ரூபா 277 கோடி ஹெரோயின் விவகாரம்: கைதானவரின் வீட்டிலிருந்து பெருந்தொகை பணம் மீட்பு
2 செய்மதி தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன
277 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் தொடர்பில் பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டவரின் வீட்டினை நேற்று முன்தினம் சோதனையிட்டபோது பொலிஸ் போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால், போதைப்பொருள் விற்பனையின் போது கிடைக்கப்பெற்ற பணமாக கருதப்படும் 59 இலட்சம் ரூபா ரொக்க பணமும் இரண்டு செய்மதி தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆம் திகதி போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நாட்டுக்குள் கடத்திவரப்பட்ட 231 கிலோ 54 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ட்ரோலர் படகின் உரிமையாளர் சர்வதேச கடத்தல் வலையமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது வீட்டிலிருந்து 59 இலட்சம் ரூபாவும், இரண்டு செய்மதி தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேலும் இருவர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சந்தேகநபரை தொடர்ந்தும் பொலிஸ் காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்திவரும் நிலையில், சந்தேக நபரது வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பொருட்களை நீதிமன்றில் ஒப்படைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-Vidivelli