28 இல் வக்பு சபை கூடுகிறது

0 314

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
புத்­த­சா­சனம், மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்­க­வினால் வக்பு சபையின் அமர்­வு­கள் சில தினங்கள் இடை­நி­றுத்­தப்­பட்டு மீண்டும் அதன் பணி­களைத் தொடர்­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து வக்­பு­சபை கூட்டம் எதிர்­வரும் 28ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

28 ஆம் திகதி கொழும்­பி­லுள்ள வக்பு சபை கட்­டி­டத்தில் பிற்­பகல் 2 மணிக்கு கூட்டம் ஆரம்­ப­மா­க­வுள்­ள­தா­கவும், நிலு­வை­யி­லுள்ள பள்­ளி­வாசல் தொடர்­பான விவ­கா­ரங்கள் ஆரா­யப்­பட்டு தீர்வு வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

மேலும் அவர் கருத்து தெரி­விக்­கையில், கடந்த 19 ஆம் திகதி வக்­பு­சபை கூட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­த­போதும் எரி­பொருள் தட்­டுப்­பாடு கார­ண­மாக கூட்டம் எதிர்­வரும் 28 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. கடந்த 5 வாரங்களாக கூட்டம் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டது என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.