மூடப்பட்ட பள்ளிகளை மீள திறப்பதற்கான நடவடிக்கையை திணைக்களம் செய்யும்

வக்பு சபையின் முன்னாள் தலைவர் சப்ரி ஹலீம்தீன்

0 357

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பல்­வேறு பிரச்­சி­னைகள் கார­ண­மாக நாட்டில் மூடப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­களை மீளத்­தி­றப்­பது தொடர்­பி­லான உத்­த­ர­வு­க­ளையும், வழி­காட்­டல்­க­ளையும் வக்பு சபை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ருக்கு வழங்­கி­யுள்­ளது. அந்த உத்­த­ர­வு­களை அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பான நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் பாது­காப்பு அமைச்சு மற்றும் கலா­சார அமைச்சின் ஊடா­கவும் தொடர்­பு­பட்ட நிறு­வ­னங்கள் ஊடா­கவும் மேற்­கொள்ளும் என வக்பு சபையின் முன்னாள் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்­ச­ரினால் நேற்று முன்­தினம் முதல் வக்பு சபை செயற்­பா­டுகள் உட­னடி­யாக அமு­லுக்கு வரும்­வரை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்­சினால் அறி­விக்­கப்­பட்­டது. வக்பு சபைக்கு புதி­ய­வர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். வக்பு சபையின் முன்னாள் தலை­வரைத் தொடர்பு கொண்டு அவ­ரது பத­விக்­கா­லத்தின் சேவைகள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

“நாரஹேன்­பிட்­டி­யி­லுள்ள பள்­ளி­வாசல் இலங்கை புகை­யி­ரத திணைக்­க­ளத்­துக்குச் சொந்­த­மான காணியில் அமைந்­துள்ள கார­ணத்தால் அதனை மூடி­விட்­டார்கள். இந்தப் பள்­ளி­வா­சலை மீளத்­தி­றப்­பதில் காணிப்­பி­ரச்­சி­னையே கார­ண­மாக உள்­ளது. அதே போல் மஹர சிறைச்­சாலை வளா­கத்­தி­லுள்ள பள்­ளி­வா­சலும் சிறைச்­சாலை நிர்­வா­கத்­தினால் மூடப்­பட்­டுள்­ளது. இந்தப் பள்­ளி­வா­சலை மீளத் திறப்­ப­தற்கு பல முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இவ்­வாறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­துள்ள பள்­ளி­வா­சல்­களை மீளத்­தி­றப்­ப­தற்­கான வழி­காட்­டல்­களும் உத்­த­ர­வு­களும் வக்பு சபை­யினால் திணைக்­க­ளத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.

வக்­பு­சபை பள்­ளி­வா­சல்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­பதில் முழு­மை­யாக செயற்­பட்­டுள்­ளது. என்­றாலும் கொவிட் 19 தொற்று, மற்றும் நாடு முடக்­கப்­பட்­டமை கார­ண­மாக பணி­களை முன்­னெ­டுப்­பதில் தாம­த­மேற்­பட்­டது.

நாட்டில் மின்­வெட்டு அமுல்­ப­டுத்­தப்­படும் நேரங்­களில் Flash Light வெளிச்­சத்தில் வக்பு சபை அமர்­வுகள் நடத்­தப்­பட்­டுள்­ளன.

வக்­பு­ச­பையின் பணிகள் சமூக உணர்­வுடன் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். அந்த வகையில் நானும் ஏனைய உறுப்­பி­னர்­களும் அர­சியல் தலை­யீ­டு­க­ளுக்கு இட­ம­ளி­யாது செயற்­பட்­டுள்ளோம்.

எமது பத­விக்­காலம் 2023 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் இறு­தி­யிலே காலா­வ­தி­யா­கி­றது. இந்­தக்­கால எல்­லைக்கு முன்பே சபை கலைக்­கப்­பட்­டுள்­ளது. நான் மூன்று தடவைகள் வக்பு சபையின் தலைவராகப் பதவி வகித்துள்ளேன். எனது பதவிக்காலத்தில் கடமையை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உட்பட ஏனைய அதிகாரிகளுக்கும், பள்ளிவாசல்களின் நிர்வாகிகளுக்கும் நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்’ என்றார். Vidivelli

Leave A Reply

Your email address will not be published.