இறுதி நேரத்தில் கோத்தாவை காப்பாற்றிய இராணுவ ஒபரேஷன்

0 387

ஏ.ஆர்.ஏ.பரீல்

போராட்­டக்­கா­ரர்கள் ஜனா­தி­பதி மாளி­கையின் நுழை­வா­யிலை உடைத்துக் கொண்டு உட்­போக முயற்­சித்த போது ஜனா­தி­பதி கோத்தாபய அவரது மாளி­கைக்­குள்ளேயே இருந்தார்.

இரா­ணுவம் போராட்­டக்­கா­ரர்கள் மீது துப்­பாக்­கிச்­சூடு நடாத்­து­வ­தற்­கான அனு­ம­தி­யினை ஜனா­தி­ப­தி­யிடம் கோரி­யது. அப்­போது ஜனா­தி­பதி போராட்­டக்­கா­ரர்கள் மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்த வேண்டாம் என்று வேண்­டிக்­கொண்டார்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ தனது தனிப்­பட்ட சொந்த மிரி­ஹான வீட்­டி­லி­ருந்து கடந்த மார்ச் 31 ஆம் திக­தியே ஜனா­தி­பதி மாளி­கைக்கு வந்து சேர்ந்தார். போராட்­டக்­கா­ரர்­களால் மிரி­ஹான இல்லம் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்தே அவர் ஜனா­தி­பதி மாளி­கைக்கு வந்து சேர்ந்தார். தனது மனைவி அயோமா ராஜ­ப­க்ஷ­வுடன் ஜனா­தி­பதி மாளி­கைக்கு வந்து சேர்ந்த கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் உயி­ருக்-கு ஆபத்­தான நிலைமை இருந்­தது. இத­னை­ய­டுத்தே அவர் ஜனா­தி­பதி மாளி­கையில் அடைக்­க­ல­மானார்.

அரச புல­னாய்வுப் பிரிவின் சிபா­ரி­சு­களை கவ­னத்திற்- கொண்ட ஜனா­தி­ப­தியின் பாது­காப்பு செய­லணி அவரை எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் ஜனா­தி­பதி மாளி­கை­யி­லி­ருந்தும் அப்­பு­றப்­ப­டுத்­து­வ­தற்கு ஏற்­க­னவே திட்­டங்­களைத் தயா­ரித்­தி­ருந்­தது.

ஜனா­தி­பதி மாளி­கையில் இவ்­வா­றான அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு இதற்கு முன்பு ஜே.ஆர்.ஜய­வர்­தன மாத்­தி­ரமே ஆளா­கி­யி­ருந்தார். இந்திய – இலங்கை உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­த­ன­வுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டது. இதனைக் கவ­னத்­திற்­கொண்ட அப்­போ­தைய இந்­திய பிர­தமர் ரஜீவ் காந்தி கமாண்டோ வீரர்கள் அடங்­கிய கப்­ப­லொன்றை ஜனா­தி­பதி மாளி­கைக்கு அருகில் கொழும்பு துறை­மு­கத்தில் நிறுத்­தி­யி­ருந்தார். ஜனா­தி­ப­தியின் உயி­ருக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்டால் ஜனா­தி­பதி மாளி­கைக்குள் அதி­ர­டி­யாகப் புகுந்து அவரைப் பாது­காப்­பாக இந்­திய கப்­ப­லுக்கு அழைத்து வரும் பொறுப்பு இந்த இந்­திய கமாண்­டோக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த விப­ரங்கள் அப்­போது இலங்­கை­யி­லி­ருந்த இந்­திய உயர் ஸ்தானிகர் ஜே.ஆர்.டிக்சிட் எழு­தி­யுள்ள கொழும்பு பூகம்பம் எனும் நூலில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

என்­றாலும் அன்று ஜே.ஆர்.ஜய­வர்­த­ன­வுக்கு கப்­பலில் ஏற வேண்­டிய நிலைமை ஏற்­ப­டாது விட்­டாலும் 33 வரு­டங்­க­ளுக்குப் பின்பு ஜனா­தி­பதி மாளி­கை­யி­லி­ருந்து கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கு தனது உயி­ரைக்­காப்­பாற்றிக் கொள்­வ­தற்­காக கப்­பலில் ஏற­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது.

இதற்கு முன்பு கொழும்­பி­லி­ருந்து கப்­பலில் ஏறி வாழ்­நாளில் இலங்­கைக்கு வராமல் சென்ற இலங்­கையின் இறுதி அரசன் ஸ்ரீ விக்­கி­ரம ராஜ­சிங்க ஆவார். இரண்டு நூற்­றாண்­டு­க­ளுக்குப் பின்பு கப்பல் ஏறி கட­லுக்குச் சென்று அங்­கி­ருந்து மீண்டும் கரைக்கு வந்து கோத்­தா­பய ராஜ­பக்ஷ விமானம் மூலம் இலங்­கை­யி­லி­ருந்தும் வெளி­யேறிச் சென்றார்.

கடந்த 9 ஆம் திகதி பகல் 12 மணிக்கு போராட்­டக்­கா­ரர்­களால் ஜனா­தி­பதி மாளிகை சுற்றி வளைக்­கப்­பட்­ட­போது ஜனா­தி­பதி அத­னுள்­ளேயே இருந்தார். பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கமல் குண­ரத்ன மற்றும் முப்­ப­டை­களின் தள­ப­தி­களும் ஜனா­தி­பதி மாளி­கையில் அப்­போது ஜனா­தி­ப­தி­யு­டனே இருந்­தார்கள். இத­னி­டையே நாடெங்கும் கதை­யொன்று பர­வி­யது. ஜனா­தி­பதி இரா­ணுவ பாது­காப்­புடன் கட்­டு­நா­யக்க அதி­வேக வீதி­யூ­டாக விமான நிலை­யத்­துக்குச் சென்று கொண்­டி­ருக்­கி­றார் என்­பதே அந்த பர­ப­ரப்­புக்­க­தை­யாகும். கமாண்டோ வீரர்­க­ளுடன் 4 டிபெண்டர் வாக­னங்கள் அதி­வேக நெடுஞ்­சா­லை­யூ­டாக சென்­ற­மை­யை­ய­டுத்தே இவ்­வா­றான கதை பர­வி­யது.

ஆனால் பாது­காப்பு தொடர்­பான மாநா­டொன்றில் கலந்து கொள்­வ­தற்­காக இந்­தி­யா­வுக்குச் சென்­றி­ருந்த பாது­காப்பு பிரிவின் பிர­தானி ஜெனரல் சவேந்­திர சில்வா நாடு திரும்­பிய நிலையில் அவரை விமான நிலை­யத்­தி­லி­ருந்து கொழும்­புக்கு அழைத்து வரு­வ­தற்­கா­கவே குறிப்­பிட்ட டிபெண்டர் வாக­னங்கள் அனுப்­பப்­பட்­டி­ருந்­தன.

ஜனா­தி­பதி மாளிகை சுற்றி வளைக்­கப்­பட்ட சந்­தர்ப்பம்
போராட்­டக்­கா­ரர்­களால் ஜனா­தி­பதி மாளிகை சுற்றி வளைக்­கப்­பட்டு அவர்கள் இறுதி நுழை­வாயில் கேட்டை அண்­மிப்­ப­தற்கு முன்பே பாது­காப்­பு­துறை அதி­கா­ரிகள் ஜனா­தி­பதி மாளி­கை­யி­லி­ருந்தும் வெளி­யே­று­மாறு ஜனா­தி­ப­திக்கு ஆலோ­சனை வழங்­கி­னார்கள்.

அச்­சந்­தர்ப்­பத்தில் “ பார்ப்போம்” அவர்கள் என்ன செய்­யப்­போ­கி­றார்கள் என்று ஜனா­தி­பதி கோத்தாபய பாது­காப்பு உய­ர­தி­கா­ரி­யிடம் தெரி­வித்தார்.
இந்­நி­லை­மையில் ஜனா­தி­ப­தியை, ஜனா­தி­பதி மாளி­கை­யி­லி­ருந்தும் பாது­காப்­பாக வெளி­யேற்­று­வ­தற்கு பாது­காப்பு உய­ர­தி­கா­ரிகள் இரண்டு திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்குத் திட்­ட­மிட்­டி­ருந்­தனர்.

கொழும்பு துறை­மு­கத்தில் நங்­கூ­ர­மி­டப்­பட்­டி­ருந்த கஜ­பாகு கப்பல் மூலம் ஜனா­தி­ப­தியை ஜனா­தி­பதி மாளி­கை­யி­லி­ருந்தும் வெளி­யேற்­றிக்­கொள்­வது ஒரு திட்­ட­மாகும். இத்­திட்­டத்­துக்கு கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் நிசாந்த உளு­கே­தென்ன பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். அடுத்த திட்­டத்­துக்குப் பொறுப்­பாக விமா­னப்­ப­டைத்­த­ள­பதி எயார் மார்சல் சுதர்­சன பதி­ரன நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். கொழும்பு துறை­மு­கத்­துக்குள் ஹெலிகப்டர் ஒன்­றினை தரை­யி­றக்கி அதன்­மூலம் ஆகாய மார்க்­க­மாக ஜனா­தி­ப­தியை மாளி­கை­யி­லி­ருந்து வெளி­யேற்­றிக்­கொள்­வது இரண்டாம் திட்­ட­மாகும்.

இதற்­காக விமான நிலை­யத்தில் நிலை­கொண்­டுள்ள முக்­கிய பிர­மு­கர்­க­ளுக்­கான போக்­கு­வ­ரத்து சேவை வழங்கும் 4 ஆம் இலக்க பாது­காப்பு படை­ய­ணிக்குச் சொந்­த­மான ஹெலி­கப்டர் ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. போராட்­டக்­கா­ரர்கள் ஜனா­தி­பதி மாளி­கையின் இறுதி வாயிலை எட்­டிய நிலையில் ஹெலிக­ப்டர் ஆகா­யத்தில் வட்­ட­மிட்­டது. ஜனா­தி­ப­தியை ஆரம்­பத்­திலே அழைத்துச் செல்­வ­தற்கு படைத்­த­ள­ப­திகள் மற்றும் உளவுப் பிரிவின் உய­ர­தி­கா­ரிகள் தீர்­மா­னித்­தி­ருந்­தார்கள். என்­றாலும் ஜனா­தி­ப­தியின் ஆலோ­ச­னைக்­க­மைய அவர்கள் நண்­பகல் 12 மணி­வரை அங்கு தங்­கி­யி­ருந்­தார்கள்.
சேர், மேலும் தாம­தித்தால் போராட்­டக்­கா­ரர்கள் நுழை­வா­யிலை உடைத்­துக்­கொண்டு உள்ளே வந்து விடு­வார்கள். நீங்கள் இங்­கி­ருந்தால் அவர்கள் மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­யா­வது அவர்­களை தடுக்க வேண்­டி­யேற்­படும்”. என பாது­காப்பு அதி­கா­ரிகள் ஜனா­தி­ப­தி­யிடம் தெரி­வித்­தார்கள்.

இல்லை யார் மீதும் துப்­பாக்கி சூடு நடத்­தா­தீர்கள். நான் இங்­கி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு ஆயத்­த­மா­கிறேன் என்று ஜனா­தி­பதி பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்டார்.
துறை­மு­கத்தில் ஹெலி­கப்­டரை தரை­யி­றக்­கினால் அவ்­வி­டத்­துக்குப் போராட்­டக்­கா­ரர்கள் வரலாம் என்­பதால் ஜனா­தி­ப­தியை கப்­ப­லுக்கு அழைத்துச் செல்­வ­தற்குத் திட்­ட­மிட்­டார்கள். வெளி­வி­வ­கார அமைச்சின் பக்­கத்­தி­லி­ருந்து கொழும்பு துறை­மு­கத்­துக்கு செல்­வ­தற்­காக அமைந்­துள்ள பாது­காப்­பான பாதை­யூ­டாக ஜனா­தி­ப­தியை அழைத்துச் செல்­வ­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது இத­னா­லாகும். பாது­காப்பு பிரிவின் அதி­கா­ரி­க­ளுடன் ஜனா­தி­பதி “கஜ­பாகு” கப்­ப­லுக்கு பாது­காப்­பாக அழைத்துச் செல்­லப்­பட்டார். ஜனா­தி­பதி கஜ­பாகு கப்­ப­லுக்குள் உட்­பி­ர­வே­சித்த நிலையில் போராட்­டக்­கா­ரர்கள் ஜனா­தி­பதி மாளி­கையின் வாயிற் கத­வினை உடைத்துக் கொண்டு உட்­பி­ர­வே­சித்­தார்கள்.

கடற்­படை தள­ப­தி­யுடன் கடற்­ப­டையின் கப்பல் ஜனா­தி­ப­தி­யையும் அவ­ரது பாரி­யா­ரையும் சுமந்து நீரில் பய­ணித்­தது. பாது­காப்­பாக டோன இயந்­தி­ரமும் பய­ணித்­தது. போராட்­டக்­கா­ரர்கள் ஜனா­தி­ப­தியை ஜனா­தி­பதி மாளி­கையில் தேடிக்­கொண்­டி­ருக்­கையில் அனை­வ­ரையும் ஏமாற்­றி­விட்டு ஜனா­தி­ப­தி­யுடன் கப்பல் இர­க­சி­ய­மாக திரு­கோ­ண­மலை கடற்­படை துறை­முகம் வரை பய­ணித்­தது. அங்கு திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தில் அதி­தீ­வி­ர­மான பாது­காப்­பான இட­மொன்றில் ஜனா­தி­ப­திக்கும் அவ­ரது பாரி­யா­ருக்கும் தங்­கு­மிடம் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தது. விமா­னப்­ப­டையின் அதி­யுயர் பாது­காப்பு வழங்­கப்­பட்­டது.

அங்கு திரு­கோ­ண­ம­லையில் ஜனா­தி­பதி தங்­கி­யி­ருந்­த­போது அவரை அவ­ச­ர­மாக வெளி­நாட்­டுக்கு அனுப்பி வைக்கும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அரச இரா­ஜ­தந்­திர ஒத்­து­ழைப்­புடன் பாது­காப்பு மற்றும் உளவுத்துறை அதி­கா­ரிகள் ஜனா­தி­ப­தியை அழைத்துச் செல்லும் திட்­டங்­களை தயா­ரித்­தனர்.

மறு­தினம் அதா­வது கடந்த 10 ஆம் திகதி பிர­புக்­களை (விசேட பிர­மு­கர்கள்) போக்­கு­வ­ரத்துச் செய்­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் இரண்டு ஹெலி­கப்­டர்கள் இரத்­ம­லா­னை­யி­லி­ருந்து திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­முக்குப் பறந்­தன. பிர­புக்கள் பாது­காப்பு படை­யணியின் கட்­டளை பிறப்­பிக்கும் அதி­கா­ரியின் கீழ் இந்த ஹெலி­கப்­டர்கள் திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­முக்குச் சென்­றன. ஜனா­தி­பதி இந்த ஹெலி­கப்­டரில் பய­ணித்­த­வேளை அதன் விமா­னி­யாக கட்­டளை அதி­கா­ரியே கட­மை­யாற்­றினார்.

போராட்­டக்­கா­ரர்­களால் முழு­நாடும் குழப்­ப­மான நிலை­யி­லி­ருந்த சந்­தர்ப்­பத்­திலே ஜனா­தி­பதி மீண்டும் கொழும்­புக்கு வரு­வ­தற்கு தீர்­மா­னித்தார். ஜூலை 11 ஆம் திகதி ஜனா­தி­ப­தியும் அவ­ரது பாரி­யாரும் விசேட பிர­மு­கர்கள் பய­ணிக்கும் ஹெலி­கப்­டரில் இரத்­ம­லானை விமா­னப்­படை முகா­முக்கு பிற்­பகல் 1 மணி­ய­ளவில் வந்து சேர்ந்­தார்கள். திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­மி­லி­ருந்தே அவர்கள் வந்து சேர்ந்­தார்கள். கடற்­படை தள­ப­தியும் ஜனா­தி­ப­தி­யுடன் பய­ணத்தில் இருந்தார்.

அப்­போது பாது­காப்பு அமைச்சின் செய­லாளர், பாது­காப்பு சபை பிர­தானி, விமா­னப்­படை தள­பதி, இரா­ணு­வத்­த­ள­பதி ஆகி­யோரும் இரத்­ம­லானை விமா­னப்­ப­டை­மு­கா­முக்கு வருகை தந்­தி­ருந்­தனர்.

ஜனா­தி­பதி இரத்­ம­லானை விமா­னப்­படை முகாமில் பாது­காப்பு படை­களின் தலை­வர்­க­ளுடன் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்து கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்டார். ஜனா­தி­ப­தியின் பாரியார் அயோமா ராஜ­பக்ஷ பாது­காப்­பாக மோட்டார் வண்­டியில் மிரி­ஹான இல்­லத்­துக்கு அழைத்துச் செல்­லப்­பட்டார்.

நாட்­டி­லி­ருந்து வெளி­யேறிச் செல்­வ­தற்கு முன்பு தனது முக்­கிய ஆவ­ணங்கள் மற்றும் தேவை­யான பொருட்­களை வீட்­டி­லி­ருந்து எடுத்துச் செல்­வ­தற்கே அவர் அவ்­வாறு சென்­றி­ருந்தார். மிரி­ஹான இல்­லத்தின் சாவிக் கொத்து அவ­ரி­டமே இருந்­தது.
மிரி­ஹான இல்­லத்­தி­லிருந்து தேவை­யான பொருட்­களை எடுத்­துக்­கொண்டு இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் முக்­கிய பிர­மு­கர்கள் பாது­காப்பு பிரி­வினர் ஜனா­தி­ப­தியின் பாரி­யாரை இரத்­ம­லானை முகா­முக்கு மீண்டும் அழைத்து வந்­தனர்.

இரத்­ம­லா­னை­யி­லி­ருந்து ஜனா­தி­ப­தி­யையும் பாரி­யா­ரையும் மீண்டும் இரண்டு பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அழைத்துச் சென்று பாது­காக்கும் பொறுப்பு விமா­னப்­படை தள­ப­திக்கு வழங்­கப்­பட்­டது. கட்­டு­நா­யக்க விமா­னப்­படை முகாமில் விமா­னப்­படை தள­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­தலம் உட்­பட இரு­பா­து­காப்பு இல்­லங்கள் ஜனா­தி­ப­திக்­காக ஒதுக்­கப்­பட்­டது.

முழு நாட்­டிலும் ஜனா­தி­ப­தியை பதவி வில­கு­மாறு எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தன. என்­றாலும் நாட்­டி­லி­ருந்து வெளி­யேறிச் செல்லும் வரை தான் பத­வி­யி­லிருந்தும் வில­கு­வதை ஜனா­தி­பதி தவிர்த்து கொண்டார். ஜனா­தி­பதி பத­வி­யின்றி நாட்­டி­லி­ருந்து சாதா­ரண பிரஜை போல் வெளி­யே­றினால் அவ­ரது உயி­ருக்கு ஆபத்து என உளவு பிரி­வினர் தொடர்ந்து ஜனா­தி­ப­திக்கு ஆலோ­சனை வழங்கி வந்­தனர்.

ஜனா­தி­ப­திக்கு அமெ­ரிக்க விசா நிரா­க­ரிக்­கப்­பட்ட நிலையில் வேறு சில நாடு­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டன. வாட­கைக்கு பெற்­றுக்­கொள்­ளப்­படும் வணிக விமானம் மூலம் ஜனா­தி­ப­திக்கு வெளி­நாட்­டுக்குச் செல்லும் வாய்ப்­புகள் உள்­ள­னவா என முயற்­சித்­தனர். இதற்கு மேலைத்­தேய நாடுகள் உட்­பட பல நாடு­க­ளி­லி­ருந்து அனு­மதி கிடைக்­க­வில்லை.

ஜனா­தி­ப­தியை இந்­தி­யா­வுக்கு அழைத்துச் சென்று அங்­கி­ருந்து பாது­காப்­பாக சிங்­கப்­பூ­ருக்கு அழைத்துச் செல்லும் முயற்­சியும் பல­ன­ளிக்­க­வில்லை. ஸ்ரீலங்கன் விமானம் மூலம் ஜனா­தி­ப­தியை அழைத்துச் செல்­வது ஆபத்­தா­னது என பாது­காப்பு அதி­கா­ரிகள் சுட்­டிக்­காட்­டினர்.

விமா­னிகள் மற்றும், விமான பணி­யா­ளர்கள் ஜனா­தி­ப­தியை விமா­னத்தில் அழைத்துச் செல்ல முடி­யா­தென்­பதை தெளி­வு­ப­டுத்­தி­யதே இதற்­கான கார­ண­மாகும். தொழிற்­சங்கம் இது தொடர்பில் பலத்த எதிர்ப்­பினை வெளி­யிட்­டது.

ஜூலை 12 ஆம் திகதி பகல் தரை­மார்க்­க­மாக பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளுடன் ஜனா­தி­பதி பத்­த­ர­முல்ல இரா­ணுவ தலை­மை­ய­கத்­துக்கு அழைத்துச் செல்­லப்­பட்டார்.

அன்று பகல் இரா­ணுவ தலை­மை­யகம் ஜனா­தி­ப­தியின் பாது­காப்­பான இட­மாக மாறி­யது. அங்கு பாது­காப்பு படை பிர­தா­னிகள், படைத்­த­ள­ப­திகள் உட்­பட பாது­காப்புச் சபையை ஒன்று கூட்­டிய ஜனா­தி­பதி எதிர்­கால நட­வ­டிக்கை பற்றி கலந்­து­ரை­யா­டினார். மற்றும் சபா­நா­ய­க­ரு­டனும் பேச்சு வார்த்தை நடத்­தினார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இரா­ணுவ தலை­மை­ய­கத்தில் இருந்து ஜனா­தி­ப­தி­யு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் பங்கு கொண்டார்.’

பத்­த­ர­முல்ல இரா­ணுவ தலை­மை­ய­கத்தை நிறு­வி­யது கோத்­தா­பய ராஜ­பக்ஷ என்­பதை சிரச தொலைக்­காட்சி வீடியோ பதி­வொன்றின் மூலம் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யது. பத்­த­ர­முல்ல இரா­ணுவ தலை­மை­ய­கத்தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது ஜனா­தி­பதி வெளி­நா­டொன்­றுக்குச் சென்­ற­வுடன் இரா­ஜி­னாமா செய்­வ­தென்­பது இறு­தித்­தீர்­மா­ன­மாக நிறை­வேற்­றப்­பட்­டது. வாட­கைக்கு பெற்­றுக்­கொள்ளும் வணிக விமானம் மூலம் ஜனா­தி­பதி நாட்­டை­விட்டு வெளி­யே­று­வதில் உள்ள சவால்கள் கவ­னத்தில் கொள்­ளப்­பட்டு விமா­னப்­ப­டையின் விமா­ன­மொன்றின் மூலம் வெளி­நாடு செல்­வது இறுதி திட்­ட­மாக அமைந்­தது.

விமா­னப்­ப­டைக்குச் சொந்­த­மான அன்ட நோவ் 32 விமானம் மூலம் ஜனா­தி­ப­தியை அழைத்துச் செல்­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டது. விமா­னப்­ப­டை­யிடம் உப­யோ­கி­க்கக்­கூ­டிய நிலை­மை­யி­லி­ருந்த அன்­டனோவ் விமா­னங்கள் மூன்றும் ரஷ்ய யுக்ரேன் யுத்தம் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்பு யுக்­ரே­னுக்கு அனுப்­பப்­பட்டு மீள் புதுப்­பிக்­கப்­பட்­ட­வை­யாகும்.
ஜனா­தி­பதி தான் வெளி­நா­டு­க­ளுக்குச் செல்லும் முயற்­சிகள் தோல்வி கண்­ட­த­னை­ய­டுத்து இரா­ணுவ தலை­மை­ய­கத்தில் இருந்து கொண்டே மாலை­தீவு ஜனா­தி­ப­தியை தொடர்பு கொண்டார். மாலை­தீவு ஜனா­தி­பதி மாலை­தீ­வுக்கு வரும்­படி அழைத்­த­தை­ய­டுத்தே பய­ணத்­திற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

மாலை­தீவில் ஜனா­தி­பதி
ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ மாலை­தீ­வுக்குச் செல்­வ­தற்கு அந்­நாட்டு ஜனா­தி­ப­தியின் அனு­ம­தியைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை அந்­நாட்டின் சபா­நா­ய­கரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மொஹமட் நஷீட்மேற்கொண்டார்.அவரது உயி­ருக்கு ஆபத்து ஏற்­பட்­ட­போது அவரை இலங்­கைக்கு அழைத்து வந்து பாது­காப்பு வழங்­கி­யது அப்­போ­தைய இலங்கை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஆவார்.

அன்­றி­ரவு இரா­ணுவ தலை­மை­ய­கத்தில் கோத்­தா­பய ராஜ­பக்ஷ இரவு உணவை எடுத்தார். பின்பு உட­ன­டி­யாக இரவு 10 மணி­ய­ளவில் விசேட பாது­காப்­புக்கு மத்­தியில் கட்­டு­நா­யக்க நோக்­கிப்­பு­றப்­பட்டார். கட்­டு­நா­யக்க விமா­னப்­ப­டை­மு­காமில் ஜனா­தி­ப­திக்கும் அவ­ரது பாரி­யா­ருக்கும் விசேட பாது­காப்பு வழங்­கப்­பட்­டது.

அன்று இரவு 12 மணி­யா­கும்­போது விமா­னப்­படை அதி­கா­ரிகள் ஜனா­தி­ப­தி­யி­னதும் பாரி­யா­ரதும் விமானப் பய­ணத்­துக்­கான ஆவ­ணங்­களை சுங்க திணைக்­களம் மற்றும் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தில் சமர்ப்­பித்து அதற்­கான அனு­ம­தி­யினைப் பெற்­றுக்­கொண்­டனர்.ஜனா­தி­ப­தியின் பாது­காப்­பினை அவ­ரது தனிப்­பட்ட பாது­காப்பு அதி­கா­ரி­க­ளான மேஜர் ஜெனரல் மஹிந்த ரண­சிங்க, கமாண்டோ பிரிவின், பிரி­கே­டியர் மதுர விக்­கி­ரமரத்ன ஆகியோர் பெறுப்­பேற்­றனர்.

அன்டநோவ் விமானத்தின் விமானியாக விமானப்படையின் 2ஆவது பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கெப்டன் தான் வெலகெதர செயற்பட்டார்.

கோத்தாபய ராஜபக்ஷவின் விமான பயணத்துக்கு மாலைதீவு அரசு அனுமதி வழங்கியிருந்தாலும் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதனால் விமானப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்டநோவ் விமானம் மாலைதீவு விமான நிலையத்தின் அனுமதி கிடைக்கும்வரை தரித்திருந்ததது.

மாலைதீவு விமான நிலையத்திலிருந்து அனுமதி கிடைக்கப்பெற்றதையடுத்து கடந்த 13 ஆம் திகதி அதிகாலை 1 மணிக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. ஒரு மணித்தியாலயம் 40 நிமிட பயணத்தின் பின்பு, ஜனாதிபதியும் பாரியாரும் மாலைதீவு விமான நிலையத்தில் இறங்கினார்கள். விமானம் மீண்டும் காலை 7 மணிக்கு இலங்கைக்கு திரும்பியது.

விமா­னப்­படை உட்­பட ஏனைய பாது­காப்புப் படை­யினர் இந்த செயற்­பா­டு­களை கோத்­தா­ப­ய­ரா­ஜ­ப­க்ஷ­வுக்­காக மேற்­கொள்­ள­வில்லை. இலங்கை ஜன­நா­யக சோச­லிச குடி­ய­ரசின் ஜனா­தி­பதி என்ற ரீதியில் படை­களின் தலைவர் என்ற வகை­யி­லுமே இச்­செ­யற்­பா­டுகள் முன்னெடுக்கப்பட்டன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முப்படை­களின் தள­பதி என்ற வகையில் அவர் வழங்கும் சட்ட ரீதி­யான உத்­த­ர­வு­களை முப்­ப­டை­யினர் ஏற்­றுக்­கொள்­வ­தற்கு கட்­டுப்­பட்­டுள்­ளனர். உத்­த­ர­வு­களைப் புறக்­க­ணிப்­பது அரச துரோக குற்­ற­மாகும். இந்தக் குற்­றத்­துக்­காக நீதி­மன்றில் வழக்கு தொடர்ந்து மர­ண­தண்­டனை வழங்க முடியும்.

இந்­நி­லையில் உணர்ச்சி மேலீட்­டினால் ஆவே­சத்­துக்­குள்­ளா­கி­யி­ருக்கும் மக்கள் நாட்டின் அர­சியல் யாப்பு மற்றும் முப்­ப­டை­களின் சட்­டங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள அதி­கா­ரங்கள் என்­ப­ன­வற்றை அறி­யாது கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கு வெளி­நாட்­டுக்குச் செல்­வ­தற்கு விமானம் வழங்­கி­யது எவ்­வாறு? எப்­படி அவ­ருக்குப் பாது­காப்பு வழங்­க­மு­டியும் என்று கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­றனர்.

இக்­க­ட­மை­களை படை­யி­னரால் நிறை­வேற்­றாது இருக்க முடியாது. ஏனென்றால் அவர் கோத்தாபய ராஜபக்ஷ என்றாலும் பதவியினால் ஜனாதிபதியாவார்.
புதன்கிழமை அதிகாலை மாலைதீவைச் சென்றடைந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அங்கு தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். பின்னர் அங்கிருந்து மறுநாள் வியாழக்கிழமை அவர் சிங்கப்பூருக்குப் பயணித்தார். ஹஜ் யாத்திரிகர்களை ஏற்றிக் கொண்டு மாலைதீவு வழியாக சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த சவூதி எயார்லைன்ஸ் விமானத்திலேயே அவர் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் தரையிறங்கியதும் முதல் வேலையாக அவர், தனது இராஜினாமாக் கடிதத்தை மின்னஞ்சல் வழியாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவரது கையெழுத்திடப்பட்ட இராஜினாமாக் கடிதம் சிங்கப்பூரிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து, கோத்தாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.