ரணிலின் வீடு எரிய ஹக்கீம் காரணமா?

0 482

றிப்தி அலி

“எனது வீடு தீக்­கி­ரை­யா­கி­ய­மைக்கு நீங்கள் பதி­விட்ட ட்டுவிட்டே கார­ண­மாகும். இதற்­கான பொறுப்பை நீங்கள் தான் எடுக்க வேண்டும்”.

இவ்­வாறு கடந்த திங்­கட்­கி­ழமை (11) சபா­நா­யகர் தலை­மையில் நடை­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீமை கடு­மை­யாக சாடினார் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க.

இதனால் குறித்த கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்­கீ­முக்கும் இடையில் சில நிமி­டங்கள் கடும் வாய்த்­தர்க்கம் இடம்­பெற்­ற­தாக அறிய முடி­கி­றது.

கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வினை ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து வில­கு­மாறு கோரி பாரிய போராட்­ட­மொன்று கடந்த சனிக்­கி­ழமை (09) காலி முகத்­தி­டலில் இடம்­பெற்­றது.
நாட்டின் பல பிர­தே­சங்­களைச் சேர்ந்த சுமார் 100,000க்கும் மேற்­பட்ட அனைத்து இனங்­க­ளையும் சேர்ந்த மக்கள் இந்த போராட்­டத்தில் கலந்­து­கொண்­டனர்.

அப்­போது கோட்­டா­பய ராஜ­பக்ஷ தங்­கி­யி­ருந்த கொழும்பு, கோட்­டை­யி­லுள்ள ஜனா­தி­பதி மாளி­கை­யினை முற்­று­கை­யிட போராட்­டக்­கா­ரர்கள் முயன்­றனர்.

எனினும், இந்த மாளி­கை­யினைச் சுற்றி கம்பி வேலி­க­ளினால் பலத்த தடைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­துடன் ஆயி­ரக்­க­ணக்­கான இரா­ணு­வத்­தினர், பொலிஸார் மற்றும் விசேட அதி­ரடிப் படை­யினர் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது பாது­காப்புத் துறை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட கண்­ணீர்ப்­புகை மற்றும் தண்ணீர்ப் பிர­யோகம் ஆகி­ய­வற்­றினை தாண்­டியும் பல மணித்­தி­யால போரட்­டத்தின் பின்னர் சுமார் நண்­பகல் 12.10 மணி­ய­ளவில் போராட்­டக்­கா­ரர்கள் ஜனா­தி­பதி மாளி­கை­யினுள் நுழைந்­தனர்.

எனினும், போராட்­டக்­கா­ரர்கள் நுழை­வ­தற்கு சில மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்னர் வரை அங்கு தங்­கி­யி­ருந்த கோட்­டா­பய ராஜ­பக்ஷ, மாளி­கையின் பின் வழி­யினால் கொழும்பு துறை­முகத்­திற்குள் தப்­பி­யோ­டி­ய­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன.

ஜனா­தி­பதி மாளிகை முற்­று­கை­யி­டப்­பட்ட பின்னர், கோட்­டா­பய ராஜ­பக்ஷ உட­ன­டி­யாக ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்­பெற்­றது.
இவ்­வா­றான நிலையில் கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவின் சொந்தக் கட்­சி­யான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன்னாள் அமைச்சர் டளஸ் அழ­கப்­பெ­ரும தலை­மையில் ஜனா­தி­பதி உட­ன­டி­யாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்­கை­யினை முன்­வைத்­தனர்.

இந்த நிலையில் நாட்டில் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண நிலை தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான அழைப்­பொன்­றினை சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்த்­தன விடுத்தார்.
இதற்­க­மைய சனிக்­கி­ழமை 4.00 மணிக்கு சபா­நா­ய­கரின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் நடை­பெற்ற கூட்­டத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஜீ.எல். பீரிஸ், டலஸ் அழ­கப்­பெ­ரும, ரவூப் ஹக்கீம், றிசாத் பதி­யுதீன், அது­ர­லிய ரத்ன தேரர், சந்­திம வீரக்­கொடி போன்ற பலர் கலந்­து­கொண்­டனர். இதற்கு மேல­தி­க­மாக சில கட்சித் தலை­வர்கள் சூம் தொழி­நுட்­பத்தின் ஊடா­கவும் பங்­கேற்­றனர்.

இதன்­போது ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகியோர் உட­ன­டி­யாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்­கை­யினை இரு­வ­ருக்கும் சபா­நா­யகர் முன்­வைக்க வேண்டும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இந்த இரா­ஜி­னா­மாவை அடுத்து அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் சபா­நா­யகர் தற்­கா­லிக ஜனா­தி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட வேண்டும் எனவும் இக்­கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.
அத்­துடன் அனைத்துக் கட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கிய அர­சாங்­க­மொன்­றையும் அமைக்க கட்சித் தலை­வர்கள் இக்­கூட்­டத்தில் இணங்­கினர்.

இந்த கூட்ட முடி­வுகள் தொடர்­பான அறி­விப்­பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீமே முதன் முத­லாக சனிக்­கி­ழமை பி.ப 5.09 மணிக்கு தனது டுவிட்டர் ஊடாக வெளி­யிட்டார்.

முத­லா­வது டுவிட் பதி­வேற்­றேப்­பட்ட சில நிமி­டங்கள் கழித்து “திருத்தம்” எனும் தலைப்பில் பி.ப 5.27 இற்கு மற்­று­மொரு டுவிட்டை அவர் பதி­வேற்­றி­ருந்தார்.
“ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகியோர் உட­ன­டி­யாக பதவி விலக வேண்டும் என்ற கட்சித் தலை­வர்கள் தீர்­மா­னத்தில் பிர­தமர் உடன்­ப­ட­வில்லை” என அந்த டுவிட்டில் குறிப்­பிட்­டி­ருந்­தது. இதற்கு ஆத­ரவு தெரி­விக்கும் வகை­யி­லான மற்­று­மொரு டுவிட்டை கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் பங்­கேற்ற தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­தி­ரனும் பதி­விட்டார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்­கீமின் இந்த டுவிட் சமூக ஊட­கங்­களில் வைர­லா­கி­ய­துடன், பிர­தான ஊட­கங்­களும் இந்த டுவிட்­டுக்கு முக்­கி­யத்­துவம் வழங்கி செய்தி வெளி­யிட்­டன.

இத­னை­ய­டுத்து ஆத்­தி­ர­ம­டைந்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள், கொழும்பு – 03, கொள்­ளுப்­பிட்­டியின் 5 ஆம் ஒழுங்­கை­யி­லுள்ள பிர­த­மரின் பிரத்­தி­யேக இல்­லத்­தினை முற்­று­கை­யிட தயா­ரா­கினர்.

இதனை அறிந்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, ரவூப் ஹக்­கீமின் டுவிட்­டுக்­கான மறுப்­ப­றிக்­கை­யொன்­றினை தனது ஊடகப் பிரிவின் ஊடாக வெளி­யிட்டார்.
அந்த அறிக்­கையில் “பிர­தமர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு சர்­வ­கட்சி ஆட்­சியை பொறுப்­பேற்க வழி­வகை செய்யத் தயார் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கட்சித் தலை­வர்­க­ளிடம் தெரி­வித்­துள்ளார்.

நாட­ளா­விய ரீதியில் எரி­பொருள் விநி­யோகம் இந்த வாரம் மீள ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாலும், உலக உணவுத் திட்டப் பணிப்­பாளர் இந்த வாரம் நாட்­டிற்கு வருகை தர­வுள்­ள­தாலும், சர்­வ­தேச நாணய நிதி­யத்­திற்­கான கடன் நிலைத்­தன்மை அறிக்கை வர­வுள்­ள­தாலும் இந்த முடிவை எடுத்­துள்­ள­தாக அவர் கூறு­கிறார்.

குடி­மக்­களின் பாது­காப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்­கட்சித் தலை­வர்­களின் இந்த பரிந்­து­ரையை அவர் ஏற்­றுக்­கொள்­கிறார்” எனக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.
எனினும் குறித்த ஊடக அறிக்­கை­யி­னையும் மீறி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் தனிப்­பட்ட இல்­லத்­தினை முற்­று­கை­யிட்­டனர். இதன்­போது ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ்­நி­லையின் போது பாது­காப்பு படை­யினர் சில ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீது தாக்­குதல் மேற்­கொண்­டனர்.

இத்­தாக்­குதல் சம்­ப­வங்கள் நியூஸ் பெஸ்ட் தொலைக்­காட்­சியில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்டுக் கொண்­டி­ருந்­தது. இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த சிலர் சனிக்­கி­ழமை இரவு 9.00 மணி­ய­ளவில் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் தனிப்­பட்ட இல்­லத்­திற்கு தீ வைத்­தனர்.

ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் அவ­ரது பாரியார் பேரா­சி­ரியர் மைத்ரி விக்­ர­ம­சிங்க ஆகி­யோரின் மறை­விற்கு பின்னர் கொழும்பு றோயல் கல்­லூ­ரிக்கு அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்­ட­வுள்ள பல கோடி பெறு­ம­தி­யான இந்த வீடு சில நிமி­டங்­களில் தீக்­கி­ரை­யா­கி­யது.
இந்த வீட்டில் நோய் வாய்ப்­பட்ட நிலையில் தங்­கி­யி­ருந்த பிர­த­மரின் பாரி­ய­ரான களனி பல்­க­லைக்­க­ழக போரா­சி­ரியர் மைத்ரி விக்­ர­ம­சிங்க பாது­காப்­பாக வேறு இடத்­திற்கு மாற்­றப்­பட்­ட­துடன் இங்­கி­ருந்த பெறு­ம­தி­யான புத்­த­கங்­களில் ஒரு தொகு­தியும் வேறு இடத்­திற்கு மாற்­றப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றான நிலையில் குறித்த எரிப்­பிற்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் சமூக ஊட­கங்­களில் பல்­வேறு கருத்துப் பதி­வுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இப் பின்­ன­ணியில் கடந்த திங்­கட்­கி­ழமை சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்த்­தன தலை­மையில் நடை­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தின் ஆரம்­பத்­தி­லேயே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தனது வீடு தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­ட­மைக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்­கீமை திட்டித் தீர்த்­துள்ளார்.

“கடந்த சனிக்­கி­ழமை (09) நடந்த கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் பதவி வில­க­மாட்டேன் என்று நான் ஒரு­போதும் கூற­வில்லை. புதிய ஆட்சி அமையும் போது பத­வி­யி­லி­ருந்து செல்வேன் என்­றுதான் கூறினேன். ஆனால், நீங்கள் இட்ட டுவிட்டால் எனது வீடு தீக்­கி­ரை­யாகும் நிலை ஏற்­பட்­டது. அதற்கு நீங்கள் தான் காரணம்” என்று ஹக்­கீமை நோக்கி கடுந்­தொ­னியில் சாடி­யுள்ளார் ரணில்.

இதற்கு ரவூப் ஹக்கீம் அளித்த பதிலை ரணில் ஏற்­க­வில்லை. நான் பதவி வில­க­மாட்டேன் என்று நீங்கள் கூறிய பொய்யால் ஆத்­தி­ர­முற்றோர் எனது வீட்­டினை தீக்­கி­ரை­யாக்­கினர் என்று ரணில் விக்­ர­ம­சிங்க ஆவே­ச­மாக குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த கூட்­டத்தின் பின்னர் நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்றி, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க வெளி­யிட்ட விசேட ஊடக அறிக்­கை­யிலும் தனது வீடு தீக்­கி­ரை­யாக்­கு­வ­தற்கு ரவூப் ஹக்­கீமே பொறுப்பு என அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ரணில் விக்ரமசிங்கவும் ரவூப் ஹக்கீமும் மிகவும் நெருங்கிச் செயற்பட்டனர். எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிக்கத் தொடங்கியதை அடுத்தே இவர்கள் இருவருக்கும் இடையில் பாரிய விரிசல் ஏற்பட்டது.
இவ்வாறு ரவூப் ஹக்கீம் மீது ரணில் விக்ரமசிங்க முன்வைக்கும் குற்றச்சாட்டின் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் மீது மீண்டும் இனவாதம் தலைதூக்குவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்­வா­றா­யினும், ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கு இது­வரை ரவூப் ஹக்கீம் பகி­ரங்­க­மாக எந்த பதி­லையும் முன்­வைக்­க­வில்லை.
இது தொடர்பில் இந்த கட்­டு­ரைக்கு சில கருத்­துக்­களை பெறு­வ­தற்­காக ரவூப் ஹக்­கீமை தொடர்­பு­கொள்ள முயற்­சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.