ஊழலற்ற அரசியல் தலைவர்களை உருவாக்குவது யார் பொறுப்பு?

0 668

சட்டத்தரணி கிப்சியா செய்னுல் ஆப்தீன்

இன்­றைய மக்கள் மற்றும் இளம் தலை­மு­றை­யினர் எதிர்­பார்க்கும் பாரி­ய­ள­வி­லான அர­சியல் மாற்றம் அல்­லது அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்கள், தற்­போது System change (முறைமை மாற்றம்) என வர்­ணிக்­கப்­படும் பயன் தரும் மாற்­றங்­க­ளா­னது சிறந்த அர­சியல் தலை­வர்கள் மூலமும் ஜன­நா­யக ரீதி­யி­லான தேர்­தலின் மூல­முமே இலங்கை நாட்டில் கொண்டு வரப்­பட முடியும். System change இன்­றைய தலை­வரை விரட்­டி­ய­டிப்­பது மாத்­தி­ர­மல்ல ஊழல் நிறைந்த தன்­னலம் பேணும் அர­சியல் தலை­மை­களை களை­யெ­டுத்து புதிய தலை­மைத்­து­வத்தை தெரிவு செய்­வதில் பெரிதும் தங்­கி­யி­ருக்­கி­றது.
System change எனப்­படும் அர­சியல் அமைப்­புசார் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வல்ல சக்­தியை ஜன­நா­யக நாடு என்ற ரீதியில் மக்கள் இறை­மையின் கீழ் ஒவ்­வொரு குடி­ம­கனும் கொண்­டுள்ளோம். இருப்­பினும், செயற்­பாட்டு ரீதி­யாக மக்கள் குறித்த மாற்­றத்தில் பங்கு பற்ற முடி­யாத அவல நிலை காணப்­ப­டு­வ­துடன் அதற்­கான தகுந்த தீர்­வா­கவே பிர­தி­நி­தி­களை பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­பியும் வைத்­துள்ளோம், நமக்கு தேவை­யான System change இனை பாரா­ளு­மன்­றத்­தினால் மாத்­தி­ரமே ஏற்­ப­டுத்திக் கொள்ளக் கூடிய துர்ப்­பாக்­கிய நிலையில் நாங்கள் காணப்­ப­டு­கிறோம். பாரா­ளு­மன்­ற­மா­னது மக்­களின் இறை­மையை செயற்­ப­டுத்தும் மன்று என்ற வகையில் மக்கள் உணர்ச்­சி­வ­ச­மா­கி­யுள்ள இந்த சூழலே System change இனை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான சரி­யான சந்­தர்ப்பம்,System change என்­பது அடிப்­ப­டையில் இருந்து கொண்டு வரப்­பட வேண்டும் என்­ப­தே­யாகும். எங்­க­ளுக்­கான மாற்­றத்தைக் கொண்டு வரத் தகுந்த தலை­வர்­களை சிறப்­பான முறையில் தெரிவு செய்து கொள்­வதில் எங்­க­ளுக்கு பெரும் பங்கு காணப்­ப­டு­கி­றது. அற்ப சலு­கை­க­ளுக்­காக எங்­க­ளது ஜன­நா­யக உரி­மை­யான வாக்­கு­ரி­மையை அடகு வைக்கும் கலாச்­சா­ரத்தின் மூலம் ஊழல் ஆசா­மி­களை மக்கள் மன்­றிற்கு அனுப்பி வைத்து விட்டு எங்­க­ளது எதிர்­பார்ப்பை அவர்கள் நிறை­வேற்­றாத போது அவர்­களை வசை­பா­டு­வது எங்­களை நாங்­களே வசை­பா­டு­வ­தற்கு சம­மா­னது என்றால் அது மிகை­யான கருத்­தல்ல.
எனவே, நமது ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் வாக்கு நமது கொள்­கையை பிர­தி­ப­லிக்க வேண்டும். ஏனென்றால் நமது வாக்கு நமது எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்­கி­றது. வாக்­க­ளித்து தலை­வர்­க­ளையும் பிர­தி­நி­தி­க­ளையும் தெரிவு செய்தல் வெறு­மனே ஒரு நாள் நிகழ்­வாக முடிந்து விடாமல் அது வர­லா­று­க­ளாக பார்க்­கப்­பட வேண்டும். ஊழ­லற்ற அரசு என்ற கோஷ­மா­னது ஊழ­லற்ற தலை­வர்கள் உரு­வாக்­கத்தில் உயிர்த்­தெழ வேண்டும். மக்­களின் பணத்தை கொள்­ளை­ய­டிக்கும் கொள்­ளை­யர்­க­ளுக்­கல்­லாது அபி­லா­ஷை­களை முன்­னி­றுத்தும் கொள்­கை­வா­தி­க­ளுக்கு வாக்­குகள் வழங்­கப்­பட வேண்டும் என்­பதை விட ஊழல் ஆசா­மிகள் ஒதுக்­கப்­பட்டு சிறந்த தலை­மைத்­து­வங்கள் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும் என்றே சொல்ல வேண்டும்.
இளை­ஞர்­களின் உணர்­வ­லை­களும் நாளைய தலை­வர்­களும்
இன்று இலங்­கையில் பாரிய அர­சியல் மாற்றம் ஒன்று நிகழ்ந்து உலக நாடுகள் நம்மை திரும்பிப் பார்க்கச் செய்யும் நிகழ்­வொன்று நடந்­தே­று­வ­தற்கு கற்­ற­றிந்த இளை­ஞர்­களின் உணர்­வலை பொங்­கிய போராட்டம் மிகப் பெரிய மைற்­கல்­லாகிப் போனது. System change இனை நோக்­கிய அவர்­க­ளது போராட்­டமும் உணர்ச்சிப் பெருக்­குமே நாட்டு மக்­களை ஒன்று திரட்­டி­யது. அது பாராட்­டப்­பட வேண்­டிய வர­லாற்று நிகழ்வு.
இன்று இந்த உணர்­வ­லை­க­ளுடன் கூடிய இளை­ஞர்கள் தங்­க­ளது போராட்­டத்தை முன்­னெ­டுத்த வண்­ணமே கொஞ்சம் சாதுர்­ய­மாக சிந்­திக்க வேண்­டிய நேரத்தில் இருக்­கின்­றனர். இன்றும் சரி நாளையும் சரி ஒப்­பந்­தங்­க­ளுக்கு மத்­தியில் தனது அர­சியல் நகர்­வு­களை கொண்டு செல்லும் கொண்டு செல்ல காத்­தி­ருக்கும் மக்கள் பிர­தி­நி­திகள் என்று சொல்­லப்­படும் டீல் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் இருந்து நாட்டைப் பாது­காத்து ஊழ­லற்ற தலை­மை­க­ளிடம் நமது நாட்டை கைய­ளிக்கும் சாத்­வீக போராட்­டத்தை பற்­றியும் கொஞ்சம் சிந்­திக்க வேண்டும்.
எதிர்­வரும் ஜன­நா­யக ரீதி­யி­லான தேர்­த­லினை இலக்கு வைத்து தமது விழிப்­பு­ணர்வூட்டல் செயற்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். தங்­க­ளது வாழ்­வா­தாரம் சீர் குலைந்­த­மையால் வீதிக்கு போரா­டு­வ­தற்காய் வந்த பல்­லா­யிரக்கணக்­கான மக்­க­ளுக்கு தூர­நோக்­கு­ட­னான அர­சியல் தலை­மைத்­துவம் குறித்து விளக்­க­ம­ளிக்க வேண்டும்.
இன்று கண்­ணெ­திரே ஊழலில் ஈடு­பட்டு டீல் பேசி மக்­களின் அபி­லா­ஷை­களை துச்­ச­மாக மதிக்கும் அனைத்து மட்ட (பிர­தேச, மாந­கர, மாகாண மற்றும் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள்) அர­சியல் பிர­மு­கர்­க­ளையும் அடுத்து வரும் ஒவ்­வொரு தேர்­தல்­க­ளிலும் எவ்­வாறு ஓரம் கட்­டு­வது என்ற பரந்த பார்­வை­யையும் திட்­டத்­தையும் முன்­வைக்க வேண்டும். பல கோடி­களை தேர்தல் காலத்தில் உலாவ விடும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கான இடத்தை இல்­லாது செய்து தேர்தல் பிரச்­சா­ரங்­க­ளை­யேனும் செய்து முடிக்க முடி­யாத பொரு­ளா­தார நிலையில் இருக்கும் கொள்­கை­வா­திகள், நேர்­மை­யான ஊர் தலை­வர்கள், ஓய்வு பெற்ற நேர்­மை­யான அரச அதி­கா­ரிகள் என அர­சி­யலில் ஆர்­வமும் நேர்­மையும் உடைய கன­வான்கள் இனங்­கா­ணப்­பட்டு பிர­சாரம் பண்­ணப்­பட வேண்டும்.
ஐயா­யிரம் ரூபாய் பணத்­திற்கும், மல்­லிகை பொருட்­க­ளுக்கும் வாக்­கு­களை விற்­போ­ரையும் அரச வேலை, இல­வச வீடு என வாக்­கு­று­தி­களை நம்பி வாக்­கு­களை வாரி வழங்­கு­ப­வர்­க­ளையும் இந்த செயற்­பா­டு­களில் இருந்து தடுப்­ப­தற்கு இய­லு­மான முயற்­சிகள் எடுக்­கப்­பட வேண்டும். கொள்­கையை பாராது தற்­கா­லிக சலு­கை­களை மாத்­திரம் கண்­கொண்டு அளிக்­கப்­படும் வாக்­குகள் நமது எதிர்­கா­லத்தை கேள்விக் குறி­யாக்­கு­வதை கேள்விக் குறி­யாக்கி இருப்­பதை அவர்­க­ளுக்கு விளங்­கு­கின்ற விதத்தில் விளக்­க­­ வேண்டும்.
வாக்­கு­களை பாது­காக்க வேண்டும், தேர்­தலின் நூறு வீத ஜன­நா­யக தன்­மை­யினை பாது­காக்க வேண்டும். அனை­வரும் எதிர்­பார்க்கும் System change இனை ஊழ­லற்ற அர­சியல் தலை­மைத்­து­வங்­களை வைத்தே எட்ட முடியும். நாட்டின் அதி­யுயர் சட்டம் அர­சி­ய­ல­மைப்பு என்ற ரீதியில் நாங்கள் அதை மதிக்க வேண்­டிய கடப்­பாட்டில் இருக்­கின்றோம், நாங்கள் முதன்மைச் சட்­ட­மாக மதிக்கும் அர­சி­ய­ல­மைப்பில் மாற்­றங்­களை கொண்டு வரு­வதன் மூலமே நாம் எதிர்­பார்க்கும் System change இனை முழு­தாக சுவைக்க முடியும். ஊழலற்ற நேர்­மையான மக்­க­ளுக்­காக மக்­க­ளாக இயங்கும் பிர­தி­நி­திகள் மக்கள் மன்­றிற்கு அனுப்பி வைக்­கப்­பட வேண்டும். அவர்­களைக் கொண்டே குறித்த System change செய்­யப்­பட வேண்டும். பாரா­ளு­மன்­றத்தை வைத்தே முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன System change கொண்டு வந்தார், பாரா­ளு­மன்றை வைத்தே அதன் பிற்­பாடு ஆட்சி பீடம் ஏறிய பல தலை­வர்கள் அவ­ர­வர்­க­ளுக்கு தேவை­யான System change இனை கொண்டு வந்தனர். போராட்டங்களுக்கு அப்பால் System change பாராளுமன்றின் துணையுடனேயே கொண்டு வரப்பட வேண்டும். ஊருக்கு ஊர் தெருவிற்கு தெரு மக்கள் அரசியல் விழிப்புணர்வூட்டல்கள் தற்போது அவசியமாகி இருக்கின்றது. ஊழலற்ற தலைவர்களின் உருவாக்கம் அவசியமாகி இருக்கின்றது. ஊழல் அரசியல் வாதிகளே மீண்டும் மீண்டும் மக்கள் மன்றம் செல்ல வழி வகுப்போமேயானால் போராடி வென்ற அரிய விடயங்களும் சக்தியிழந்து போய் விடும்.
எனவே, நாடு எதிர்பார்க்கும் System change இனை கொண்டு வருவதற்கு இன்றைய உணர்ச்சிப் பெருக்குள்ள இளைஞர்கள் போதுமானவர்கள், அவர்கள் சிந்தித்து செயற்படக் கடமைப் பட்டவர்கள், எதிர்கால தேர்தல்களை நோக்கி காய் நகர்த்தக் கூடியவர்கள்.

Leave A Reply

Your email address will not be published.