சல்மான் ருஷ்டி மீது கத்தித் குத்து! நடந்தது என்ன?

0 389

ஏ.ஆர்.ஏ.பரீல்

சர்ச்­சைக்­கு­ரிய எழுத்­தா­ள­ரான சல்மான் ருஷ்டி கடந்த சனிக்­கி­ழமை அமெ­ரிக்க நியூயோர்க் பிராந்­தி­யத்தில் உரை­யாற்றிக் கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென கத்­திக்­குத்­துக்­குள்­ளாகி மயி­ரி­ழையில் உயிர் தப்­பினார்.

தாக்­கு­தல்­தாரி சல்மான் ருஷ்­டியின் முகம், கழுத்து மற்றும் வயிற்­றுப்­ப­கு­தியில் 10 தட­வைகள் கத்­திக்­குத்தை நடத்­தி­யுள்ளார். இதனால் சல்மான் ருஷ்­டியின் கரத்தில் நரம்­பு­கள் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளன. அவ­ரது ஈரலும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அவர் தனது கண்ணில் ஒன்றை இழக்கும் நிலை ஏற்­ப­டலாம் என அவ­ரது முகவர் அன்றூ வைலி தெரி­வித்­துள்ளார்.

சல்மான் கடந்த வெள்­ளிக்­கி­ழமை காலை 10.45 மணிக்கு கத்தி குத்து தாக்­கு­த­லுக்­குள்­ளானார்.

தாக்­குதல் இடம்பெற்ற போது விழாவில் கூடி­யி­ருந்­த­வர்கள் மற்றும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தாக்குதல்தாரியை மடக்கிப் பிடித்­தனர். அங்­கி­ருந்த டாக்டர் ஒருவர் மற்றும் ஆத­ர­வா­ளர்கள் சல்­மா­னுக்கு முத­லு­தவி சிகிச்­சை­களை மேற்­கொண்­டனர். பொலிஸார் தாக்­குதல் தாரியை உட­ன­டி­யாக கைது செய்­தனர்.
பின்பு சல்மான் அரு­கி­லி­ருக்கும் வைத்­தி­ய­சா­லைக்கு ஹெலி­கொப்­டரில் கொண்டு செல்­லப்­பட்டார்.

சல்மான் ருஷ்­டியின் முழுப்­பெயர் அஹமட் சல்மான் ருஷ்டி. இவர் 1947 ஆம் ஆண்டு ஜூன் ­மாதம் 19 ஆம் திகதி இந்­தி­யாவின் மும்பாய் நகரில் பிறந்தார். காஷ்மீர் முஸ்லிம் குடும்­பத்தில் பிறந்த இவர் தனது 14 ஆவது வயதில் இங்­கி­லாந்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்டார். இங்­கி­லாந்தில் முதலில் ரக்பி கல்­லூ­ரியில் அனு­ம­திக்­கப்­பட்டார். படித்து பட்டம் பெற்­றதன் பின்பு சல்மான் ருஷ்டி தனது பெற்­றோ­ரிடம் இந்­தி­யா­வுக்குத் திரும்பி வந்தார். முதன் முதல் தொலைக்­காட்சி நிறு­வ­னத்தில் இணைந்து பணி­யாற்­றினார். சிறிது காலத்தில் மீண்டும் ஐக்­கிய இராஜ்­யத்­துக்குத் திரும்பி வந்தார். அங்கு அவர் நகர வர்த்­தக விளம்­பர நிறு­வ­னத்தில் இணைந்து பணி­யாற்­றினார்.

1964 இல் சல்மான் ருஷ்டி பிரித்­தா­னி­யாவின் குடி­யு­ரி­மையைப் பெற்றுக் கொண்டார். சல்மான் ருஷ்டி நான்கு தட­வைகள் திரு­மணம் செய்­துள்ளார். அவ­ரது முத­லா­ளது மனைவி க்ளெரிஸ்ஸா லுவார்ட் ஆவார். இவர்­க­ளுக்கு ஒரு மகன். அவரது பெயர் சபர். இரண்­டா­வது மனைவி ஐக்­கிய இராச்­சி­யத்தைச் சேர்ந்த எழுத்­தா­ள­ரான மெரியன் விக்கின்ஸ் என்­ப­வ­ராவார். மூன்­றா­வது மனைவி பிரித்­தா­னிய வெளி­யீட்­டா­ள­ரான எலி­சபெத் வைஸ் என்­ப­வ­ராவார். இவ­ருக்கு ஒரு மகன் பிறந்தார். அவர் மிலான் ஆவார். நான்­கா­வதாக பத்­ம­லக்ஷ்மி என்­ப­வரை திரு­மணம் செய்து தற்­போது அவ­ரையும் விவா­க­ரத்துச் செய்து கொண்­டுள்ளார்.

சல்மான் இலக்­கி­யத்தை தனது தொழி­லாகக் கொண்டார். 1975 இல் ‘கிறீமஸ்’ எனும் நாவலை வெளி­யிட்டார். இந்­நாவல் இவர் எதிர்­பார்த்த ஆத­ர­வினை மக்கள் மத்­தியில் பெற்­றுக்­கொள்­ள­வில்லை.

அடுத்து அவர் 1981 இல் ‘மிட்நைட் சில்ரன்’ எனும் நாவலை எழுதி வெளி­யிட்டார். இந்­நாவல் வாசகர் மத்­தியில் பெரும் ஆத­ர­வினைப் பெற்­றது. அதி­யுயர் விரு­தான ‘புக்கர்’ விரு­தினை இந்­நாவல் பெற்­றுக்­கொண்­டது.

1988 இல் சாத்­தானின் வச­னங்கள் (The Satanic Verses) தலைப்­பி­லான நாவ­லொன்­றினை எழுதி வெளி­யிட்டார். இந்­நாவல் இஸ்­லாத்­தையும், முஸ்­லிம்­க­ளையும் நிந்­தனை செய்யும் வகையில் அமைந்­தி­ருந்­தது. உல­க­ளா­வி­ய­ ரீ­தியில் இந்­நா­வலை எதிர்த்து முஸ்­லிம்கள் கிளர்ந்­தெ­ழுந்­தனர். தமது மத நம்­பிக்­கைக்கு சவா­லான நூலென அதனைக் கரு­தினர். இந்­தியா உட்­பட உலகின் பல நாடுகள் இந்­நா­வ­லுக்குத் தடை விதித்­தன.

1989 பெப்­ர­வ­ரியில் ஈரான் நாட்டின் ஆன்­மிகத் தலைவர் அய­துல்லாஹ் கொமேனி சல்மான் ருஷ்­டிக்கு மரண தண்­டனை உத்­த­ர­வினை வழங்­கினார். இவரை கொலை செய்­வ­தற்­கான பத்வா ஒன்­றி­னையும் வெளி­யிட்டார். சல்மான் ருஷ்­டியின் தலைக்கு 3 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் சன்­மா­ன­மாக வழங்­கு­வ­தா­கவும் அறி­வித்­தி­ருந்தார்.
இந்­நி­லையில் 2012 ஆம் ஆண்டு ஈரா­னிய மத நிறு­வ­ன­மொன்று குறிப்­பிட்ட சன்­மா­னத்­துக்கு மேல­தி­க­மாக 500,000 அமெ­ரிக்க டொலரை வழங்­கு­வ­தா­கவும் அறி­வித்­தி­ருந்தது.
‘சாத்­தானின் வச­னங்கள்’ சல்­மானின் நான்­கா­வது நாவ­லாகும். இந்­நாவல் இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், இலங்கை,சூடான் உட்­பட 12 நாடு­களில் தடை செய்­யப்­பட்­டுள்­ளது.

1989 இல் ஆகஸ்ட் 3 ஆம் திகதி மத்­திய லண்­டனில் ஹோட்­ட­லொன்றில் குண்டு வெடிப்புச் சம்­பத்­தினால் இரண்டு மாடிகள் சேதங்­க­ளுக்­குள்­ளா­கின. சல்மான் ருஷ்­டியை கொலை செய்­வ­தற்­கா­கவே அந்த குண்டு கொண்டு வரப்­பட்­டி­ருந்­தது. புத்­த­க­மொன்றில் பொருத்­தப்­பட்­டி­ருந்த இந்த குண்டு திட்­ட­மிட்­டி­ருந்த நேரத்­துக்கு முன்­பா­கவே வெடித்து விட்­டது. இந்தக் குண்­டினை அங்கு எடுத்து வந்த முஸ்டாக் மஹமூட் மசே எனும் இளைஞர் பலி­யானார். அவ­ருக்கு தெஹ்ரான் நகரில் நினை­வுத்­தூபி நிறு­வப்­பட்­டுள்­ளது.
இப்பின்னணியில்தான் ‘சாத்­தானின் வச­னங்கள்’ நாவல் வெளி­யி­டப்­பட்டு 34 வரு­டங்­க­ளுக்குப் பின்பு சல்மான் ருஷ்டி நியூயோர்க் பிராந்­தி­யத்தில் உரை­யாற்­றிக்­கொண்­டி­ருந்த போதே கத்­திக்­குத்­துக்­கி­லக்­கானார்.

ஈரான் ஆத­ர­வான ஹிஸ்­புல்லா அமைப்பைச் சேர்ந்­தவரும் ஷியா அடிப்­ப­டை­வாத கொள்­கை­களை பின்­பற்­று­பவருமான 24 வய­தான ஹாதி மதார் என்பவரே ருஷ்டி மீது தாக்குதல் நடத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது தான் நிர­ப­ராதி என்றே தெரி­வித்­துள்ளார். சாத்­தானின் வச­னங்கள் நாவல் வெளி­வந்த போது ஹாதி ­மதார் பிறந்து கூட இருக்­க­வில்லை.

தாக்­கு­தல்­தாரி நியூ­ஜேர்ஸி பெயார்­வில்வை வதி­வி­ட­மாகக் கொண்­டவர். அவர் தென் லெபனான் யாரூ­னி­லி­ருந்து ஐக்­கிய இராச்­சி­யத்­துக்கு குடி­யே­றிய லெபனான் பெற்­றோ­ருக்கு பிறந்­தவர். ஐக்­கிய இராச்­சி­யத்­திலேதான் இவர் பிறந்தார்.

சல்மான் ருஷ்டி தாக்­கப்­பட்­டமை தொடர்பில் தமது இயக்­கத்­துக்கு எதுவும் தெரி­யாது என ஹிஸ்­புல்லா அமைப்பின் பேச்­சாளர் ராய்ட்டர் செய்திச் சேவைக்குத் தெரி­வித்­துள்ளார். தாக்­கு­தல்­தாரி சல்மான் ருஷ்­டியைத் தாக்­கு­வதற்கு நீண்­ட­கா­ல­மாக திட்­ட­மிட்­டி­ருந்­துள்­ள­தாக நியூயோர்க் பொலிஸார் நீதி­மன்­றுக்குத் தெரி­வித்­துள்­ளனர்.

தாக்­கு­தல்­தாரி சல்மான் ருஷ்­டியின் உரையை கேட்­ப­தற்கு அனு­மதிச் சீட்­டி­னையும் பெற்­றி­ருந்­துள்ளார். அவர் பஸ்­வண்டி மூலமே விரி­வுரை மண்­ட­பத்திற்கு வருகை தந்­துள்ளார்.

1991 இல் ‘சாத்­தானின் வச­னங்கள்’ நூலின் ஜப்­பா­னிய மொழி­பெ­யர்ப்­பாளர் கொலை செய்­யப்­பட்டார். கத்­தியால் குத்­தப்­பட்டே இவரும் கொலை செய்­யப்­பட்டார். இத்­தாலி மொழி­பெ­யர்ப்­பாளர் தாக்­கு­தலுக்கு இலக்காகி கடு­மை­யான காயங்­க­ளுக்­குள்­ளானார்.
கத்­தி­குத்து தாக்­கு­த­லுக்­குள்­ளான எழுத்­தாளர் சல்மான் ருஷ்டி ஒரு தினத்தின் பின்பு அவ­ருக்கு பொருத்­தப்­பட்­டி­ருந்த ஒக்­சிஜன் உப­க­ரணம் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் பேசக்­கூ­டி­ய­வ­ராக இருப்­ப­தாக அவரின் பிர­தி­நிதி அன்டா வைலி தெரி­வித்­துள்ளார்.
இந்த இலக்­கிய விழாவில் சல்மானுடன் நேர்­கா­ணலை மேற்­கொள்­வ­தற்குத் தயா­ராக இருந்த ஹென்­றி ரீஸ் சிறிய காயங்­க­ளுக்­குள்­ளாகி இருக்­கிறார்.

இந்த தாக்­கு­தலின் பின்பு மற்றுமொரு சர்ச்சைக்குரிய எழுத்­தாளரான தஸ்­லிமா நஸ்ரின், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை வெளியிட்டிருந்தார்.
“சல்மான் ருஷ்டிக்கு நியூயோர்க் நகரில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக நான் அறிந்து கொண்டேன். உண்மையில் நான் மிகவும் கவலைக்குள்ளாகியுள்ளேன். அவருக்கு இப்படி நடக்குமென்று நான் போதும் நினைக்கவில்லை. அவர் மேற்கு நாடு­க­ளிலே வசித்து வரு­கிறார். அவ­ருக்கு 1989 முதல் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. அவர் தாக்­கப்­பட்­டா­ரென்றால் இஸ்­லாத்தை விமர்­சிக்கும் எவரும் தாக்­கு­த­லுக்­குள்­ளா­கலாம். நான் மிகவும் கவ­லை­யுடன் இருக்­கிறேன்” என தஸ்­லிமா நஸ்ரின் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.