மறைந்த முன்னாள் அமைச்சர் மசூரின் வீட்டில் திருட்டு

0 348

(எம்.எப்.எம்.பஸீர்)
மறைந்த முன்னாள் அமைச்சர் நூர்தீன் மசூரின் புத்­தளம் – நாக­வில்லு பகு­தியில் உள்ள வீட்­டி­லி­ருந்து சுமார் 160 இலட்சம் ரூபா வரை மதிப்­புள்­ள­தாக நம்­பப்­படும் பணம் மற்றும் நகைகள் திரு­டப்­பட்­டுள்­ளன.

இது தொடர்பில் சிறப்பு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக புத்­தளம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

பல வர்த்­த­கங்­க­ளுக்கு உரி­மை­யாளர் என கூறப்­படும் முன்னாள் அமைச்சர் நூர்தீன் மசூரின் மறை­வுக்கு பின்னர், குறித்த வீட்டில் அவ­ரது மனைவி வசித்து வந்­துள்ள நிலையில், அவர் வீட்­டி­லில்­லாத சமயம் இந்த திருட்டு முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ள­தாக பொலிஸார் கூறினர்.

கள­வா­டப்­பட்­டுள்ள பொருட்­களில், தங்க நகைகள் மற்றும் பிற பொருட்­களை விட, 3 இலட்­சத்து 60 ஆயிரம் ரூபா பணமும் உள்­ள­டங்­கு­வ­தாக தெரி­விக்கும் பொலிஸார், அந்த பணம் வைக்­கப்­பட்­டி­ருந்த 25 இலட்சம் ரூபா வரை பெறு­ம­தி­யான பெட்­டகம் உடைக்­கப்­பட்­டுள்­ளதால் அதற்கு பெரும் சேதம் ஏற்­பட்­டுள்­ள­தாக கூறினர்.

எவ்­வா­றா­யினும் பொலிஸார், இத்­தி­ருட்­டுடன் தொடர்­பு­டை­ய­தாக சந்­தே­கிக்கும் நாக­வில்லு பகு­தியைச் சேட்ந்த 22 வய­துக்கும் 30 வய­துக்கும் இடைப்­பட்ட 10 பேரை அடை­யாளம் கண்­டுள்­ள­தா­கவும், அவர்­களைக் கைது செய்ய நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன. களா­வ­டப்­பட்ட பொருட்­களில் சில மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பொலிசார், சந்தேக நபர்களில் பலர் போதைப் பொருளுக்கு அடிமையானோர் என கூறினர்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.