1MDB அறிக்கையை மாற்றியமைத்தமை தொடர்பில் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப் றஸாக் மீது குற்றச்சாட்டு

0 603

முன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப் றஸாக் மீது நிதி மோசடி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் 1MDB கணக்காய்வு அறிக்கையை அரசாங்க முதலீட்டு நிதியமாக மாற்றியமைத்தமை தொடர்பில் மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்து பதவியிழந்த நஜீப் 1MDB சபைக் கூட்டத்தில் ஜோ லோ என பரவலாக அறியப்பட்ட தப்பியோடிய நிதியளிப்பாளரான லே டீக் ஜோ பங்குபற்றியிருந்தமையை 2016 ஆம் ஆண்டு கணக்காய்வு அறிக்கையில் ஒரு பகுதயில் மாற்றம் செய்தார் என நஜீப் றஸாக் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை கோலாலம்பூரிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  ரஸாக், தான் நிரபராதி எனத் தெரிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தண்டப்பணமும் விதிக்கப்படும் என அரச ஊடக முகவரகமான பேர்னாமா தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு 1MDB நிதி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியானபோது அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்த அருள் கந்தாவும் நஜீபுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.