ஹஜ் யாத்திரை 2022: அரச ஹஜ் குழுவிடம் முறையிட முடியும்

0 325

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­திரை மேற்­கொண்ட யாத்­தி­ரி­கர்கள் தங்­க­ளது யாத்­திரை  தொடர்பில் ஏதும் முறைப்­பா­டு­களை முன்­வைக்க விரும்பின் அவற்றை எழுத்து மூலம் அல்­லது மின்­னஞ்சல் மூலம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்க­ளத்தின் பணிப்­பா­ள­ருக்கு அனுப்பி வைக்­கு­மாறு அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தங்­க­ளது பயண ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்த முக­வர்­க­ளுடன் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கைகள் மீறப்­பட்­டி­ருந்தால், சவூதி அரே­பி­யாவில் குறிப்­பிட்ட தங்­கு­மிட வச­திகள் வழங்­கி­யி­ரா­விட்டால் அல்­லது வேறு உறுதி மொழிகள் மீறப்­பட்­டி­ருந்தால் அது தொடர்பில் முறைப்­பா­டு­களை முன் வைக்­கலாம் என அரச ஹஜ் குழுவின் தலைவர் அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

இவ்­வ­ருடம் சவூதி அரே­பிய ஹஜ் உம்ரா அமைச்­சினால் இலங்­கைக்கு 1585 ஹஜ் கோட்டா வழங்­கப்­பட்­டி­ருந்­தது. என்­றாலும் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் கார­ண­மாக 968 பேரே தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­தி­ருந்­தனர். ஹஜ் யாத்­தி­ரையை முன்­னெ­டுப்­ப­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் 73 ஹஜ் முக­வர்­க­ளுக்கு அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டது. என்­றாலும் 9 முதன்மை முகவர் நிலை­யங்­க­ளுக்கே ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை அழைத்துச் செல்­வ­தற்­கான வாய்ப்பு வழங்­கப்­பட்­டது. இத­ன­டிப்­ப­டையில் 50 ஹஜ் முக­வர்கள் 9 முகவர் நிலை­யங்­க­ளுடன் இணைந்து பயண ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வ­ருட ஹஜ் கட்­டணம் முகவர் நிலை­யங்கள் வழங்கும் சேவை­க­ளுக்கு அமை­வாக 20 முதல் 25 இலட்சம் ரூபாவாக அமைந்திருந்தது.
968 பேர் ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொண்­ட­துடன் மேல­தி­க­மாக 68 பேர் பேஸா விசாவில் பயணம் மேற்­கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.