சர்வகட்சி அரசில் இணைய சிறுபான்மை கட்சிகளுக்கு இதுவரை அழைப்பில்லை

மு.கா.எம்.பி.க்களை கழற்றி எடுப்பது சர்வகட்சி ஆட்சியல்ல என்கிறார் ஹக்கீம்

0 411

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க விரைவில் சர்­வ­கட்சி அர­சாங்­க­மொன்­றினை நிறு­வு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ள­தாக செய்­திகள் வெளி­யாகும் நிலையில், சர்வ கட்சி அர­சாங்­க­மொன்­றினை நிறு­வு­வ­தற்கு தங்­க­ளுக்கு இது­வரை உத்­தி­யோ­க­பூர்வ அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை என தமிழ் மற்றும் முஸ்லிம் அர­சி­யல்­கட்­சி­களின் தலை­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ்
மோச­மான பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து நாட்டை மீட்­டெ­டுப்­ப­தற்கு நேர்­மை­யான சர்­வ­கட்சி அர­சாங்­க­மொன்று அமைக்­கப்­ப­ட­வேண்டும். நேர்­மை­யான முறையில் பேச்­சு­வார்த்­தைகள் இதற்­காக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். ஆனால் சர்­வ­கட்சி அர­சாங்­க­மொன்று அமைப்­ப­தற்­கான உத்­தி­யோ­க­பூர்வ அழைப்பு இது­வரை எமக்கு விடுக்­கப்­ப­ட­வில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

அவர் இது தொடர்பில் விடி­வெள்­ளிக்கு மேலும் கருத்து தெரி­விக்­கையில்;
தர­கர்கள் மற்றும் ஏஜண்­டுகள் மூலம் அழைப்பு விடுத்து பேச்­சு­வார்த்தை நடத்த முடி­யாது. அர­சியல் கட்­சி­க­ளி­லி­ருந்து சிலரை பிடுங்கி எடுத்து ஆட்சி அமைப்­பது சர்­வ­கட்சி ஆட்­சி­யாக அமை­யாது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து உறுப்­பி­னர்­களை பிடுங்கி எடுத்து ஆட்­சி­ய­மைப்­பது நேர்­மை­யான ஆட்­சி­யாகப் போவ­தில்லை.
உத்­தி­யோ­க­பூர்வ அழைப்பு விடுக்­கப்­பட்டால் கட்சி அது தொடர்பில் ஆராய்ந்து தீர்­மானம் மேற்­கொள்ளும் என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ்
‘சர்­வ­கட்சி அர­சாங்­க­மொன்று அமைப்­பது தொடர்பில் எமக்கு உத்­தி­யோ­க­பூர்வ அழைப்பு ஏதும் விடுக்­கப்­ப­ட­வில்லை.சர்­வ­கட்சி அர­சாங்­க­மொன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக பத்­தி­ரி­கைகள் ஊடா­கவே அறிந்து கொண்டோம்.

உத்­தி­யோ­கப்­பூர்வ அழைப்பு கிடைக்கப் பெற்றால் அது தொடர்பில் கட்­சியின் அர­சியல் உயர்­பீடம் ஒன்று கூடி கலந்­து­ரை­யாடி தீர்­மானம் மேற்­கொள்ளும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

தேசிய காங்­கிரஸ்
‘சர்வ கட்சி அர­சாங்­க­மொன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவோ அதில் இணைந்து கொள்­ளு­மாறோ எங்கள் கட்­சிக்கு இது­வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மான அழைப்பு கிடைக்­கப்­பெ­ற­வில்லை என தேசிய காங்­கி­ரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதா­வுல்லா தெரி­வித்தார்.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு
சர்­வ­கட்சி அர­சாங்­கத்­துக்கு இது­வரை எமக்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை.அவ்­வாறு அழைப்பு விடுக்­கப்­பட்டால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு கலந்­து­ரை­யாடி தீர்­மானம் மேற்­கொள்ளும் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஊடக பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

ஜன­நா­யக மக்கள் முன்­னணி
சர்­வ­கட்சி அர­சாங்கம் அமைப்­பது தொடர்பில் எமக்கு இது­வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை. அவ்­வாறு அழைப்பு விடுக்­கப்­பட்டால் கட்­சியின் உயர் பீடம் மற்றும் கூட்­ட­ணி­யுடன் கலந்­து­ரை­யாடி தீர்­மானம் மேற்­கொள்வோம் என ஜன­நா­யக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்பு நடைபெற்ற கட்சித்தலைவர்களின் விசேட கூட்டத்தின்போது சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் கருத்தினைக் கூறினார். எனினும் அதன் பின்னர் எந்த அழைப்பும் இல்லை என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.