ஹஜ் முகவர்கள் குறித்து எழுத்துமூலம் முறையிடுக

0 310

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரையை பூர்த்தி செய்து கொண்டு நாடு திரும்­பி­யுள்ள யாத்­தி­ரி­கர்கள் தங்­க­ளது பயண ஏற்­பா­டு­களைச் செய்த முக­வர்கள் தொடர்பில் முறைப்­பா­டு­களை எழுத்து மூலம் அல்­லது மின்­னஞ்சல் மூலமே முன்வைக்க முடியும்.

தொலை­பேசி மூலம் முன்­வைக்­கப்­படும் முறைப்­பா­டுகள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது என அரச ஹஜ் குழு தெரி­வித்­துள்­ளது.

ஹஜ் யாத்­திரை மேற்­கொண்­ட­வர்­களில் சிலர் தொலை­பே­சி­யூ­டாக ஹஜ்­மு­க­வர்கள் தொடர்பில் முறைப்­பா­டு­களை முன்­வைத்து வரு­கின்­றனர். சவூதி அரே­பி­யாவில் தங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்­வ­தாக உறு­தி­ய­ளித்த ஹோட்­டல்­களில் மாற்றம், உடன்­ப­டிக்­கைக்கு மாறாக அஸீ­ஸி­யாவில் தங்க வைக்­கப்­பட்­டமை மற்றும் தம்­ப­தி­க­ளுக்கு ஹோட்­டலில் தனி­யறை வழங்­கு­வ­தாக அளித்த உறுதி மறுக்­கப்­பட்­டமை போன்ற முறைப்­பா­டுகள் தொலை­பே­சி­யூ­டா­கவே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன என அரச ஹஜ்­கு­ழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரி­வித்தார்.

முறைப்­பா­டுகள் எழுத்து மூலம் அல்­லது மின்­னஞ்சல் மூலம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.