ஏறாவூர் தீவைப்பு சம்பவம்: 9 பேர் தொடர்ந்து விளக்கமறியலில்

0 333

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்­டக்­க­ளப்பு ஏறா­வூரில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இரவு இடம்­பெற்ற வன்­முறைச் சம்­பவம் தொடர்பில் 9 பேர் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

கடந்த 4 ஆம் திகதி 20 வய­து­டைய இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்­ட­துடன், இது­வரை 38 பேர் மாவட்ட குற்ற விசா­ரணைப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு, 28 பேர் பிணையில் விடு­விக்க­­ப்­பட்டுள்ளனர்.

சுற்­றா­டல்­துறை அமைச்சர் நஸீர் அஹ­மட்டின் காரி­யா­லயம், அவ­ரது உற­வி­னரின் வீடு மற்றும் ஹோட்­டல்­க­ளுக்கு தீயிட்டுக் கொளுத்­தி­யமை அத்­துடன் 3 ஆடைத்­தொ­ழிற்­சா­லைகளை சேதப்­ப­டுத்­தி­யமை தொடர்­பாக மாவட்ட குற்ற விசா­ரணைப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்­பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சுகத் மார­சிங்­ஹாவின் ஆலோ­ச­னைக்­க­மைய, மாவட்ட குற்ற விசா­ர­ணைப்­பி­ரிவு பொறுப்­ப­தி­காரி பி.எஸ்.பி. பண்­டார தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் தொடர்ந்து விசா­ர­ணையை மேற்­கொண்­டு­வந்த நிலையில், திங்­க­ளன்று 04.07.2022 ஒருவர் கைது செய்­யப்­பட்­டார். இத­னை­தை­ய­டுத்து, 16 வய­து­டைய 2 சிறு­வர்கள் உட்­பட இது­வரை கைது­செய்­யப்­பட்ட 38 பேர் ஏறாவூர் சுற்­றுலா நீதி­மன்ற நீதவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர்.

இவர்­களில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த 16 வய­து­டைய இரு சிறு­வர்கள் உட்­பட 28 பேர் நீதி­மன்ற பிணையில் விடு­விக்­கப்­பட்­ட­துடன், ஏனைய 9 பேர் தொடர்ந்து விளக்­க­ம­றியலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தொடர் விசா­ர­ணையில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.