உலமா சபையின் தலைமை பொறுப்பை ஏற்க ஒருவாரகால அவகாசம் கோரினார் ரிஸ்வி முப்தி

0 366

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
“அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் புதிய தலை­வ­ராக மீண்டும் நான் மூன்று வரு­ட­கா­லத்­துக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ளேன். அத்­தெ­ரிவு ஜன­நா­யக ரீதியில் இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் இடம்­பெற்­றது என்­றாலும் தலை­மைப்­ப­த­வியில் இருப்­பதா? இல்­லையா? என்று இஸ்­தி­காரா (Isthikhara) செய்து தீர்­மா­னிக்க உலமா சபையின் புதிய நிறை­வேற்­றுக்­கு­ழு­விடம் ஒரு­வா­ர­கால அவ­காசம் கோரி­யுள்ளேன்” என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்­தார்.

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் புதி­ய­நி­றை­வேற்றுக் குழுத் தெரி­வுக்­கான மத்­திய சபைக்­கூட்டம் கடந்த 18 ஆம் திகதி சனிக்­கி­ழமை கண்டி கட்­டுக்­கலை ஜும் ஆ பள்­ளி­வா­சலில் இடம் பெற்­றது. நிகழ்வில் உல­மா­ச­பையின் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.அர்கம் நூராமித் வர­வேற்­புரை நிகழ்த்­தினார். பொரு­ளாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். கலீல் கணக்­க­றிக்­கையைச் சமர்ப்­பித்தார். அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்­வி­முப்தி தலைமை உரை நிகழ்த்­தினார்.

இத­னை­ய­டுத்து பழைய நிறை­வேற்­றுக்­குழு கலைக்­கப்­பட்டு புதிய நிறை­வேற்­றுக்­குழு தெரிவு தற்­கா­லிக தலைவர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம். இல்யாஸ் தலை­மையில் நடை­பெற்­றது. 24 மாவட்ட மத்­திய சபை உறுப்­பி­னர்­க­ளான 24 மாவட்ட கிளைத்­த­லை­வர்கள், செய­லா­ளர்கள், பொரு­ளா­ளர்கள் உட்­பட 103 பேர் அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.
இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் 30 பேர் கொண்ட நிறை­வேற்றுக் குழு எதிர்­வரும் 3வருட காலத்­திற்குத் தெரிவு செய்­யப்­பட்­டது.

எதிர்­வரும் 3 வருட காலத்­துக்கு தலை­வ­ராக இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி சுமார் 20 வருட கால­மாக 9 தட­வைகள் தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்­ட­வ­ராவார். இவர் 2001 இல் உலமா சபையின் யாப்பு முறை­யாக அமை­ய­வேண்டும் என்ற கோரிக்­கையை முன் வைத்து தனது தலை­மைப்­ப­த­வியை இரா­ஜி­னாமா செய்தார் என்­றாலும் 2003 ல் மீண்டும் தலை­வ­ராக ஏக­ம­ன­தாக தெரிவு செய்­யப்­பட்டார். 2004 ன் பின்பு ஒவ்வோர் மூன்று வருட காலத்­திற்கும் தெரிவு செய்­யப்­பட்டார்.

இவர் 2016 ல் மற்றும் 2019 ல் தான் பத­வி­யி­லி­ருந்து அக­லு­வ­தற்கு அவ­காசம் கோரி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

பின்­வ­ருவோர் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­னர்­க­ளாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.
தலைவர்: அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி
செய­லாளர்‌: அஷ்ஷெய்க் எம்.அர்கம் நூராமித்
பொரு­ளாளர்: அஷ்ஷெய்க் ஏ.ஏ.அஹ்மத் அஸ்வர்
உப­த­லை­வர்கள்: அஷ்ஷெய்க் எச்.உமர்தீன்
அஷ்ஷெய்க். எம்.ஜே.அப்துல் காலிக்
அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.றிழா
அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஷிம்
அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.கலீல்
உப­செ­ய­லா­ளர்கள் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸீம்
அஷ்ஷெய்க் ஏ.ஸீ.எம்.பாழில்
உப­பொ­ரு­ளாளர் அஷ்ஷெய்க் எம்.கே.அப்துல் ரஹ்மான்
உறுப்பினர்கள் அஷ்ஷெய்க்
எம்.எல்.எம்.இல்யாஸ்
அஷ்ஷெய்க் கே.எம்.அப்துல் முக்ஸித்
அஷ்ஷெய்க் எம்.எம்.ஹஸன் பரீத்
அஷ்ஷெய்க் எம்.எல்.எம்.முபாரக்
அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.முர்ஷித்
அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.புர்ஹான்
அஷ்ஷெய்க் எஸ்.எல்.நெளபர்
அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மத்
அஷ்ஷெய்க் எஸ்.ஏ.எம்.ஜவ்பர்
அஷ்ஷெய்க் ஏ.ஆர்.அப்துர் ரஹ்மான்
அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். பரூத்
அஷ்ஷெய்க் அப்­துல்லாஹ் மஹ்மூத்
அஷ்ஷெய்க் எம்.எப்.எம்.பாஸில்
அஷ்ஷெய்க் எம்.எச்.எம். யூசுப் முப்தி
அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா
அஷ்ஷெய்க் எம்.ரிபாஹ்
அஷ்ஷெய்க் எம்.டீ.எம். லரீப்
அஷ்ஷெய்க் கே.ஏ.ஸகி. அஹமத்
அஷ்ஷெய்க் ஏ.எல்.அப்துல் கப்பார்.

  • Vidivelli

Leave A Reply

Your email address will not be published.