ரணிலின் வாக­னத்தில் அதா! வரிசையில் காத்திருக்கும் ஹக்கீமும் ரிஷாடும்

0 432

எஸ்.என்.எம்.சுஹைல்

சந்­தி­ரிக்கா அர­சாங்­கத்தில் கம்­பீ­ர­மாக இருந்­த­வர்தான் முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப். இதன்­போது, அவ­ருக்கு எதி­ராக ரணில் தலை­மை­யி­லான ஐ. தே. க நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வந்து அவ­மா­னப்­ப­டுத்­தி­யது. இந்த சூழ்­நி­லையில் மனம்­புண்­பட்­ட­வ­ராக உணர்ச்­சி­வ­சப்­பட்ட ஒரு சூழ்­நி­லையில் அஷ்ரப் ‘ரணில் சார­தி­யாக இருக்­கும்­வரை ஐ. தே. க. என்ற வாக­னத்தில் ஏற­மாட்டேன்’ என்று கூறி­யி­ருந்தார்.

எனினும் அதே முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி 2000 ஆண்­டுக்கு பின்னர் ரணில் சார­தி­யாக இருந்த ஐ.தே.க. என்ற வாக­னத்தில் ஏறி பல முறை பய­ணித்­த­மை­யெல்லாம் எல்­லோரும் அறிந்த விட­யம்தான். முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து பிரிந்த கட்­சி­கள்தான் தேசிய காங்­கி­ரசும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரசும். இது­போக, ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்­பும்­கூட மு.கா.விலி­ருந்து பிரிந்­த­வர்­க­ளது கட்­சியே. அஷ்ரப் உரு­வாக்­கிய நுஆ கட்­சியை தற்­போது வைத்­தி­ருப்­பவர் அசாத் சாலி. அந்த கட்­சியும் அஷ்­ரபின் கட்­சிதான்.

முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், நுஆ என்­பன பல தடவை ரணிலின் வாக­னத்தில் ஏறி­யி­றங்­கி­ருக்­கின்­றன. அதா­வுல்லாஹ் முஸ்லிம் காங்­கி­ரஸில் இருக்­கின்­ற­போது, 2001 ஆம் ஆண்டு ரணில் அர­சாங்­கத்தில் ஐ.தே.க. எனும் வாக­னத்தில் ஏறி பய­ணித்­த­வர்தான். என்­றாலும், ரணிலின் வாக­னத்­தி­லி­ருந்து 2004 ஆம் ஆண்டு முத­லா­வ­தாக இறங்­கி­ய­வரும் அதா­வுல்­லாஹ்தான்.

பின்னர் சந்­தி­ரிக்­கா­வுடன் பய­ணத்தை ஆரம்­பித்த அதா, ராஜ­பக்­சாக்­களின் வாக­னத்தில் தொடர்ச்­சி­யாக தனக்­கான இருக்­கையை முன்­ப­தி­வு­செய்­து­கொண்டே அர­சியல் பய­ணத்தை மேற்­கொண்டார். தேசிய காங்­கிரஸ் என்ற கட்­சியை ஆரம்­பித்த பின்னர் அதா­வுல்லாஹ் ரணிலின் வாக­னத்தில் ஏற­வில்லை.

இந்த சந்­தர்ப்­பத்­தி­லெல்லாம், ‘ரணில் சார­தி­யாக இருக்­கும்­வரை ஐ. தே. க. என்ற வாக­னத்தில் ஏற­மாட்டேன்’ என மறைந்த தலைவர் அஷ்ரப் சொன்னார், நானும் ரணிலின் வாக­னத்தில் ஏற­மாட்டேன் என்ற பிர­சா­ரத்தை தீவி­ரப்­ப­டுத்­திக்­கொண்டார்.

ராஜ­பக்­சாக்­க­ளுக்கு 2015 இல் ஒரு சரிவு ஏற்­ப­டு­கின்­றது. அவ்­வாண்டில் இடம்­பெற்ற பொதுத் தேர்­தலில் தனது ஆச­னத்­தையும் இழந்தார் அதா­வுல்லாஹ். பின்னர் பொது­ஜன பெர­முன என்ற கட்சி நாட்டில் காலூன்­றிய 2018 ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சி தேர்­த­லின்­போது அதா­வுல்லாஹ் தனது சொந்த கட்­சி­யான தேசிய காங்­கி­ரஸை முதன் முறை­யாக தேர்தல் களத்தில் குதிரை சின்­னத்தில் கள­மி­றக்­கினார். ராஜ­பக்­சாக்­களின் பொது­ஜன பெர­மு­னவின் தாம­ரை­மொட்டு சின்­னத்­திற்கு நாடு­மு­ழு­வதும் எப்­படி பெரும் ஆத­ரவு கிட்­டி­யதோ அதே போன்று அதா­வுல்­லாஹ்வின் கோட்­டை­யான அக்­க­ரைப்­பற்றில் இரு உள்­ளூ­ராட்சி சபை­க­ளிலும் அத்­தனை வட்­டா­ரங்­க­ளிலும் வெற்­றி­பெற்று தனது மீள் வரு­கைக்­கான கதவை திறந்­து­கொள்­கிறார். இதன்­போது, மாவட்­டத்தின் ஏனைய உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிலும் ஓர­ளவு ஆச­னங்­களைப் பெற்­றுக்­கொண்டார்.

கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது ஆத­ர­வாக பிர­சாரம் செய்­தவர் அதா­வுல்லாஹ். எனினும், பொதுத் தேர்­த­லின்­போது தனது கட்­சி­யான தேசிய காங்­கி­ரஸின் குதிரை சின்­னத்தில் தனித்து போட்­டி­யிட்டு திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் ஒரு ஆச­னத்தை பெற்று பாரா­ளு­மன்­றத்­திற்கு மீள் பிர­வே­ச­மானார். இருந்­தாலும் கடந்த மார்ச் மாத­ம­ளவில் கோத்­தாவின் அர­சாங்கம் ஆட்டம் காண ஆரம்­பித்­தது. விமல் வீர­வங்ச, கம்­மன்­பில போன்ற இன­வாத, கடும்­போக்­கு­வா­தி­களின் தலை­மையில் 11 அர­சியல் கட்­சிகள் அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகி சுயா­தீ­ன­மாக இயங்க முடிவு செய்­தன. இந்த கூட்­ட­ணியில் அதா­வுல்­லாவும் இருந்தார். எதிர்க்­கட்­சியில் முதன்­மு­றை­யாக அவர் அமர்ந்தார்.

மக்கள் புரட்­சி­யை­ய­டுத்து நாட்­டை­விட்டு தப்­பி­யோ­டிய கோத்­தா­பய ராஜ­பக்ச கடந்த ஜூன் 14ஆம் திகதி ஜனா­தி­பதி பத­வி­யி­ருந்து வில­கினார். இந்­நி­லையில் எஞ்­சிய ஜனா­தி­பதி பதவிக் காலத்­துக்­காக பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற இடைக்­கால தெரி­வின்­போது ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வ­ளித்தார் தேசிய காங்­கிரஸ் தலைவர் அதா­வுல்லாஹ்.

கடந்த ஜூன் 9 வரை ரணில் சார­தி­யாக இருந்த வாக­னத்தில் ஏறாத கட்­சி­யாக தேசிய காங்­கிரஸ் இருந்­து­வந்­தது. என்­றாலும், ரணில் ஜனா­தி­ப­தி­யான பின்னர் ரணி­லுக்கு ஆத­ர­வ­ளித்த தேசிய காங்­கி­ரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ் ரணிலின் வாக­னத்தில் முதல் ஆளாய் ஏறி ஜன்­ன­லோர இருக்­கை­யென்றை தன­தாக்கிக் கொண்டார்.
இந்­நி­லையில், சர்­வ­கட்சி அர­சாங்­கத்தை அமைப்­பது தொடர்பில் அர­சியல் கட்­சி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல்கள் கடந்த சில தினங்­க­ளாக ஜனா­தி­பதி மாளி­கையில் இடம்­பெ­று­கின்­றது.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன மற்றும் ஆளும் கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்சித் தலை­வர்கள் மற்றும் உறுப்­பி­னர்கள் முதல் சுற்றுக் கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்­ட­துடன் இரண்­டா­வது கலந்­து­ரை­யாடல், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸுடன் இடம்­பெற்­றது.

மூன்­றா­வது கலந்­து­ரை­யாடல் தேசிய காங்­கி­ர­ஸுடன் இடம்­பெற்­ற­தோடு, அதன் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எல்.எம். அதா­வுல்லா உள்­ளிட்ட குழு­வினர் இதில் கலந்­து­கொண்­டனர்.

ஏற்­க­னவே சர்­வ­கட்சி அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கு ஆத­ர­வு­கோரி ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தேசிய காங்­கிரஸ் தலை­வ­ருக்கும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கடிதம் மூலம் அழைப்பு விடுத்­தி­ருந்தார்.

ஜனா­தி­ப­தியின் தேசிய சர்­வ­கட்சி முன்­னெ­டுப்பு அழைப்­பிற்­கான பதிலை கடிதம் முலம் ஜனா­தி­ப­தி­யிடம் இதன்­போது கைய­ளித்த தேசிய காங்­கிரஸ் தலைவர், நாட்டில் தற்­போது நிலவும் சமூக பொரு­ளா­தார நெருக்­கடி நிலை­மை­களை தீர்ப்­ப­தற்­கான சர்­வ­கட்சி அர­சாங்­கத்தில் இணைந்து ஒத்­து­ழைப்பு வழங்­கு­தற்கு ஆத­ர­வினை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். இச் சந்­திப்­பின்­போது தேசிய காங்­கி­ரஸின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஏ.எல்.எம் அதா­உல்லா, அக்­கட்­சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஏ. உது­மா­லெப்­பையும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

நாடு எதிர் கொள்­கின்ற சம­காலப் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­வ­தற்கு சகல இனங்­க­ளுக்­கு­மான சமூக பொரு­ளா­தார அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யும் வகை­யி­லான புதிய அர­சி­ய­ல­மைப்­பினை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்க வேண்­டிய தருணம் இது என்­பதன் அவ­சி­யத்தை தேசி­ய­காங்­கிரஸ் இச்­சந்­திப்பின் போது வலி­யு­றுத்­தி­யது.
இந்த கலந்­து­ரை­யா­டலில் பிர­தமர் தினேஷ் குண­வர்­தன, ஜனா­தி­ப­தியின் செய­லாளர் சமன் ஏக்­க­நா­யக்க, ஜனா­தி­ப­தியின் மேல­திக செய­லாளர் சட்­டத்­த­ரணி சமிந்த குல­ரத்ன மற்றும் பலர் கலந்­து­கொண்­டனர்.

மு.கா.
இத­னி­டையே, நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு தீர்வு காண்­ப­தற்­காக ஜனா­தி­பதி மேற்­கொள்ளும் சிறந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்க்­கட்­சியில் அனைத்துத் தரப்­பி­ன­ரோடும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தமது ஒத்­து­ழைப்பை வழங்க தயா­ராக இருக்­கின்­றது. அத்­துடன் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண ஒன்­றி­ணைந்து வேலைத்­திட்­டங்­களை அமைப்­பது தொடர்பில் ஜனா­தி­ப­தியின் கடி­தத்­துக்கு சாத­க­மான பதிலை அனுப்­பு­வ­தற்கு எதிர்­பார்க்­கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார்.

மேலும், அனைத்து தரப்­பி­ன­ரதும் யோச­னை­களை பெற்றுத் தரு­மாறு இப்­போதும் அவர் கடிதம் மூலம் எமக்குத் தெரி­வித்­துள்ளார். அவ­ரது வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க அவ­ரது ஆலோ­ச­னை­க­ளுடன் மேலும் சில விட­யங்­களை உள்­ள­டக்கி நாட்டை முன்­னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் நாம் எமது யோச­னை­களை அவ­ருக்குத் தெரி­விக்­க­வுள்ளோம்.

அதன் பின்னர் எதிர்க்­கட்­சியில் அனைத்து தரப்­பி­ன­ரி­டமும் பேச்­சு­வார்த்தை நடத்தி அதற்­கான உரிய செயற்­பா­டு­களை நாம் மேற்­கொள்வோம்.

நாம் கட்சி ரீதி­யாக ஜனா­தி­ப­தியின் கடி­தத்­திற்குப் பதில் வழங்கத் தயா­ராக வுள்ளோம். அதன் பின்னர் எதிர்க்­கட்­சியில் ஏனைய கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு ர்த்தை நடத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு தீர்வு பெற்றுக் கொள்வதில் ஒத்துழைப்பு வழங்குவோம்.

அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதி மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும். அதேவேளை எமது கட்சியின் ஒத்துழைப்பையும் நாம் வழங்குவோம் என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அத்­துடன், நாட்டின் தற்­போ­தைய நெருக்­க­டி­யான சூழலில் அனைத்துக் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து, பொது­வான வேலைத்­திட்­டத்தின் கீழ் செயற்­ப­டு­வ­தற்கு ஜனா­தி­ப­தி­யினால் விடுக்­கப்­பட்ட அழைப்­புக்கு சாத­க­மான பதிலை அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் வழங்­கி­யுள்­ள­தாக, கட்­சியின் செய­லாளர் எஸ்.சுபைர்தீன் தெரி­வித்­துள்ளார்.

ஆக, சர்­வ­கட்சி அர­சாங்­கத்தில் பாரா­ளு­மன்றில் அங்­கம்­வ­கிக்கும் முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்­டணி என்­ப­னவும் இடம்பெறலாம் என இப்போதைக்கு எதிர்பார்க்கலாம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.