தேவையானோர் எடுத்துச் செல்லுங்கள் இயலுமானவர்கள் வைத்துச் செல்லுங்கள்

இளைஞர் அம்ராஸ் அலியின் முன்மாதிரி திட்டம்

0 522

எச்.எம்.எம்.பர்ஸான்

நாளாந்தம் உண்­ப­தற்கு வழி­யின்றி தவிக்கும் மக்கள் தங்­க­ளுக்கு தேவை­யான உணவுப் பொருட்­களை எடுத்துச் செல்­வ­தற்­காக வேண்டி வீதி­யோரம் உணவுப் பெட்டி ஒன்றை வைத்­துள்ளார் அம்ராஸ் அலி எனும் இளைஞர் ஒருவர். கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லகப் பிரி­வுக்­குட்­பட்ட எம்.பீ.சீ.எஸ் வீதி செம்­மண்­ணோடை எனும் முக­வ­ரியில் வசித்து வரு­கிறார் முகம்மட் ஹக்கீம் முகம்மட் அம்ராஸ் அலி.

இவர், கடந்த வெள்­ளிக்­கி­ழமை (22) ஆம் திகதி எம்.பீ.சீ.எஸ். வீதியில் உணவுப் பெட்டி ஒன்றை வைத்­துள்ளார். ‘தேவை­யானோர் எடுத்துச் செல்­லுங்கள் இய­லு­மா­ன­வர்கள் வைத்துச் செல்­லுங்கள்’ எனும் வாசகம் எழு­தப்­பட்­ட­வாறு அந்த உண­வுப்­பெட்டி வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த முன்­னெ­டுப்பை மேற்­கொண்­டுள்ள அம்ராஸ் அலியை சந்­திப்­ப­தற்­காக நாம் சென்று அவ­ரிடம் வின­வி­ய­போது அவர் எம்­மிடம் இவ்­வாறு பேசினார்.

“நான் 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதா­ரண தரம் படிக்கும் போது உம்­ரா­வுக்கு சென்­றி­ருந்தேன். அப்­போது அங்­குள்ள இடங்­களில் இவ்­வாறு உணவுப் பெட்­டிகள் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அவ்­வாறு வைக்­கப்­பட்­டி­ருந்த பெட்­டியில் மக்கள் தங்­க­ளு­டைய தர்­மங்­களை வைத்துச் செல்­கின்­றனர். அங்கு வைக்­கப்­படும் பொருட்­களை தேவை­யான மக்கள் எடுத்துச் சென்று பயன் பெறு­கின்­றனர்.

இவ்­வாறு நமது பிர­தே­சத்­திலும் செய்து அத­னூ­டாக கஷ்­டப்­பட்ட மக்கள் பயன் பெற வேண்டும் என்­ப­தற்­காக வேண்­டியே தற்­போது இந்த திட்­டத்தை என்னால் செய்ய முடிந்­தது.

பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் இவ்­வா­றான சிந்­தனை எனக்குள் தோன்­றிய போதும் எனது பாட­சாலை கல்வி அதற்­கான சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை. இப்­போது நான் தேசிய சமூக அபி­வி­ருத்தி நிறு­வ­னத்தில் சமூகப் பணி இளங்­கலை பட்டப் படிப்­பினை மேற்­கொண்டு வரு­கிறேன். அத்­தோடு கொழும்­பி­லுள்ள நிறு­வனம் ஒன்­றிலும் பணி­யாற்றி வரு­கிறேன். அத­னூ­டாக எனது பொதுப் பணி­களை செய்து வரு­கின்றேன்.

இவ்­வா­றான திட்­டத்தை நான் செய்ய நினைத்து, அதனை நான் பணி­பு­ரியும் நிறு­வன தலை­வ­ரிடம் தெரி­வித்த போது அவர் என்னை உற்­சா­கப்­ப­டுத்தி அந்த திட்­டத்தை அமுல்­ப­டுத்த பெட்டி அமைப்­ப­தற்கு நிதி­யு­தவி வழங்­கினார். நான் முன்­வைத்த கோரிக்­கையை ஏற்றுக் கொண்ட சிங்­கள இனத்தை சேர்ந்த எனது நிறு­வனத் தலைவர் இந்த திட்­டத்தை நாட்டில் பல பகு­தி­க­ளிலும் செய்­வ­தற்கு ஏற்­பாடு செய்­துள்ளார். தற்­போது சுகா­தார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு மற்றும் தேவா­லயம் போன்ற இடங்­களில் உணவு வைக்கும் திட்டம் முதற்­கட்­ட­மாக எமது நிறு­வ­னத்தால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

எனது நீண்ட நாள் கன­வாக இருந்த இந்த சேவையை நான் ஆரம்­பித்­துள்ளேன். நான் இந்த வேலையை ஆரம்­பிப்­ப­தற்கு எனது தந்­தை­யிடம் ஆலோ­சனை கேட்­ட­போது அவர் மிகவும் உற்­சா­கப்­ப­டுத்தி எனக்கு பக்­க­ப­ல­மாக செயற்­பட்டார். எனது தந்­தையின் சமூக சேவை செயற்­பா­டுதான் என்­னையும் இவ்­வா­றான நிலைக்கு இட்டுச் சென்­றுள்­ளது.
எனது தாய் தந்­தை­யரின் நிதியில் ஆரம்ப கட்­ட­மாக இந்த திட்­டத்தை நான் ஆரம்­பித்­துள்ளேன்.இன்ஷா அல்லாஹ் ஒரு மாதத்­திற்­கான பொருட்­களை அந்தப் பெட்­டியில் என்னால் வைக்க முடியும்.

அந்தப் பெட்­டியில் அரிசி, சீனி, தேயிலை, சோயா, பருப்பு உட்­பட பல பொருட்கள் வைக்­கப்­ப­ட­வுள்­ளன.  ஏழை மக்­க­ளுக்கு உண­வ­ளிக்கும் இத் திட்டம் வெற்றி பெற வசதி படைத்தோர் முன்­வர வேண்டும். நான் செய்­துள்­ளது சிறிய முயற்­சிதான். ஏனை­ய­வர்கள் இதை விட வித்­தி­யா­ச­மா­கவும், சிறப்­பா­கவும் செய்தால் அதற்கு நான் பூரண ஆத­ர­வையும் ஒத்­து­ழைப்­பு­க­ளையும் வழங்­குவேன்.

நான் எடுத்துக் கொண்­டுள்ள இந்த முயற்­சியை பலரும் பாராட்­டி­யுள்­ளனர். உள்­நாட்டில் இருந்தும் வெளி­நாட்டில் இருந்தும் எனக்கு தொலை­பேசி எடுத்து வாழ்த்துக் கூறி என்னை உற்­சா­கப்­ப­டுத்­து­கின்­றனர். எனக்கு பெரிதும் மகிழ்ச்­சி­யாக உள்­ளது.
வறு­மையை ஒழிக்கும் இத் திட்டம் பின்­தங்­கிய கிராமப் புறங்­க­ளிலும் செயற்­ப­டுத்­தப்­பட வேண்டும். இவ்­வா­றான திட்­டத்­துக்கு முடி­யு­மான நபர்கள் ஒத்­து­ழைப்­புக்­களை வழங்க வேண்டும். அவ்­வாறு வழங்­கினால் மாத்­தி­ரமே இதனை நாம் வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்துச் செல்­ல­மு­டியும் என்றார் அம்ராஸ் அலி.

இவ்­வாறு இளம் வயதில் வறு­மையை ஒழிக்க ஆர்வம் கொண்டு இத்­திட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ள அம்ராஸ் அலி செம்­மண்­ணோடை அல் ஹம்ரா வித்­தி­யா­லய பிரதி அதிபர் எம்.எச்.எம்.ஹகீம், ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எப்.சுக்ரியா தம்பதிகளின் புதல்வராவார்.

அம்ராஸ் அலியின் இந்த முயற்சியை நாம் பாராட்டுவதுடன் குறித்த பெட்டியில் போதுமான உணவுப்பொ ருட்களை தொடர்ந்து வைப்பதன் ஊடாக அவரை ஊக்குவிக்கவும் முன்வர வேண்டும். இதன் மூலம் ஏழை மக்களின் பசியைப் போக்கும் பாக்கியத்தை நாமும் பெறலாம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.