தேசபந்து மீதான தாக்குதல்: இஸ்மத் மௌலவி நாளை அடையாள அணிவகுப்புக்கு

0 280

(எம்.எப்.எம்.பஸீர்)
மேல் மாகா­ணத்­திற்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேச­பந்து தென்­னகோன் மீது முன்­னெ­டுக்­கப்­பட்ட தாக்­குதல் தொடர்பில், மக்கள் போராட்­டங்­களில் முன்­னணி போராட்டக்கார­ராக திகழ்ந்த இஸ்மத் மெளவி கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

குறித்த தாக்­குதல் தொ­டர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­னரால் கடந்­த­வாரம் கைது செய்­யப்­பட்ட அவர், எதிர்­வரும் 5 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அன்­றைய தினம் அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ளார்.

அத்­துடன், குறித்த தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் மேலும் இரு சந்­தேக நபர்­களைக் கைது செய்­துள்ள சி.சி.டி.யின் அதி­கா­ரிகள் அவர்­களை நேற்று ( 3) நீதி­மன்றில் ஆஜர் செய்­தனர். இந் நிலையில் அவர்­களும் அடை­யாள அணி­வ­குப்­புக்­காக நாளை 5 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந் நிலையில் இந்த சம்­பவம் தொடர்பில் இது­வரை 14 சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக நேற்று நீதி­மன்­றுக்கு அறி­வித்த பொலிஸார் அவர்­களில் 11 பேர் பிணையில் இருப்­ப­தாக அறி­வித்­தனர்.

இஸ்மத் மெள­லவி உள்­ளிட்ட சந்­தேக நபர்­க­ளுக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் மன்றில் ஆஜ­ராகும் நிலையில், இஸ்மத் மெளவி , தேச­பந்து மீது தாக்­குதல் நடாத்­த­ப்படும் போது அப்­ப­கு­தியில் இருந்­தமை உண்மை எனவும் எனினும் அவ­ருக்கும் தாக்­கு­த­லுக்கும், அல்­லது தாக்­குதல் நடாத்­தி­யோ­ருக்கும் எவ்­வித தொடர்பும் இல்லை எனவும் வாதிட்டு பிணை கோரி­யி­ருந்தார். அத்­துடன் பொலிஸார் அடை­யாள அணி­வ­குப்பை ஒரு­வரை விளக்­க­ம­றி­யலில் வைப்­ப­தற்­கான ஆயுதமாக பயன்படுத்தி, குற்றவியல் சட்டத்தின் 124 ஆவது அத்தியாயத்தை தவறாக பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.