துருக்கி அதிவேக ரயில் விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு

0 772

துருக்­கியின்  மர்­சாண்டிஸ் ரயில் நிலை­யத்தை அண்­மித்த பகு­தியில் இடம்­பெற்ற பாரிய ரயில் விபத்தில் உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 9 ஆக உயர்ந்­துள்­ளது.

இதன்­போது 47 பேர் காய­ம­டைந்­த­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.   தலை­நகர் அங்­கா­ரா­வி­லி­ருந்து மத்­திய துருக்­கியின் கொன்யா பகு­தியை நோக்கிப் பய­ணித்த அதி­வேக ரயில் ஒன்றே இந்த விபத்­துக்கு முகம்­கொ­டுத்­துள்­ளது.

குறித்த ரயில் நேற்று காலை மர்­சாண்டிஸ் ரயில் நிலை­யத்தை கடந்து சென்­ற­போது, திடீ­ரெனப் பய­ணிகள் மேம்­பா­லத்தின் மீது மோதி­யது.

இத­னை­ய­டுத்து, இரும்­பினால் அமைக்­கப்­பட்ட குறித்த மேம்­பாலம் உடைந்து நொறுங்­கி­யது. பாலத்தின் அடிப்­ப­கு­தியில் ரயில் பெட்­டிகள் சிக்கி உருக்­கு­லைந்­தன. அத்­துடன் 2 பெட்­டிகள் தடம்­பு­ரண்­டன.

விபத்து குறித்து தக­வ­ல­றிந்த மீட்புக் குழு­வினர் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடு­பட்­டனர். ரயில் பெட்­டி­களின் இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யி­ருந்­த­வர்கள் வெளி­யேற்­றப்­பட்டு சிகிச்­சைக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டனர்.

இந்த அனர்த்­தத்தில்  பேர் உயி­ரி­ழந்­த­தா­கவும், 47 பேர் வரை படு­காயம் அடைந்­துள்­ள­தா­கவும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. காய­ம­டைந்­த­வர்­களில் 3 பேரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ளதால், உயி­ரி­ழப்பு எண்­ணிக்கை அதி­க­ரிக்கும் என்று அஞ்­சப்­ப­டு­கி­றது.

மர்­சாண்டிஸ் ரயில் நிலை­யத்தை கடந்­த­போது தண்­ட­வாள பரி­சோ­த­னையில் ஈடு­பட்­டி­ருந்த உள்ளூர் ரயில் இயந்­திரம் மீது அதி­வேக ரயில் மோதி­ய­தை­ய­டுத்து, தடம்­பு­ரண்டு பய­ணிகள் பாலத்தின் மீது மோதியதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன், விபத்து ஏற்படுவதற்கான முக்கிய காரணம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.