சகல சமூகங்களையும் அச்சுறுத்தும் சட்டம்!

0 477

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை தமது தேவை­க­ளுக்கு ஏற்­ப ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்­கங்கள் பயன்­ப­டுத்தி வந்­தி­ருப்­பதே வர­லாறு. அதே வர­லா­றையே ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மை­யி­லான தற்­போ­தைய அர­சாங்­கமும் பின்­பற்றத் தொடங்­கி­யுள்­ளதில் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

யுத்த காலப் பகு­தியில் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரா­கவும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­கவும் பிர­யோ­கிக்­கப்­பட்ட இந்த கொடூர சட்டம் இன்று, நாட்டைக் குட்­டிச்­சு­வ­ராக்­கிய அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ராகப் போரா­டிய பெரும்­பான்மை சமூக இளை­ஞர்­க­ளுக்கு எதி­ராக திரும்­பி­யுள்­ளது.

கடந்த சில நாட்­க­ளுக்கு முன்னர் கைது செய்­யப்­பட்ட அனைத்து பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்­டாளர் வசந்த முத­லிகே, கல்­வெவ சிறி­தம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்­தி­லக்க ஆகிய மூவ­ரையும் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரிக்க அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான உத்­த­ரவில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க கையெ­ழுத்­திட்­டுள்ளார். இந் நிலையில் இவர்கள் போராட்டம் மூல­மாக அர­சுக்கு எதி­ராக சதி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டார்­களா என்ற கோணத்தில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

அர­சாங்­கத்தின் இந்த நட­வ­டிக்­கை­யா­னது உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச மனித உரி­மைகள் அமைப்­புகள் மத்­தியில் கடும் விச­னத்தைத் தோற்­று­வித்­துள்­ளது.
ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைப்­பதை எந்­த­வி­தத்­திலும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது என சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் தெற்­கா­சி­யா­வுக்­கான பணிப்­பாளர் யாமினி மிஷ்ரா குறிப்­பிட்­டுள்ளார்.

போராட்­டக்­கா­ரர்­களை ஒடுக்­கு­வ­தற்கு கொடூ­ர­மான பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தைப் பயன்­ப­டுத்­து­வது இலங்கை அர­சாங்­கத்தின் புதிய உத்தி எனச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அவர், ஏற்­க­னவே கடு­மை­யான விமர்­ச­னத்­திற்­குள்­ளா­கி­யுள்ள இச் சட்­டத்தை போராட்­டக்­கா­ரர்­களை அடக்கி ஒடுக்­கு­வ­தற்­கான ஆயு­த­மாக பயன்­ப­டுத்­து­வது கண்­டிக்­கத்­தக்­கது என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

இத­னி­டையே, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­ட­மா­னது பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டைய சந்­தர்ப்­பத்தில் பிரயோகிக்க உரு­வாக்­கப்­பட்­ட­தே­யன்றி, ஆர்ப்­பாட்­டங்கள் உள்­ளிட்­ட­வற்றின் மூலம் அர­சாங்­கத்­திற்கு எதி­ராகக் கருத்து வெளிப்­பாட்டுச் சுதந்­தி­ரத்தைப் பிர­யோ­கிக்­கும்­போது நிக­ழக்­கூ­டிய குற்­றங்கள் தொடர்பில் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்­ட­தல்ல என இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. மேலும் இச்­சட்­டத்தின் பிர­யோகம் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­ட­மி­ருந்து இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லு­கையைப் பெற்­றுக்­கொள்­வதில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்றும் சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவும் இந்த விட­யத்தில் தனது கவ­னத்தைச் செலுத்­தி­யுள்­ளது. போராட்­டக்­கா­ரர்­களை பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைப்­ப­தற்கு பொலிசார் மேற்­கொண்ட தீர்­மானம் குறித்து தமக்கு தெளி­வு­ப­டுத்­தப்­பட வேண்டும் எனச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள ஆணைக்­குழு, போராட்­டக்­கா­ரர்கள் பயங்­க­ர­வா­தத்­தடைச் சட்­டத்­தின்கீழ் தடுத்­து­வைப்­ப­தற்கு ஏது­வான தீவி­ர­வாத வன்­முறை நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டார்கள் என்­ப­தற்­கு­ரிய நியா­ய­மான ஆதா­ரங்கள் சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும் என்றும் பொலிஸ் மா அதி­ப­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இவ்­வா­றுதான் கடந்த காலங்­களில் ஆயிரக் கணக்­கான தமிழ் இளை­ஞர்கள் இந்த சட்­டத்தின் கீழ் அநி­யா­ய­மாக தடுத்து வைக்­கப்­பட்­டனர். எந்­த­வித குற்­றமும் செய்­யாது சுமார் 15 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் சிறை­யி­லி­ருந்து வெளி­வந்த பலர் இன்றும் நம்­மத்­தியில் வாழ்ந்து வரு­கின்­றனர். மேலும் சுமார் 50 க்கும் மேற்­பட்ட தமிழ் இளை­ஞர்கள் இன்றும் தடுப்புக் காவலில் உள்­ளனர்.

அதே­போன்­றுதான் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் ஆயிரக் கணக்­கான முஸ்லிம் இளை­ஞர்­களும் குறிப்­பி­டத்­தக்க பெண்கள் சிலரும் இதே சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். இவர்களில் இன்று வரை சுமார் 300 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலர் பல வருடங்களின் பின்னர் பிணையிலும் குற்றச்சாட்டுக்களின்றியும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சிக்குப் பிறகு, இக் கொடூர சட்டத்தினால் சிறுபான்மை சமூகங்களே பழிவாங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு எதிராக அதனைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில் பல ஆசிரியர் தலையங்களில் இதுகுறித்து நாம் எச்சரித்திருந்தோம். அது இன்று நடந்தேறுவது கவலைக்குரியது.

தற்­போது பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­திற்கு பதி­லாக ‘தேசிய பாது­காப்புச் சட்டம்’ என்ற பெயரில் புதிய சட்­டத்தைக் கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக தற்­போது அர­சாங்கம் கூறு­கி­றது. இது அனை­வ­ரையும் ஏமாற்­று­வ­தற்­கான உத்­தி­யே­யன்றி வேறில்லை எனலாம். செப்­டெம்­பரில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 51 ஆவது கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் சர்­வ­தேச அழுத்­தங்­களை சமா­ளிக்­கவே அர­சாங்கம் இந்த புதிய கதை­களை அவிழ்த்­து­வி­டு­கி­றது.

இச் சட்­டத்­திற்கு எதி­ராக பாரிய போராட்­டங்கள் நடந்த போதிலும் எந்­த­வித மாற்­றங்­களும் நடக்­க­வில்லை. இச் சட்­டத்தை முற்­றாக நீக்­கு­வது பற்றிச் சிந்­திப்­ப­தாக முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி சப்ரி கூறி­யி­ருந்தார். எனினும் திருத்தம் என்ற பெரியல் சில வார்த்­தைகள் மாற்­றப்­பட்­ட­னவே தவிர வேறெ­துவும் ஆக்­க­பூர்­வ­மாக நடக்­க­வில்லை.
என­வேதான் இன்று இந்­நாட்டில் வாழ்­கின்ற சகல மக்­க­ளுக்கும் அச்­சு­றுத்­த­லான ஒன்­றாக மாறி­யுள்ள இந்தக் கொடிய சட்­டத்தை முற்றாக ஒழிப்பதற்கான போராட்டத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுக்க விரும்புகிறோம்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.