முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் பிரிவு 16 மீதான விமர்சனங்கள் குறித்த ஒரு பார்வை

0 636

சட்டத்தரணி ஷிபானா ஷரிபுத்தீன்

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தின் திருத்­தங்கள் தொடர்பில் பல வாதப் பிர­தி­வா­தங்கள் நிகழ்ந்து கொண்­டி­ருக்­கின்ற இன்­றைய சூழ்­நி­லையில் தற்­போது நடை­மு­றையில் உள்ள சட்­டத்தின் பிரிவு 16 முக்­கி­ய­மான பேசு பொரு­ளாக உள்­ளது.

பிரிவு 16 இன் சாரம் என்­ன­வெனில் “ஒரு திரு­ம­ண­மா­னது வலி­தா­னதா எனத் தீர்­மா­னிப்­ப­தற்கு அத்­தி­ரு­மணம் பதி­யப்­பட்­டதா இல்­லையா என்­பது கார­ண­மா­காது. அத்­தி­ரு­மணம் நடை­பெறும் போது திரு­ம­ணத்தின் திறத்­த­வர்கள் எந்தப் வகுப்­பினைச் சேர்ந்­த­வர்­களோ அந்த வகுப்­பினால் தேவைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற நிபந்­த­னை­களை அத்­தி­ரு­மணம் கொண்­டி­ருத்தல் போது­மா­னது. அவ்­வாறு நிபந்­த­னைகள் பூர்த்­தி­யாக்கப்படா­த­வி­டத்து அத்­தி­ரு­மணம் வலி­தற்­ற­தாகக் கரு­தப்­படும்.”

இதன்­படி திரு­மணம் ஒன்­றினை வலி­தற்­ற­தாக்­கு­வ­தற்­கான அடிப்­ப­டை­யாக ‘மத்ஹப்’கள் இருக்­கின்­றன. உதா­ர­ண­மாகத் திரு­மணம் செய்­கின்­ற­வர்கள் ‘ஷாபி மத்ஹப்’ இனைப் பின்­பற்­று­ப­வர்­க­ளாக இருப்பின் அங்கு வலியின் சம்­மதம் இன்றி நடை­பெ­று­கின்ற திரு­மணம் வலி­தற்­றது. ஆனால் அவர்கள் ‘ஹனபி மத்ஹப்’ இனைப் பின்­பற்­று­ப­வர்­க­ளாயின் அத்­தி­ரு­மணம் வலி­தா­னது. இங்கு முன்­வைக்­கப்­ப­டு­கின்ற விமர்­சனம் யாதெனில் இஸ்லாம் மார்க்­கத்தில் பிரி­வினை அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை, அல்­குர்ஆன் முஸ்­லிம்கள் பிளவு படு­வதை வன்­மை­யாக கண்­டித்து எச்­ச­ரிக்­கின்­றது. இவ்­வாறு இருக்க இந்தப் பிரி­வி­னை­வாதம் ஏற்றுக் கொள்ள முடி­யா­தது என்­ப­தாகும். மேலும், இலங்­கையில் வாழ்­கின்ற முஸ்­லிம்கள் தாம் பின்­பற்­று­கின்ற மத்­ஹப்­பற்­றிய எந்த அறிவும் இல்­லாமல் கண்­மூ­டித்­த­ன­மாக அவற்றைப் பின்­பற்­று­கின்­றனர், இன்னும் தான் எந்த மத்­ஹபைச் சேர்ந்­தவர் என்ற அறிவு இல்­லா­மலே பலர் வாழ்­கின்­றனர். இது இவ்­வாறு இருக்க இலங்­கையில் வாழ்­கின்ற முஸ்­லிம்கள் அனை­வரும் ஷாஃபி மத்­ஹபைச் சேர்ந்­த­வர்கள் என எடுகோள் கொள்­வதும், அவ்­வாறு இல்­லாத பட்­சத்தில் தான் எந்த மத்­ஹப்பைச் சேர்ந்­தவர் என நிரூ­பிக்கக் கோரு­வதும் அபத்­த­மான நடை­முறை என வாதி­டு­கின்­றனர். அத்­தோடு, ஒவ்­வொரு தனி மனி­த­னுக்கும் தான் எந்த மத்­ஹபைப் பின்­பற்ற வேண்டும் என்­பதைத் தேர்வு செய்யும் சுதந்­திரம் காணப்­பட வேண்டும் எனவும் கூறு­கின்­றனர். அது மட்­டு­மன்றித் தான் விரும்­பி­ய­படி தன் திரு­ம­ணத்தைச் செய்து கொள்ள தனது மத்­ஹபை மாற்­றிக்­கொள்ள நிர்­ப்பந்­திக்­கப்­ப­டு­வதும் ஏற்றுக் கொள்ள முடி­யா­தது என்­கின்­றனர் சிலர். இதற்கு ஆதா­ர­மாக ‘அப்துல் காதர் எதிர் ராசிக்’ என்ற வழக்­கினைக் காட்­டு­கின்­றனர். இந்த வழக்கில் 15 வய­து­டைய ஒரு பெண் ஹனபி மத்ஹப் இற்கு மாறி தனது ‘வலி’யினைத் தானே நிய­மித்து திரு­மணம் செய்து கொண்­டதை நீதி­மன்றம் ஏற்றுக் கொண்­டி­ருக்­கின்­றது. ஏனென்றால் பராய வயதை அடைந்த ஒரு பெண் தனது திரு­ம­ணத்தை வலியின் அனு­மதி இன்றிச் செய்ய முடியும் என்­பது ஹனபி மத்­ஹபின் ஏற்­பாடு என்­கின்­றனர்.

தற்­போ­தைய முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தைத் திருத்­து­வதில் விமர்­சனப் பொரு­ளா­கி­யுள்ள திரு­மண வயது மற்றும் வலியின் சம்­மதம் தொடர்­பி­லேயே, பிரிவு 16 இனை அடிப்­ப­டை­யாகக் கொண்ட வாதத்தைச் சாதுர்­ய­மாக முன்­வைக்­கின்­றனர். அதா­வது திரு­ம­ணத்­திற்­கான வயது எல்லை இது­வென அல்­குர்ஆன் மற்றும் ஹதீஸில் குறித்த ஒரு வயது நிர்­ண­யிக்­கப்­ப­ட­வில்லை. மாறாகப் “பரா­ய­ம­டைதல்” என்ற சொற்­பி­ர­யோ­கமே பாவிக்­கப்­ப­டு­கின்­றது. மேலும் அநா­தை­க­ளுக்­கான சொத்­துக்­களை அவர்­க­ளுக்குக் கைய­ளிக்கும் போது அதனைத் தாமாக நிர்­வா­கிக்கக் கூடிய ‘அறிவு முதிர்ச்சி’ உடைய வயதை அவர்கள் அடைந்­தி­ருக்க வேண்டும் என அல்­குர்ஆன் வழி­காட்­டு­கின்­றது.

இன்று ஒரு ஆணும் பெண்ணும் 18 வய­திற்குக் குறை­வாக இருப்பின் அவர்கள் சிறு­வர்கள் என ICCPR வரை­யறை செய்­கின்­றது. அதா­வது அவர்கள் தாமாகத் தம்மை நிர்­வா­கித்துக் கொள்­ளக்­கூ­டிய தீர்­மா­னங்­களை எடுக்கும் வய­தாக 18 வயது நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. என­வேதான் வாக்­கு­ரிமை, ஒப்­பந்தம் செய்யும் உரிமை போன்­றவை 18 வயது பூர்த்­தி­யான பின்னர் தான் வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த அடிப்­ப­டையில் திரு­மணம் என்ற ஓர் ஒப்­பந்­தத்தைச் செய்­வ­தற்கு 18 வயது நிரம்பும் போதே அவர்கள் தகுதி பெறு­கின்­றனர். அவ்­வாறு 18 வயது நிரம்பும் போது ஹனபி மத்­ஹபில் அனு­ம­திக்­கப்­பட்­ட­வாறு ‘வலி’யின் சம்­மதம் இன்றி ஒரு பெண் தனது திரு­ம­ணத்தைச் செய்து கொள்ளத் தகுதி பெறு­கிறார். எனவே வெறு­மனே மத்­ஹ­பு­களின் பிரி­வினை பேசி ஒரு பெண்ணின் சுதந்­தி­ரத்தில் தலை­யிடத் தேவை­யில்லை என்று அமை­கி­றது இவர்­களின் வாதம்.

இந்த அணு­கு­முறை சரி­யா­னதா என நாம் சிந்­திக்க வேண்டும். இலங்­கையில் நடை­மு­றையில் இருக்­கின்ற முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் தங்­க­ளுக்குத் தேவை­யான மாற்­றங்­களைச் செய்து கொள்­வ­தற்கு மார்க்­கத்தில் ஓட்டை தேடும் ஒரு முயற்­சி­யா­கவே இதனை நான் பார்க்­கிறேன். இந்த விட­யத்தை நாம் எவ்­வாறு அணு­க­வேண்டும் என்­பதை விளக்­கு­வதே இக்­கட்­டு­ரையின் நோக்­க­மாகும்.

முத­லா­வ­தாக மத்­­ஹப்கள் சம்­பந்­த­மாக நோக்­குவோம். மத்­ஹப்கள் அல்­குர்­ஆ­னுக்கும் ஹதீ­ஸுக்கும் காலத்தால் பிற்­பட்­டவை. மத்­ஹ­பு­களைத் தோற்­று­வித்த இமாம்கள் தங்­க­ளுக்குக் கிடைக்­கப்­பெற்ற ஹதீஸ்­களை ஆதா­ரப்­ப­டுத்தி மார்க்கச் சட்­டங்­களை வரை­ய­றுத்துப் பின்­பற்­று­வ­தற்கு இல­கு­வாக ஆற்­றுப்­ப­டுத்­தி­ய­வர்கள். இதில் எந்த மத்­ஹபும் ஒன்­றுக்­கொன்று பார­பட்­சப்­ப­டுத்த முடி­யா­தவை. மேலும் அவை மக்­களைப் பிள­வு­ப­டுத்­து­வ­தற்­காகத் தோற்றம் பெற்­றவை அல்ல. எனவே மத்­ஹ­பு­களின் அடிப்­ப­டையில் பிள­வு­ப­டுதல் என்­பதை ஏற்க முடி­யாது. அது அல்­குர்­ஆ­னுக்கும் சுன்­னா­வுக்கும் மாற்­ற­மா­னது.
அவ்­வா­றாயின் இதனை எவ்­வாறு கையாள்­வது? அதற்குச் சம­கா­லத்தில் வாழ்­கின்ற மார்க்க அறி­ஞர்கள் அழ­கிய வழி­காட்­டலைச் சொல்லித் தரு­கி­றார்கள். அதா­வது இன்று எமக்கு எல்லா மத்­ஹ­பு­களும் கிடைத்­தி­ருக்­கின்ற சூழ்­நி­லையில் ஒவ்­வொரு சட்­டத்­திற்கும் ஆதா­ர­மாக மத்­ஹ­புகள் சாட்­டு­கின்ற ஹதீஸ்­களின் உறு­தி­யான தன்­மை­யினை அடிப்­ப­டை­யாக வைத்துக் குறித்த சட்டம் தொடர்பில் எந்த மத்­ஹபின் வழி­காட்டல் மிகச்­ச­ரி­யா­னது என்­பதைக் கண்­ட­றிய முடியும். எனவே அந்த வழி­மு­றை­யினைப் பின்­பற்றி எமது சட்­டத்­தினை அமைத்துக் கொள்ள வேண்டும்.

உதா­ர­ண­மாகத் திரு­மணம் ஒன்றில் மண­ம­களின் ‘வலி’­யி­னு­டைய சம்­மதம் கட்­டா­ய­மா­னதா என்ற கேள்­விக்கு, நான்கு மத்ஹ­பு­களில் ஹனபி மத்ஹப் தவிர்ந்த ஏனைய மூன்று மத்­ஹ­பு­களும் ‘வலி’யின் சம்­மதம் இல்­லாத திரு­மணம் வலி­தற்­றது என்ற நிலைப்­பாட்­டி­லேயே உள்­ளன. நீதி­மன்றம் ஒன்றில் நான்கு நீதி­ப­திகள் தீர்ப்பு வழங்­கு­கின்ற போது அவர்­களில் மூவ­ரு­டைய கருத்து ஒன்­றா­கவும் நாலா­ம­வரின் கருத்து வேறு ஒன்­றா­கவும் இருப்பின் மூவரின் தீர்­மானம் தீர்ப்­பாக ஏற்றுக் கொள்­ளப்­படும். அந்த வகையில் பார்த்தால் வலி­யி­னு­டைய சம்­மதம் கட்­டா­ய­மா­னது என்ற முடி­வுக்கு எம்மால் வர முடியும்.

மேலும் வலி­யி­னு­டைய சம்­மதம் அற்ற திரு­மணம் வலி­தற்­றது என்ற நிலைப்­பாட்­டிற்கு, மேலே சொன்ன மூன்று மத்­ஹ­பு­களும் ஆதா­ரப்­ப­டுத்­து­கின்ற ஹதீஸ்கள் மிக உறு­தி­யா­னவை. ஆனால் ஹனபி மத்­ஹபில் இருக்­கின்ற அனு­ம­திக்கு ஆதா­ரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் ஹதீஸ்கள் மேற் சொன்ன ஹதீஸ்­களை விஞ்சும் அள­விற்கு உறு­தி­யா­னவை அல்ல. எனவே மண­ம­களின் வலி­யி­னு­டைய சம்­மதம் திரு­மணம் ஒன்றில் கட்­டா­ய­மா­னது என்­பதே உல­மாக்­களின் வழி­காட்டல். இதுவே சரி­யான அணு­கு­மு­றை­யாகும். இதுவே அல்­குர்­ஆனின் வழியில் முஸ்­லிம்­களை ஒற்­றுமைப்படுத்­து­வ­தாக அமையும். மத்­ஹப்­களின் அடிப்­ப­டையில் முஸ்­லிம்­களைப் பிரிக்க வேண்டாம், குறிப்­பிட்ட மத்­ஹபை ஒருவர் மீது திணிக்க வேண்டாம், அவர்கள் விரும்­பி­யதை பின்­பற்றி கொள்­ளட்டும் என்­பது ஒற்­று­மைக்கு வழி­கோ­லாது. மாறாக அப்­பி­ரி­வி­னையில் அவர்­களை மேலும் நிலைத்­தி­ருக்­கவே செய்யும். மட்­டு­மல்­லாது அவை புதிய குழப்­பங்­க­ளையும் தோற்­று­வித்து விடும்.

அடுத்­தது திரு­மண வயது தொடர்­பான வாதம். 18 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள் அனை­வரும் சிறு­வர்கள் என ICCPR Act குறிப்­பி­டு­வதை அடிப்­ப­டை­யாக வைத்துச் சிறு­வர்­க­ளுக்­கான உரி­மைகள் பாது­காக்­கப்­பட வேண்டும், 18 வய­துக்கு முன்­ன­ரான திரு­ம­ணங்கள் இதற்கு தடை­யாக இருக்­கின்­றன என்று வாதிக்­கின்றார். எமது சமூ­கத்தில் இள­வ­யதுத் திரு­ம­ணங்கள் இல்­லா­ம­லாக்­கப்­பட வேண்டும், பெண்­களும் கல்வி கற்க வேண்டும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்து இல்லை. ஆனால் அதற்குச் சட்டத் திருத்தம் தீர்­வாக அமை­யுமா என்­பது பிறி­தாக விவா­திக்க வேண்­டிய ஒரு தலைப்பு.

அது அவ்­வாறு இருக்க, 18 வய­துக்குக் குறைந்­த­வர்கள் அனை­வரும் சிறு­வர்கள் என்று வகைப்­ப­டுத்திச் சட்­டத்தைத் திருத்­து­வது சரி­யான வழி­மு­றையா எனக் கேட்டால் இல்லை என்­பதே பதில். ஏனெனில் இலங்­கையின் தண்­டனைச் சட்டக் கோவையில் ஒரு பெண் பாலியல் ரீதி­யான உற­வினை ஏற்­ப­டுத்திக் கொள்ளச் சம்­மதம் வழங்­கக்­கூ­டிய வய­தாக 16 வயதைச் சட்டம் அடை­யா­ளப்­ப­டுத்­து­கி­றது. இலங்­கையில் கட்­டாய கல்வி 14 வயது வரை மட்­டுமே என மட்­டுப்­ப­டுத்தி 14 வய­துக்கு மேற்­பட்ட பிள்­ளைகள் வேலைக்குச் செல்ல அனு­மதி இருக்­கின்­றது. இவ்­வாறு இலங்­கையின் பல சட்­டங்­களில் சிறு­வர்­களின் வய­தெல்லை பல­வாறு வரை­ய­றுக்­கப்­ப­டு­கி­றது. இவை சமூ­கத்தில் இருக்­கின்ற அவ­சியம் கருதிச் செய்­யப்­பட்­டி­ருக்­கின்ற விதி­மு­றை­களே அன்றிச் சிறு­வர்கள் மீதான அடக்­கு­முறை அல்ல.

இதேபோல் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்­திலும் திரு­மண வயதை 18 என நிர்­ணயம் செய்ய முடி­யாத நிலை உள்­ளது. 18 வய­துக்கு முன்­ன­ரான திரு­ம­ணங்கள் சமூ­கத்தில் அவ­சி­ய­மா­கின்ற சூழல் நிறை­யவே இருக்­கின்­றது. இது முஸ்லிம் சமூ­கத்தில் மட்­டு­மன்றி ஏனைய சமூ­கங்­க­ளிலும் இருக்­கின்ற பிரச்­சினை. இது பற்­றியும் தனி­யான ஒரு தலைப்பில் உரை­யாட வேண்டும்.

நிற்க, வயதைப் பொதுப்­ப­டுத்திச் சிறு­வர்­களைப் பாது­காக்­கின்றோம் என்று சொல்லிக் கொண்டு புதிய குழப்­பங்­களை விளை­விப்­பதை அனு­ம­தித்தல் ஆபத்­தான பின் விளை­வு­களைத் தோற்­று­விக்கும். வயது தொடர்­பான அல்­குர்­ஆனின் வழி­காட்டல் கூட திரு­மணம் பற்­றிய வயதைக் குறிப்­பிடும் போது ‘பராய வயது’ (بلوغ – bulugh) எனவும் அநா­தை­க­ளுக்குச் சொத்­தினைக் கைய­ளிக்கும் வயது பற்றிப் பேசு­கையில் ‘அறிவு முதிர்ச்­சி­யு­டைய வயது’ (رشد – rushd) எனவும் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­னது இவை இரண்டும் வேறு வேறாக நோக்கப்பட வேண்டியவை என்ற புரிதலை எமக்குத் தருகின்றது. அன்றி இவை இரண்டையும் ஒன்றிணைத்துக் குழப்பிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

எமது முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தினுள், வேறு சில நிகழ்ச்சி நிரல்­களில் இயங்­கு­ப­வர்­களால் உட்­பு­குத்த முயற்­சிக்­கப்­ப­டு­கின்ற சில திருத்­தங்­க­ளுக்கு இட­ம­ளிக்கும் பட்­சத்தில் இறை­வனால் வெறுக்கப்படுகின்ற பல அநாச்சாரங்கள் எமது சமூகத்திலும் இலகுவாக ஊடுருவ அது வகை செய்துவிடும். இஸ்லாம் நிலைநிறுத்த முயற்சிக்கின்ற ஒழுக்கம் மிகு சமூகம் ஒன்றின் ஆணிவேராக விளங்குவது குடும்பம் என்கின்ற கட்டமைப்பு. தனிமனித சுதந்திரம், பெண்களின் உரிமை, சுதந்திரம் என்றெல்லாம் கவர்ச்சியான கதைகள் பேசிக் குடும்பம் என்ற கட்டமைப்பைச் சிதைத்து விடுவதே இந்த மறைமுக சக்திகளின் நோக்கமாகும். அதற்கு அவசியமான சட்டத் திருத்தங்களையே இன்று இந்த சக்திகள் வேண்டி நிற்கின்றன. எனவே பொதுமக்களாகிய நாம் இது தொடர்பில் விழிப்படைய வேண்டும். எங்களுடைய குரல்கள் எங்களது உரிமைகளைப் பாதுகாக்க உரக்க ஒலிக்க வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.