யெமன் அரசுக்கும் ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சுவீடனில் ஒருவாரமாக ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினரிடையே நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஹெளதி கிளர்ச்சியாளர்களின் பிடியிலுள்ள சனா விமான நிலையத்தை மறுபடியும் திறப்பதற்கு யெமன் அரசு கடந்த வாரம் சம்மதம் தெரிவித்திருந்தது.
ஆனால் அங்கு வரும் விமானங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னரே சனா விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படும் என்ற யெமன் அரசின் முன்மொழிவு கடந்த வாரம் ஹௌதி கிளர்ச்சியாளர்களால் நிராகரிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளையடுத்து ஹௌதி கிளர்ச்சியாளர்கள் யெமன் அரசின் இந்த முன்மொழிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli