குருநாகல் நகரில் மாட்டு இறைச்சி வியாபாரத்துக்கான தடை நீங்கியது

0 328

(குரு­நாகல் நிருபர்)
குருநாகல் மாந­கர சபைக்­குட்­பட்ட பிர­தே­சத்தில் மாட்­டி­றைச்சி வியா­பாரம் செய்­வ­தற்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை நீக்­கப்­பட்­டுள்­ளது.
குரு­நாகல் மாந­கர சபை எல்­லைக்குள் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக மாட்­டி­றைச்­சிக்­கடை நட­த்­து­வ­தற்கும் விற்­பனை செய்­வ­தற்கும் அனு­மதி மறுக்­கப்­பட்டு வந்­த­நி­லையில், தடையை நீக்குவது தொடர்­பான பிரே­ரணை கடந்த திங்­க­ளன்று மாநகர சபையில் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது சபை­யி­லி­ருந்த உறுப்­பி­னர்­களால் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­­பட்­டது.

மாந­கர சபையின் அமர்வு கடந்த 15 ஆம் திகதி மாந­கர சபைத் தலைவர் துஷார சஞ்­சீவ தலை­மையில் சபை கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. இதன் போது மாந­கர சபை உறுப்­பினர் அஷா­ருத்தீன் முஈ­னுத்தீன் மாட்­டி­றைச்­சிக்­கடை தொடர்பாக பிரே­ர­ணையை முன்­வைத்து உரை நிகழ்த்­தினார்.

அவர் அங்கு உரை­யாற்­று­கையில், “கடந்த நான்கு வரு­டங்­க­ளாக குரு நாகல் மாந­கர எல்­லைக்குள் மாட்­டி­றைச்­சிக்­கடை நட­த்­து­வ­தற்கும் விற்­பனை செய்­வ­தற்கும் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. அந்த சந்­தர்ப்­பத்தில் நாட்டில் ஆங்­காங்கே திட்­ட­மிட்டு ஒரு இனத்தின் மீது வீண் பழி சுமத்­தப்­பட்டு பொரு­ளா­தா­ரமும் நசுக்­கப்­பட்­டது. இந்த மாட்­டி­றைச்­சிக்­க­டைகள் மூடப்­பட்­டதும் இன­வாத பின்­ன­ணியை கொண்­ட­தாகும். இவ்­வாறு மாட்­டி­றைச்சி விற்­பனை குரு­நாகல் மாந­கர எல்­லைக்குள் தடை செய்­யப்­பட்­டதால் இதன் மூலம் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் பலர் பாதிக்­கப்­பட்­டனர். தற்­பொ­ழுது மக்கள் நிலை­மை­களை புரிந்து செயல்­ப­டு­வ­தோடு முன்­பி­ருந்த நிலை­களும் சீர­டைந்து வரு­கி­றது. எனவே இந்த சந்­தர்ப்­பத்தில் இந்த சபையால் தடை செய்­யப்­பட்ட மாட்­டி­றைச்­சிக்­க­டை­களை மீண்டும் திறப்­ப­தற்கு அனு­மதி வழங்க வேண்டும் என வேண்டிக் கொள்­கிறேன்” என்றார்.

இரண்டு முஸ்லிம் உறுப்­பி­னர்கள் உட்­பட 21 உறுப்­பி­னர்­களைக் கொண்ட மாந­கர சபையில் அன்­றைய தினம் 18 உறுப்­பி­னர்கள் சமுகமளித்திருந்தனர். இதற்கமைய உறுப்பினர்களின் ஆட்சேபனையின்றி மாட்டிறைச்சி கடைகள் திறக்கப்பட வேண்டும் எனக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.