நாகப்பாம்புகளுடன் நடனமாடிய இளைஞன் பாம்பு தீண்டி உயிரிழப்பு

0 594

(யு.எல்.முஸம்மில்)
நாகப்­பாம்பு மற்றும் விஷப் பாம்­பு­களை கூண்டில் அடைத்து கூண்­டி­லி­ருந்து கொண்டு பாம்­பு­க­ளுடன் சாகசம் புரிந்து வந்த இளைஞர் ஒருவர் நாகப் பாம்பு தீண்­டி­யதில் கடந்த சனிக்­கி­ழமை உயிரிழந்தார்.

குரு­நாகல் மடிகே மிதி­யா­லையைச் சேர்ந்த எம்.ஆர் . எம். ரிப்கான் எனும் 19 வய­து­டைய இளை­ஞரே இவ்­வாறு உயி­ரி­ழந்தார். மேற்­படி இளைஞர் இது­போன்று சாகசம் புரியும் நண்­பர்­க­ளுடன் இணைந்து ஏற்­க­னவே பயிற்­சிகள் பெற்­றுள்­ள­துடன் தான் தனி­யாக இது போன்ற சாகச காட்­சி­களை செய்­வ­தற்கு ஆரம்­பித்து சுமார் நான்கு மாதங்கள் ஆகின்ற நிலை­யி­லேயே இச் சம்­பவம் நிகழ்ந்­துள்­ளது.

இது­வரை 7 சாகச காட்­சி­களை இவர் பல இடங்­க­ளிலும் நடாத்­தி­யுள்­ள­துடன், கடந்த சனிக்­கி­ழ­மையும் ஞாயிற்­றுக்­கி­ழ­மையும் பண்­டார கொஸ்­வத்த என்ற இடத்தில் சாகச காட்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. முதல்நாள் சனிக்­கி­ழமை நாகப் பாம்­பு­க­ளுடன் சாகசம் புரிந்து கொண்­டி­ருக்­கும்­போது நாகப்­பாம்பு ஒன்­றினால் தீண்டப்பட்­ட­தை­ய­டுத்து உட­ன­டி­யாக அவர் வாரி­ய­பொல மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்­துச்­செல்­லப்­பட்டார். அங்­கி­ருந்து குரு­நா­கலை போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்ட நிலை­யில்­ சிகிச்சை பல­னின்றி ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை மரணமானார் . அவரது ஜனாஸா ஞாயிறன்று மாலை மடிகே மிதியால முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.