கைதுகளால் உதவிகளை இழப்பதற்கு நேரிடலாம்

அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டுகிறது உலமா சபை

0 320

போராட்­டத்தில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­ட­வர்கள் நியா­ய­மற்ற முறையில் குறி­வைக்­கப்­பட்டு கைது செய்­யப்­ப­டு­கி­றார்கள் என்ற குற்­றச்­சாட்­டுகள் வலுப்­பெற்­றி­ருக்கும் நிலையில் ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளுக்கு மாற்­ற­மாக அரச அதி­கா­ரிகள் செயற்­ப­டு­வதன் கார­ண­மாக சர்­வ­தே­சத்தின் உத­வி­யையும், ஒத்­து­ழைப்­பையும் நாம் இழக்க நேரி­டலாம் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தெரி­வித்­துள்­ளது.

ஜன­நா­யக ரீதியில் நடை­பெற்ற போராட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து நடை­பெறும் கைது சம்­பந்­த­மாக ஜம்­இய்­யாவின் நிலைப்­பாடு குறித்த ஊடக அறிக்­கையை அதன் பொதுச் செய­லாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் நேற்று வெளி­யிட்­டி­ருந்தார்.
குறித்த அறிக்­கையில், கடந்த காலங்­களில் நமது நாட்டில் ஏற்பட்ட பொரு­ளா­தார மற்றும் அர­சியல் நெருக்­க­டி­களின் கார­ண­மாக இந்­நாட்டு மக்கள் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு தீர்வு கோரியும், அர­சியல் முறை­மையில் மாற்­றத்தை வேண்­டியும் முழு நாட்­டிலும் மக்கள் பல மாதங்­க­ளாக ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளுக்­கேற்ப தமது ஆதங்­கங்­களை வெளிப்­ப­டுத்தி வந்­தனர். இதன் விளை­வாக அர­சியல் ரீதி­யாக சில மாற்­றங்கள் ஏற்­பட்­டாலும் இன்னும் பல மாற்­றங்கள் ஏற்­பட வேண்­டு­மென்று நாட்டுப் பிர­ஜைகள் எதிர்­பார்ப்­ப­தோடு, பொரு­ளா­தார ரீதி­யான நெருக்­க­டிக்கு சரி­யான தீர்வைப் பெறா­ததன் கார­ண­மாக தொடர்ந்து போரா­டியும் வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் போராட்­டத்தில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­ட­வர்கள் நியா­ய­மற்ற முறையில் குறி­வைக்­கப்­பட்டு கைது செய்­யப்­ப­டு­கி­றார்கள் என்று பௌத்த, கிறிஸ்­தவ மற்றும் ஏனைய மதத் தலை­வர்கள், சட்­டத்­த­ர­ணிகள், விசேட வைத்­திய நிபு­ணர்கள், ஏரா­ள­மான சிவில், சமூக அமைப்­புக்கள் மற்றும் வெளி­நாட்டு மனித உரிமை அமைப்­புக்கள் தமது அதி­ருப்­தி­யையும் எதிர்ப்­பையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

தற்­போது நமது நாடு எதிர்­நோக்­கி­யி­ருக்கும் பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து வெளி­வர சர்­வ­தே­சத்தின் உத­வியும் ஒத்­து­ழைப்பும் மிக அவ­சி­ய­மாக இருக்­கின்ற இந்­நி­லையில் ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளுக்கு மாற்­ற­மாக அரச அதி­கா­ரிகள் செயற்­ப­டு­வதன் கார­ண­மாக சர்­வ­தே­சத்தின் உத­வி­யையும், ஒத்­து­ழைப்­பையும் நாம் இழக்க நேரி­டலாம்.
ஆகவே, இந்­நாட்டின் அரச அதி­கா­ரிகள் மற்றும் பொறுப்பில் உள்­ள­வர்கள் ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளையும் சர்­வ­தேச ரீதி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட மனித அடிப்­படை உரி­மை­க­ளையும் பேணி நேர்­மை­யா­கவும் நியா­ய­மா­கவும் நடந்து கொள்­ளு­மாறும், இப்­போ­ராட்­டத்­திற்குக் கார­ண­மாக இருக்­கின்ற அனைத்து விட­யங்­க­ளுக்கும் வெகு சீக்­கி­ர­மாக தீர்வு வழங்­கு­மாறும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வின­ய­மாக வேண்டிக் கொள்­கின்­றது.

நம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இந்நிலை அவசரமாக நீங்கி, நம் தாய்நாட்டுக்கும் முழு உலகுக்கும் சுபீட்சமும் அபிவிருத்தியும் ஏற்பட வேண்மென்றும், இந்நாட்டில் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டுமென்றும்நாம் பிரார்த்தனை செய்கின்றோம் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.