை அவர்­க­ளுக்கு வாய்ப்பு கிடைத்­தி­ரா­விட்டால் பதி­வுக்­கட்­ட­ணத்தை திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து மீளப் பெற்றுக் கொள்ள முடி­யு­மென அரச ஹஜ்­குழு தெரி­வித்­துள்­ளது.

இவ்­வா­றான விண்­ணப்­ப­தா­ரிகள் எதிர்­வரும் காலங்­களில் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தில்லை என தீர்­மா­னித்­தி­ருந்தால் அவர்கள் பதி­வுக்­கட்­ட­ணத்தை மீளப்­பெற்­றுக்­கொள்ள முடியும். ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­ப­வர்­களின் வய­தெல்லை 65 வய­துக்­குட்­­பட்­டி­ருக்க வேண்டும் என சவூதி ஹஜ் அமைச்சு நிபந்­தனை விதித்­துள்­ளதால் இந்த வய­தெல்­லைக்கு மேற்­பட்ட விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு ஹஜ் யாத்­திரை மேற்­கொள்ள முடி­யாது. இவ்­வா­றா­ன­வர்கள் உரிய ஆவ­ணங்­க­ளுடன் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு விஜயம் செய்து தாம் செலுத்­தி­யுள்ள பதி­வுக்­கட்­ட­ணத்தை மீள பெற்றுக் கொள்ள முடியும்.

தற்­போது ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களில் பலர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு விஜயம் செய்து பதிவுக்கட்டணத்தை மீளப்பெற்று வருகின்றனர்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.