கட்டார் நிதியத்தின் தடையினை ஜனாதிபதி இதுவரை நீக்காததேன்?

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி

0 337

(எம்.வை.எம்.சியாம்)
தடை­செய்­யப்­பட்ட அமைப்­பு­களில் பட்­டி­ய­லி­லி­ருந்து பல்­வேறு அமைப்­பு­களின் தடை நீக்­கப்­பட்­டுள்ள போதும் கட்டார் நிதி­யத்தின் மீதான தடையை ஜனா­தி­பதி இது­வரை நீக்­கா­தது ஏன்? என கேள்வி எழுப்­பி­யுள்ள கொழும்பு மாவட்ட ஐ.ம.ச. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், குறித்த தடையை நீக்குவதை இன­வா­திகள் தடுக்­கி­றார்­களா என்று சந்­தேகம் எழு­வ­தாக தெரி­வித்­துள்ளார்.

நேற்­று­முன்­தினம் எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பின்­போது கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். இதன்­போது, அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

கடந்த காலங்­களில் முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வினால் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களை முன்வைத்து பல அமைப்­புகள் மற்றும் தனி­ந­பர்கள் மீது தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன் கார­ண­மாக நாட்­டிற்கு கிடைக்­க­ப்பெற்ற உத­விகள் மற்றும் நன்­கொ­டைகள் நிறுத்­தப்­பட்­டன.

இந்­நி­லையில் அண்­மையில் நாட்டில் தடை செய்­யப்­பட்ட அமைப்­பு­களின் பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த குறிப்­பிட்ட சில அமைப்­புகள் மற்றும் தனி­நபர் மீதான தடை­களை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க நீக்­கி­யுள்ளார்.

இருப்­பினும் முன்னர் தடை­செய்­யப்­பட்­டி­ருந்த கட்டார் நிதி­யத்தின் தடை நீக்­கப்­ப­ட­வில்லை. கட்டார் நிதி­யத்தின் தடையை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க இது­வ­ரையில் நீக்­கா­தது ஏன்?

ரணில் விக்­ர­ம­சிங்க ஜனா­தி­பதி பொறுப்பை ஏற்க முன்னர் கட்டார் நிதி­யத்தின் மீதான தடையை நீக்­கு­வ­தாக அந்­நாட்டு தூது­வ­ரிடம் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். எனினும், அவர் ஜனா­தி­ப­தி­யான பின்னும் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் கட்டார் நிதி­யத்தின் குறித்த தடையை நீக்­க­வில்லை. இதனை இன­வா­திகள் தடுக்­கி­றார்­களா? என்ற சந்­தேகம் எழு­கி­றது.

எனினும் தடை­செய்­யப்­பட்­டுள்ள பட்­டியலில் எஞ்­சி­யுள்ள அமைப்­புகள் மற்றும் தனி­ந­பர்கள் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்­ப­தற்கு எவ்­வித ஆதா­ரங்­களும் இல்லை. மேலும் பரிந்­து­ரைக்­கப்­பட்ட நடை­மு­றை­களை பின்­பற்­றாது அவர்­களின் பெயர்கள் அப்­பட்­டி­யலில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன.

எனவே ஜனா­தி­பதி குறித்த தடை செய்­யப்­பட்ட பட்டியலில் பெயரிடப்பட வேண்டியவர்கள் தவிர்ந்த ஏனைய அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் நிறுவனங்கள் சுய மீள் மதிப்பீடு மற்றும் தடை நீக்கம் செய்யும் செயல்முறை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.