சி.ஐ.டி.யினால் தானிஸ் அலி விமானத்தில் வைத்து கைது

விமானப் பயணிகள் கடும் எதிர்ப்பு

0 357

(எம்.எப்.எம்.பஸீர்)
கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து டுபாய் நோக்கி பய­ணிக்க தயா­ராக இருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்­த­மான விமா­னத்­துக்குள் வைத்து, அர­சாங்­கத்­துக்கு எதி­ரான போராட்­டங்­களில் முன்­னணி போராட்­டக்­கா­ர­ராக விளங்­கிய தானிஸ் அலி என்­ப­வரை சி.ஐ.டி.யினர் நேற்று முன்­தினம் இரவு அதி­ர­டி­யாக கைது செய்திருந்தனர்.

குடி­வ­ரவு குடி­ய­கல்வு பரி­சோ­த­னை­க­ளையும் தாண்டி, டுபாய் நோக்கி பய­ணிக்க விமா­னத்தில் அமர்ந்­தி­ருந்த போது, விமா­னத்­துக்குள் நுழைந்த கட்­டு­நா­யக்க விமான நிலைய குற்றப் புல­னாய்வுத் திணைக்­கள அதி­கா­ரிகள் மற்றும் விமான நிலைய பொலிஸ் பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்ட குழு­வினர் திறந்த பிடி­யாணை ஒன்­றி­ருப்­பதால் கைது செய்­வ­தாக கூறி, தானிஸ் அலியை இழுத்துச் சென்­றனர். இதன்­போது விமா­னத்­துக்குள் இருந்த உள் நாட்டு வெளி­நாட்டு பய­ணிகள், பொலி­ஸாரின் நட­வ­டிக்­கைக்கு கடும் எதிர்ப்­பினை வெளி­யிட்­டுள்­ளனர்.

முதலில் எந்த ஆவ­ணங்­க­ளையும் காண்­பிக்­காது தானிஸ் அலியை கைது செய்ய சி.ஐ.டி. குழு­வினர் முயன்ற நிலையில், அதற்கு விமா­னத்தில் இருந்த பய­ணி­களும், தானிஸ் அலியும் இட­ம­ளிக்­க­வில்லை.

விமானம் எவ்­வ­ளவு நேரம் தாம­த­ம­டைந்­தாலும் பர­வா­யில்லை என இதன்­போது குறிப்­பிட்ட விமான பய­ணிகள், போராட்­டத்தில் ஈடு­பட்­டதை மையப்­ப­டுத்தி பழிவாங்­க­லுக்­காக கைது செய்ய பொலிசார் வெட்கப் பட வேண்டும் என எதிர்ப்பு வெளி­யிட்­டனர்.
கொள்­ளை­ய­டித்­த­வர்கள், கொலை செய்­த­வர்­களை தப்பிச் செல்ல வழி விட்­டு­விட்டு, அதற்கு எதி­ராக போராட்டம் நடத்­தி­ய­வரை கைது செய்­வ­தற்கு முயல்­வது பொலி­சாரின் இய­லாமை என அவர்கள் குறிப்­பிட்­டனர்.

இந் நிலையில் தொடர்ச்­சி­யான எதிர்ப்பின் பின்னர், விமா­னத்­துக்குள் நுழைந்த கட்­டு­நா­யக்க விமான நிலைய பொலிஸ் பொறுப்­ப­தி­காரி , பிடி­யாணை உத்­த­ர­வொன்றின் பிர­தியை தானிஸ் அலிக்கு காண்­பித்து கைதுக்கு முயன்றார்.

எனினும் அவர், குறித்த பிர­தியை ஏற்க மறுத்­த­துடன், கைது உத்­த­ரவு இருப்பின் ஏன் குடி­வ­ரவு குடி­ய­கல்வு சோத­னையின் போது நிறுத்­த­வில்லை என கேள்வி எழுப்­பினார்.
எனினும் விமா­னத்­துக்குள் நுழைந்த சி.ஐ.டி. குழு­வினர், எதிர்ப்­புக்­களை மீறி தானிஸ் அலியை விமா­னத்­தி­லி­ருந்து இழுத்துச் சென்­றனர்.

இந் நிலையில் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நிஹால் தல்­துவ, நேற்று முன் தினம் இரவு விரி­வான அறிக்கை ஒன்­றினை அனுப்­பிய நிலையில், அவ்­வ­றிக்­கையில், இலங்கை ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்­துக்குள் போராட்­டக்­கா­ரர்கள் பலர் அத்து மீறி நுழைந்து, அங்­கி­ருந்த ஊழி­யர்­களை அச்­சு­றுத்தி கட­மைக்கு இடை­யூறு விளை­வித்­த­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் பிர­தான சந்­தேக நபரைக் கைது செய்­த­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

அவ்­வ­றிக்கை பிர­காரம் தானிஸ் அலிக்கு எதி­ராக உள்ள குற்­றச்­சாட்­டுக்கள் பட்­டி­ய­லி­டப்­பட்­டி­ருந்­தன.

அதன்­படி தானிஸ் அலி எனும் சந்­தேக நபர் கடந்த ஜூன் 20 ஆம் திகதி சர்­வ­தேச நாணய நிதிய பிர­தி­நி­திகள் குழு நிதி­ய­மைச்சின் பிர­தி­நி­தி­களை சந்­திக்க வந்த போது நிதி­ய­மைச்சின் வாயிலை மறித்து ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யமை தொடர்பில் கோட்டை பொலி­ஸாரால் நீதி­மன்­றிற்கு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் சந்­தே­க­நபர் நீதி­மன்றில் ஆஜ­ரா­கா­மையால் அந்­நீ­தி­மன்றால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
கடந்த ஜூன் 9 திகதி பொலிஸ் தலை­மை­யகம் முன்­பாக நடத்­தப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்தின் போது பொதுச் சொத்­துக்கள் மீது நடத்­தப்­பட்ட சேதங்­களை மையப்­ப­டுத்தி கோட்டை நீதிவான் நீதி­மன்றில் தொட­ரப்­பட்­டுள்ள வழக்கில் சந்­தே­க­நபர் பிணையில் விடு­விக்­கப்­பட்டு இருந்தார்.

கடந்த ஜூன் 12 ஆம் திகதி ஜனா­தி­பதி செய­ல­கத்தை அண்­மித்த போராட்­ட­கா­ரர்கள் குழு­மி­யி­ருந்த பிர­தே­சத்தில் வைத்து இரா­ணுவ புல­னாய்வு பிரிவின் உறுப்­பி­னர்­களை மீது பலாத்­கா­ர­மாக தடுத்து வைத்த சம்­ப­வத்தில் சந்­தேக நப­ராக அவர் அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார். அது தொடர்பில் கோட்டை நீதி­மன்­றிற்கு அறிக்கை இடப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் கடந்த ஜூன் 13 ஆம் திகதி கரு­வாத்­தோட்டம் பொலிஸ் பிரி விற்கு உட்­பட்ட ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்தில் அத்­து­மீறி நுழைந்து நேரலை ஒளி­ப­ரப்பு களுக்கு தடை ஏற்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்பில் பிர­தான சந்­தேக நப­ராக அவர் அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார்.அத்­துடன் கடந்த 20 ஆம் திகதி காலி முகத்­தி­ட­லுக்கு முன்­பாக உள்ள பண்­டா­ர­நா­யக்க உரு­வச்­சி­லைக்கு சேதப்­ப­டுத்­த­பட உ ள்ளதாக கிடைக்­கப்­பெற்ற தக­வ­லுக்கு அமை­வாக அச்­சி­லையை சூழ­வுள்ள 50 மீட்டர் பகு­திக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்து இருந்­தது. இந்த தடை உத்­த­ரவை கையேற்க சென்ற கோட்டை பொலி­ஸாரின் கட­மை­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்த பிர­தான சந்­தேக நப­ராக அவர் அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.