கை கொடுக்குமா கட்டார்?

0 469

றிப்தி அலி

வலு சக்தி அமைச்சர் காஞ்­சன விஜே­சே­கர மற்றும் சுற்­றா­டத்­துறை அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் எரி­பொருள் நெருக்­க­டிக்கு தீர்வு காண்­ப­தற்­கான உத­வி­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக கட்­டா­ருக்­கான விஜ­ய­மொன்றை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (28) மேற்­கொண்­டுள்­ளனர்.

நாடு தற்­போது எதிர்­கொண்­டுள்ள டொலர் நெருக்­க­டி­யா­னது எரி­பொருள் இறக்­கு­ம­தியில் பாரிய தாக்­கத்­தினை செலுத்­தி­யுள்­ளது. இதனால் நாட்டில் ஏற்­பட்­டுள்ள எரி­பொருள் தட்­டுப்­பாடு கார­ண­மாக சகல துறை­களும் தற்­போது நெருக்­க­டிக்­குள்­ளாக்­கி­யுள்­ளன.

கடந்த இரண்­டரை மாதங்­க­ளாக இந்­தி­யா­வினால் வழங்­கப்­பட்ட எரி­பொருள் கட­னு­தவி கடந்த 15ஆம் திக­தி­யுடன் நிறை­வ­டைந்து விட்­டது.

இத­னை­ய­டுத்து எரி­பொருள் இறக்­கு­மதி விவ­காரம் நாட்டில் பெரும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யது. இம்­மாதம் 23 மற்றும் 24ஆம் திக­தி­களில் இரண்டு பெற்றோல் மற்றும் டீசல் கப்­பல்கள் நாட்டை வந்­த­டை­ய­வுள்­ள­தாக வலு சக்தி அமைச்­சரால் தெரி­விக்­கப்­பட்ட போதிலும், பின்னர் குறித்த கப்­பல்கள் வரும் தினத்தை உறு­தி­யாகக் கூற முடி­யாது என்று அறி­விக்­கப்­பட்­டது.

தற்­போது கையி­ருப்­பி­லுள்ள மிகக் குறைந்­த­ள­வி­லான எரி­பொ­ருளை எதிர்­வரும் ஜுலை 10ஆம் திகதி வரை அத்­தி­யா­வ­சிய சேவை­க­ளுக்கு மாத்­திரம் வரை­ய­றுக்­கப்­பட்­ட­ளவில் விநி­யோ­கிக்க அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­துள்­ளது.

இதன்­பொ­ருட்டு ஏனைய துறை­களை வீட்­டி­லி­ருந்து பணி­யாற்­று­மாறு பணிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் கிழக்கு மாகா­ணத்தில் மாத்­திரம் பாட­சா­லை­களை நடத்­து­மாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனு­ராதா யஹம்பத் உத்­த­ர­விட்­டுள்ளார். இதனால் அம்­மா­கா­ணத்­தி­லுள்ள ஆசி­ரி­யர்­களும், மாண­வர்­களும், பெற்­றோர்­களும் தினந்­தோரும் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­களை முகங்­கொ­டுத்து வரு­கின்­றனர்.

இதே­வேளை, அர­சாங்­கத்­தினால் இரா­ணு­வத்தின் உத­வி­யுடன் எரி­பொருள் விநி­யோ­கத்­திற்­கென டோக்கன் முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட போதிலும், அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. டோக்­கன்­களைப் பெற்­ற­வர்கள் கூட ஏமாற்­றத்­து­டன்தான் வீடு செல்ல வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதே­போன்று, கடந்த வெள்­ளிக்­கி­ழமை (24) சுகா­தார துறை­யி­ன­ருக்கு மாத்­திரம் எரி­பொருள் வழங்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது. எனினும், பல மணித்­தி­யா­லங்கள் வீதி­களில் காத்­தி­ருந்­து­விட்டு எரி­பொருள் நிரப்­பாமல் பல சுகா­தார ஊழி­யர்கள் வீடு திரும்­பி­யுள்­ளனர். அது மாத்­தி­ர­மல்­லாமல் சுகா­தாரத் துறை­யினர் எரி­பொருள் நிரப்ப வீதி­களில் காத்­தி­ருந்­த­மை­யினால் அன்­றைய தினம் பல வைத்­தி­ய­சா­லைகள் ஸ்தம்­பி­த­ம­டைந்­தி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இதனால் குறித்த செயற்­திட்­டமும் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

இந்­நி­லை­யில்தான், மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லி­ருந்து எரி­பொ­ருளைப் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்­கு­மாறு பல்­வேறு தரப்­புக்கள் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி வந்­தன.

ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­ஸவின் ஆட்சிக் காலத்தில் இன்று முகங்­கொ­டுப்­பதைப் போன்ற எரி­பொருள் பிரச்­சி­னை­யொன்­றினை நாடு எதிர்­நோக்­கி­யி­ருந்­தது. இதன்­போது இலங்கை விடுத்த வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க எந்­த­வித நிபந்­த­னை­யு­மின்றி ஒரே இரவில் இரண்டு எரி­பொருள் கப்­பல்­களை அனுப்பி ஈராக் இலங்­கைக்கு உத­வி­யி­ருந்­தது.
அது போன்று இறு­திக்­கட்ட யுத்­தத்தில் நாடு எதிர்­நோக்­கிய எரி­பொருள் பிரச்­சி­னைக்கு நிபந்­த­னை­யின்றி ஈரான் எரி­பொருள் வழங்­கி­யது. அதற்­கான கடனை இன்னும் இலங்கை செலுத்தி முடிக்­க­வில்லை என்­பதும் முக்­கிய விட­ய­மாகும்.

இது போன்று பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் அரபு நாடுகள் எந்­த­வித நிபந்­த­னை­க­ளையும் முன்­வைக்­காமல் இலங்­கைக்கு உத­வி­யுள்­ளன. எனினும், ஈஸ்டர் தற்­கொலை தாக்­கு­த­லுக்கு பின்னர் இலங்கை முஸ்­லிம்கள் இலக்கு வகைக்­கப்­பட்டு தாக்­கப்­பட்ட விடயம் அனைத்து அரபு நாடு­க­ளுக்கும் தெரியும்.

அது மாத்­தி­ர­மல்­லாமல், கொவிட் ஜஸாக்­களை பல­வந்­த­மாக தகனம் செய்­வதை நிறுத்­து­மாறு கொழும்­பி­லுள்ள அரபு நாட்டுத் தூது­வர்கள் கூட்­டா­கவும் தனி­யா­கவும் கோரிக்கை விடுத்­தனர். அது மாத்­தி­ர­மன்றி, இஸ்­லா­மிய நாடு­களின் கூட்­ட­மைப்பும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்­தி­ருந்­தது.

எனினும், இந்தக் கோரிக்­கை­களை ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ கணக்­கி­லெ­டுக்­க­வில்லை. இதன் கார­ண­மா­கவே அரபு நாடுகள் இலங்கைக்கு உதவி செய்­வ­தற்கு தற்­போது ஆர்­வத்தை வெளிப்­ப­டுத்­தா­தி­ருக்­கின்­றன.

இவ்­வா­றான நிலையில், பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ பிர­த­ம­ராகப் பதவி வகித்த சமயம் அமைச்­சர்­க­ளான சரத் வீர­சே­கர, உதய கம்­மன்­பில, அலி சப்ரி, பந்­துல குண­வர்­தன, ஜீ.எல். பீரிஸ் போன்ற பல அமைச்­சர்கள், மத்­திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்­ளிட்ட பல அரச உயர்­மட்டக் குழுக்கள் அரபு நாடு­க­ளுக்கு விஜயம் செய்து பல உத­வி­களை கோரி­யி­ருந்­தன.

எனினும், இலங்­கையின் எந்­த­வொரு கோரிக்­கைக்கும் அரபு நாடுகள் இன்று வரை பச்­சைக்­கொடி காட்­ட­வில்லை. இந்த நிலை­யி­லேயே, எரி­பொருள் நெருக்­கடி தொடர்பில் பேச்சு நடத்த கட்டார் மன்­ன­ரி­ட­மி­ருந்து அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இலங்கை தூதுக்­கு­ழு­வொன்று கட்­டா­ருக்கு விஜயம் செய்­ய­வுள்­ள­தா­கவும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (26) கொழும்பில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் வலு­சக்தி அமைச்சர் காஞ்­சன விஜே­சே­கர தெரி­வித்தார்.

எனினும், இந்த விஜயம் கட்டார் மன்­னரின் அழைப்பின் பேரில் இடம்­பெ­று­வ­தாக அமைச்சர் கூறி­யி­ருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஆனால் அண்­மையில் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ, கட்டார் மன்­ன­ருக்கு மேற்­கொண்ட தொலை­பேசி அழைப்பின் போது விடுத்த வேண்­டு­கோ­ளுக்கு அமை­யவே கட்டார் உய­ர­தி­கா­ரி­களைச் சந்­திப்­ப­தற்கு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது.
இதே­வேளை, எரி­பொருள் தொடர்பில் பேச்சு நடத்த இரண்டு அமைச்­சர்கள் திங்­கட்­கி­ழமை (27) ரஷ்யா செல்­ல­வுள்­ள­தா­கவும் குறித்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் அமைச்சர் தெரி­வித்தார்.

எனினும், இது­வரை எந்­த­வொரு அமைச்­சரும் ரஷ்­யா­விற்­கான விஜ­யத்­தினை மேற்­கொள்­ள­வில்லை. விரக்­தி­யி­லுள்ள நாட்டு மக்­களை திசை திருப்பும் வகையில் அமைச்சர் கஞ்­சன விஜ­ய­ரத்ன தொடர்ச்­சி­யாக பிழை­யான தக­வல்­களை கூறி வரு­கின்­ற­மை­யி­னையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

இதே­வேளை, கட்­டா­ருக்­கான விஜயம் மேற்­கொண்­டுள்ள அமைச்­சர்­க­ளான நஸீர் அஹ­மதும், காஞ்­சன விஜ­ய­சே­க­ரவும் பல்­வேறு தரப்­பி­ன­ருடன் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இதில் வலு­சக்தி விவ­கார இரா­ஜாங்க அமைச்­சரும் கட்டார் வலு­சக்தி நிறு­வத்தின் தலை­வரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான சாட் ஷெரிடா அல்-­காபி மற்றும் அபி­வி­ருத்­திக்­கான கட்டார் நிதி­யத்தின் பிரதிப் பணிப்­பாளர் சுல்தான் அல் அசீரி ஆகி­யோ­ரு­ட­னான சந்­திப்­புகள் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இந்த சந்­திப்­புக்கள் தொடர்பில் அமைச்சர் காஞ்­சன பதி­விட்­டுள்ள டுவிட்டர் செய்­தியில், எரி­பொருள் நெருக்­க­டியை சமா­ளிப்­ப­தற்கு இலங்­கைக்கு பெற்­றோ­லிய பொருட்கள், திர­வ­மாக்­கப்­பட்ட பெற்­றோ­லிய வாயு (எல்.பி.ஜி) மற்றும் திரவ இயற்கை எரி­வாயு (எல்.என்.ஜி) என்­ப­வற்றை வழங்­கு­வது குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

கட்டார் வலு­சக்தி அமைச்சு மற்றும் கட்டார் அபி­வி­ருத்தி நிதி­யத்தின் உத­வி­யுடன் இலங்­கையின் எரி­பொருள் நெருக்­க­டியை சமா­ளிக்கும் நோக்கில் இந்த கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­ற­தாக குறிப்­பிட்டார்.

இலங்­கைக்கும் கட்­டா­ருக்கும் இடையில் 1976ஆம் ஆண்டு முதல் இரா­ஜ­தந்­திர உறவு பேணப்­பட்டு வரு­கின்­றது. அது மாத்­தி­ர­மல்­லாமல், பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் இலங்­கைக்கு கட்டார் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் கைகொ­டுத்து உத­வி­யுள்­ளது.
இவ்­வா­றான நிலையில் கட்டார் அர­சாங்­கத்தின் நேரடி கட்­டுப்­பாட்­டி­லுள்ள கட்டார் சரிட்டி 1993 முதல் இலங்­கையில் தனது தொண்டுப் பணி­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது.
அன்று முதல் 2018 வரை சுமார் 14 மில்லியன் கட்டார் ரியால்கள் பெறுமதியான உதவிகள் இலங்கையிலுள்ள தேவையுடைய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சுமார் 1000க்கும் மேற்பட்ட அநாதைச் சிறார்களுக்கு அனுசரணை வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கென ஓட்டமாவடி, கிண்ணியா, அதுகல மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களில் பாரிய வீடமைப்புத் திட்டங்கள் கட்டார் சரிட்டியால் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளன.

எனினும், ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் கட்டார் சரிட்டி பயங்கரவாத அமைப்பு என குற்றப்புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்ததது. இதனையடுத்து குறித்த அமைப்பின் பணிகள் இலங்கை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கட்டாருக்கு எதிராக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல போலிப் பிரச்சாரங்களுக்கு மத்தியில் கட்டார் இலங்கைக்கு உதவி செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.