இலங்கை முஸ்லிம்களின் மறக்கப்பட்ட வரலாறு – முடிவுரை

0 1,250

இலக்­கிய ஆதா­ரங்கள், வாய்­மொழி ஆதா­ரங்கள் அனைத்­திலும் கவனம் செலுத்தும் முயற்­சிகள் தேவை. ஒரு சிறு­பான்மை சமூ­கத்­திற்­குள்ள பிரச்­சி­னைகள், இஸ்­லா­மி­யர்­க­ளுக்­கு­ரிய வழக்­கா­றுகள், ஆட்­சி­யா­ளர்­க­ளாக முஸ்­லிம்கள் இல்­லாத நிலைமை என்­பன முஸ்லிம் சமூ­கத்தின் வர­லாற்றைக் கட்டி எழுப்­பு­வதில் பிரச்­சி­னை­க­ளாக உள்­ளன. எனினும், வர­வேற்­கத்­தக்க முன்­னேற்­றங்கள் இந்த துறையில் நடந்­தி­ருப்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

அதிகம் பேசப்­ப­டாத விட­யங்கள் பற்­றிய உணர்­வு­டன்தான் இக்­கட்­டுரைத் தொடர் நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஆரம்­ப­மா­கி­யது.

விடி­வெள்ளி ஆசி­ரியர் எம்.பீ.எம்.பைரூ­ஸுக்கு முதலில் நான் நன்றி சொல்ல வேண்டும். இந்தத் திட்­டத்தை அவ­ருடன் கலந்­து­ரை­யாடி ஒரு அறி­முக உரை­யுடன் ஆரம்­பித்தோம். சில மாதங்கள் நேர­டி­யா­கவே இவர் இதனை பார்த்து பிர­சுர வடி­வ­மைப்­புக்­களில் கவனம் செலுத்­தினார். இந்த வகையில் ‘இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாறு’ சொல்­லப்­ப­டு­வது ஒரு­தேவை என்ற ஆர்வம் அவ­ருக்கு இருந்­தது.

சில மாதங்­களின், பின்னர் விடிவெள்ளி பத்­தி­ரி­கையின் சிரேஷ்ட உதவி ஆசி­ரியர் எஸ்.என்.எம்.சுஹைல் இந்த பொறுப்பை ஏற்­றி­ருந்தார். படங்கள் பிர­சு­ரிப்­பது, பெயர்கள், ஆண்­டுகள், சொற்­பி­ர­யோ­கங்கள் பற்றி எங்­க­ளுக்குள் நடந்த தொலை­பேசி உரை­யா­டல்கள் சுவா­ரஸ்­ய­மா­னவை, பய­னுள்­ளவை. இந்­தக்­கட்­டு­ரை­களின் முதல் வாசகர் சுஹைல்தான். ஒட்­டு­மொத்த விடிவெள்ளி ஆசி­ரியர் பீடமும் பல வழி­களில் இதன் வெற்­றிக்கு உத­வி­யாக இருந்­துள்­ளது. முக்­கி­ய­மாக நிறு­வனம் இத்­தொடர் தொடர்ந்து வெளி­வ­ரு­வதில் தயக்­கங்­க­ளற்ற ஆத­ரவை வழங்­கி­யது மகிழ்ச்சி. இது சுதந்­தி­ர­மான என் எழுத்து.

நீண்­ட­கால வாசிப்பு, நேர்­மு­கங்கள், நேரடி அனு­ப­வங்கள் வழி­யாகப் பெற்ற தக­வல்கள், கருத்­துக்கள், ஆதா­ரங்கள் என்­பன முடிந்­த­ளவு இவ்­வெ­ழுத்தில் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன. இது­வரை பேசப்­ப­டாத, குறை­வாக பேசப்­பட்ட, கவ­னத்­திற்கு அதிகம் வராத விட­யங்கள், கருத்­துக்கள் இத்­தொ­டரில் உரை­யா­டப்­பட்­டுள்­ளன. தெரிந்த விட­யங்­க­ளாக இருந்­தாலும் புதிய ஒழுங்கில் சொல்­வ­தற்கும் வாத ஒழுங்கில் சில­வற்றைப் பேசு­வ­தற்கும் இத்­தொ­டரில் நான் முயன்­றுள்ளேன்.

‘இலங்­கையில் முஸ்­லிம்­களின் இருப்­பையும் சரித்­தி­ர­பூர்­வ­மான உரி­மை­க­ளையும் வெளிப்­ப­டை­யாக சரித்­திர பின்­ன­ணியில் அனஸ் நீங்கள் நிறு­விக்­காட்­டு­கி­றீர்கள்’ என்ற ஒரு வாச­கரின் வார்த்தை மகிழ்ச்சி தரு­கி­றது.

நிறைய வாச­கர்கள் இருந்­தார்கள். ஓர­ளவு வாசிப்­ப­றி­வுள்ள அடி­நிலை மக்கள் பலர் இத்­தொ­டரை வாசித்து வந்­ததை நான் நேரில் அறிவேன். பர­க­ஹ­தெ­னி­யாவில் ஒரு உணவு விடு­திக்கு நான் அடிக்­கடி செல்­வது வழக்கம். அங்கு சர்­வ­ராகப் பணி­யாற்றி வந்த வாசக நண்பர் ஒருவர், நான் அவ­ரது மேசைக்குச் செல்­லா­விட்­டாலும் தேடி வந்து அப்­போது புதி­தாக வந்த தொடர்­களின் முக்­கிய விப­ரங்கள் பற்றி என்­னுடன் கலந்­து­ரை­யா­டுவார். சாதா­ரண தரம் பயிலும் தனது பிள்­ளைகள் படிப்­ப­தற்­காக ஒவ்­வொரு பிர­தி­க­ளாகத் தேடிச் சேக­ரித்து வரு­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

கிழக்கு மாகா­ணத்­திலும் பல வாச­கர்கள் இருந்­தனர். மூத்த பிர­ஜையும் நிந்­தவூர் வர­லாற்று ஆசி­ரி­யரும் தொலை­பே­சி­யிலும் நேரில் (எனது வீட்­டுக்கு) வந்தும் இதன் முக்­கி­யத்­துவம் குறித்துப் பேசினார். கிண்­ணி­யாவில், கம்­மல்­து­றையில், கம்­ப­ளையில், ஆண்­டியா கட­வத்­தையில், கல்­பிட்­டியில், புத்­த­ளத்தில், வவு­னி­யாவில், கொழும்பில் என நாடு பூரா­கவும் இதற்கு வாச­கர்கள் இருந்­தனர்.

கல்­பிட்டி செல்­லும்­போது கல்­பிட்டி முஸ்லிம் வர­லாற்றில் ஆர்வம் உள்ள நண்பர் நாதன் வீடு சென்றால் அவ­ரது படிக்கும் மேசையில் விடிவெள்ளி அடுக்­கப்­பட்­டி­ருக்கும். இத்­தொ­டர்­பற்றி அவர் ஆர்­வத்­துடன் உரை­யா­டுவார். அனு­ரா­த­புரம் அன்பு ஜவர்ஷா, கொழும்பு நாகூர் கனி, புத்­தளம் இஸட்.ஏ.சனீர், தர்­கா­நகர் சனீர், களுத்­துறை ரினாஸ் எனப் ­பலர் இந்த எழுத்­துக்­களில் ஆர்வம் காட்­டி­ய­தோடு, இது தொட­ர­வேண்டும் என்றும் ஆர்­வ­மூட்­டினர்.

பொது­மக்கள் இந்தப் பிரச்­சி­னையை அறிந்து கொள்ள வேண்டும் என்­பது எனதும் விடிவெள்ளி ஆசி­ரியர் பீடத்தின் விருப்­ப­மா­கவும் இருந்­தது. உண்­மையில் இத்­தொடர் அதில் வெற்றி கண்­டுள்­ளது. இலங்­கையில் உள்ள பல பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் அத்­தொ­ட­ரினால் கவ­ரப்­பட்­டி­ருந்­தனர். பலர் என்­னுடன் நேரிலும் தொலை­பே­சி­யிலும் தொடர்பு கொண்டு பேசினர். தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக அரபு, இஸ்­லா­மிய பீட மாண­வர்கள் இந்தத் தொடர் பற்­றியும் முஸ்லிம் வர­லாறு பற்­றியும் கலந்­து­ரை­யா­டிய சந்­தர்ப்­பங்­களும் உண்டு.

பொது­வாக, இதை நூலாக பிர­சு­ரிப்­பது பற்றி எல்லா இடங்­க­ளிலும் வலி­யு­றுத்­தப்­பட்­டது. பொது வாச­கரை கவ­னத்திற் கொண்டு எழு­தப்­பட்­டி­ருந்­தாலும் தேவை­யான முறை­யியல் மற்றும் சான்­றா­தார ஒழுங்­குகள் இதில் கடைப்­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. பல நுண்­மை­யான விட­யங்­களும் விவா­திக்­கப்­பட்­டுள்­ளன. ஆயினும் நூலாக்­கத்­தின்­போது கவ­னிக்­கப்­ப­ட­வேண்­டிய விட­யங்கள் சில உள்­ளன. விரி­வு­க­ருதி, கடினம் கருதி, எழு­தப்­ப­டாத விட­யங்­களும் உள்­ளன. அந்த விட­யங்­க­ளையும் கவ­னத்திற் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் வர­லாறு பற்றி முஸ்­லிம்­களின் கவனம் விரி­வு­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்ற இத்­தொ­டரின் இலக்கு ஓர­ளவு வெற்றி கண்­டுள்­ளது என்­பது எனது எண்ணம். இதை நூலாக்­கு­வது அடுத்த கட்ட முயற்­சியும் முன்­னேற்­ற­மு­மாகும். பத்­தி­ரிகைத் தொடர்­க­ளுக்­கான குறைந்த ஆயுள்­பற்றி நாம் உணர்வோம்.

ஏன் வர­லாறு என்­பது ஒரு அபத்­த­மான கேள்வி. நாம் வாழ்ந்­தது வர­லாற்றில், வாழ்­வது வர­லாற்றில், வரப்­போகும் வாழ்வும் வர­லாற்றின் பதி­வு­க­ளுக்குச் செல்­லாமல் தப்­பு­வ­தில்லை. “மஹா­வம்சம்” “சூழவம்சம்” “யாழ்ப்­பாண வைப­வ­மாலை” இல்லை என்­பது அழுது மார­டிக்­கப்­பட வேண்­டிய விடயம் அல்ல. வர­லாற்றுத் தேடல் பல அரிய உண்­மை­களைக் கொண்டு வந்து சேர்க்கும். இந்த முயற்­சி­கள்தான் இப்­போது நடக்­கின்­றன. சில ஏற்­க­னவே நடந்­துள்­ளன. அவை பற்­றிய பல தக­வல்­களும் கருத்­து­களும் இக்­கட்­டு­ரைகள் தொடரில் இடம்­பெற்­றுள்­ளன.

ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ் கவனம் செலுத்­து­வற்கு முன்­னரே அவ­ரது படைப்­புக்­க­ளுக்கு ஆதா­ர­மா­யி­ருந்த தக­வல்­களும் கூட வர­லாற்றில் பதி­வாகி இருந்­தன. சேர்.பொன்­னம்­பலம் இரா­ம­நாதன் எதிர் கணிய ரீதியில் எழுதி இருந்­தாலும் முஸ்லிம் வர­லாற்­றுக்­கான தவிர்க்க முடி­யாத சில சான்­று­க­ளையும் அவர் உரை­யா­டி­யுள்ளார். அதனால் 19 ஆம் 20ஆம் நூற்­றாண்டின் ஆரம்ப கால எழுத்­துக்­களில் எமர்சன் டெனென்ட், சேர். அலெக்­சாண்டர் ஜோன்ஸ்டன், ஆர்.எல்.புரோ­ஹியர் போன்ற பலர் இதற்­கான பாதை­களைத் திறப்­பதில் முன்­னின்­றனர். தென்­னக தொன்மை முஸ்லிம் வர­லாற்­றையும் சேர்க்­கும்­போது நாம் அதிக ஆதா­ரங்­க­ளுக்கு உரி­மை­கூறக் கூடி­ய­வர்­க­ளா­கிறோம். இத்­தொடர் இந்த விட­யங்­களை ஆராய்­வதில் அதிகம் கவனம் செலுத்தி உள்­ளது. வர­லாற்றில் நாங்கள் யார்? எங்கள் வர­லாறு என்ன? என்ற கேள்­வி­க­ளுக்கு பார­பட்­ச­மற்ற முறையில் விடை­காண்­ப­தற்கும் இஸ்­லாத்தின் தொடக்க காலத்­துடன் ஹிஜ்ரி ஆண்­டு­களின் ஆரம்பக் கட்­டத்­தி­லேயே கேரளம், தமிழ்­நாடு, தென்­கி­ழக்­கா­சியா, இலங்­கையில் நடந்த முஸ்லிம் குடி­யேற்­றங்கள் பற்­றிய உரை­யா­டல்கள் இத்­தொ­டரின் அடிப்­படை கருத்­தாக இருந்­துள்­ளன.

வர­லாற்று அறிவு மற்றும் விவா­தங்கள் இன்­மை­யினால் வர­லாறு பின்­தள்­ளப்­பட்­டது என்­பது ஒரு சமூ­கத்தின் மீதும் அதன் அறி­வின்­மீதும் ஏற்­படும் சுமத்­தப்­படும் அவச்­சொல்­லாகும். இது ஒரு கடி­ன­மான ஆனால் இனி­மை­யான பயணம். நிபந்­த­னைகள் அற்ற முறையில் அதில் நாம் பிரவேசித்திருக்கிறோம். பல முஸ்லிம், தமிழ், சிங்­கள புத்­தி­ஜீ­விகள், ஆய்­வா­ளர்கள், இன்றும் பல வழி­காட்­டு­தல்­க­ளையும் கருத்­துக்­க­ளையும் முன்­வைத்து வரு­வது நம்­பிக்­கை­யூட்டும் நட­வ­டிக்­கை­யாகும். விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் பைரூஸுடன் நடத்திய தொடக்க உரையாடல் இன்று போல் நினைவில் உள்ளது. ‘நீங்கள் எழுதுங்கள் விடிவெள்ளி பிரசுரிக்கும்’ இதுதான் பேச்சு, இதுபோன்ற ஒரு நூலை நான் எழுதுவதாக இருந்தாலும் அது எழுதப்பட்டிருக்குமா என்பது ஐயம். ஆகவே நான் விடிவெள்ளி ஆசிரியர் பீடத்திற்கும், பத்திரிகை நிறுவனத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்து என்னை ஊக்கப்படுத்திய வாசக நண்பர்களிடமிருந்து இத்தொடரை நிறைவுக்கு கொண்டுவந்து விடைபெறுகிறேன்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.