மூடப்பட்டுள்ள 12 பள்ளிகளையும் மீள திறப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சுடன் திணைக்களம் பேச்சு

அரபுக் கல்லூரிகள், மத்ரஸாக்களை ஒழுங்குமுறையின் கீழ் கொண்டுவருவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

0 488

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு பள்­ளி­வா­சல்கள் மீதும் அர­புக்­கல்­லூ­ரிகள் மற்றும் மத்­ர­ஸாக்கள் மீதும் சந்­தே­கங்கள் ஏற்­பட்டு அதி­கா­ரி­களின் பரிந்­து­ரைக்­க­மைய 16 பள்­ளி­வா­சல்கள் மூடப்­பட்­டன. இவற்றில் 4 பள்­ளி­வா­சல்கள் மீளத் திறக்­கப்­பட்டு விட்­டன. ஏனைய 12 பள்­ளி­வா­சல்­க­ளையும் மீளத் திறப்­பது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் கலா­சார அமைச்சு மற்றும் பாது­காப்பு அமைச்­சுடன் பேச்சு வார்த்­தை­களை நடத்தி வரு­கின்­றது என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்; நாட்டில் 2544 பதிவு செய்­யப்­பட்ட பள்­ளி­வா­சல்கள் இயங்கி வரு­கின்­றன. இதே வேளை 1084 பள்­ளி­வா­சல்கள் பதிவு செய்­யப்­பட்­டா­துள்­ளன. மூடப்­பட்ட பள்­ளி­வா­சல்கள் அடிப்­ப­டை­வா­தக்­கொள்­கை­யுடன் தொடர்­பு­பட்­டவை என்ற சந்­தே­கத்­தி­னா­லேயே அவ்­வாறு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டன.

இதே­வேளை அர­புக்­கல்­லூ­ரிகள் மற்றும் மத்­ர­ஸாக்­களின் எண்­ணிக்­கையை குறைப்­ப­தற்கும் அர­சாங்­கத்­தினால் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. என்­றாலும் திணைக்­களம் அர­புக்­கல்­லூ­ரி­க­ளையும் மத்­ர­ஸாக்­க­ளையும் ஒரு ஒழுங்கு முறையின் கீழ் கொண்டு வரு­வ­தற்கே தீர்­மா­னித்­துள்­ளது. ஒவ்வோர் பிர­தே­சங்­க­ளிலும் இயங்­கி­வரும் குறை­வான மாணவர் எண்­ணிக்­கையைக் கொண்­டுள்ள அர­புக்­கல்­லூ­ரிகள் சிறிய மற்றும் வளங்­களைக் குறை­வாகக் கொண்­டுள்ள அர­புக்­கல்­லூ­ரிகள் என்­பன முதன்­மை­யான அர­புக்­கல்­லூ­ரி­க­ளுடன் இணைக்­கப்­ப­டு­வது பற்றி ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளது.

அர­புக்­கல்­லூ­ரிகள் மீது நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது என்று சமூகம் பயப்­ப­டத்­தே­வை­யில்லை. அர­புக்­கல்­லூ­ரிகள் ஒழுங்கு முறை­யில்­லாமல் செயற்­ப­டு­கின்­றன. அவற்றின் பாட­வி­தா­னங்கள் ஒழுங்­கு­டுத்­தப்­படும். பொது­வான பரீட்சை முறை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் அர­புக்­கல்­லூரி ஆசி­ரி­யர்­களின் கல்வித் தகைமை நிர்­ண­யிக்­கப்­படும்.

அர­புக்­கல்­லூ­ரி­களில் இவ்­வா­றான திருத்­தங்­களை மேற்­கொண்டு அவற்றை மறு­சீ­ர­மைப்­ப­தற்­காக அர­புக்­கல்­லூ­ரிகள், மத்­ர­ஸாக்கள் மறு­சீ­ர­மைப்­புக்­குழு என்று ஓர் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இக்­கு­ழுவில் துறைசார் கல்­வி­யி­ய­லா­ளர்கள், நிபு­ணர்கள் நிய­மனம் பெற்­றுள்­ளார்கள். இக்­குழு ஒன்று கூடி அர­புக்­கல்­லூ­ரிகள், மத்­ர­ஸாக்­களின் மறு­சீ­ர­மைப்பு மற்றும் திருத்­தங்கள் தொடர்பில் ஆராய்ந்து வரு­கி­றது. குழுவின் பணிகள் 80வீதம் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன. விரைவில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.குழுவின் சிபா­ரி­சு­க­ளுக்­க­மைய அரபுக்கல்லூரிகள் மறுசீரமைக்கப்படும், பாடவிதானங்கள், பரீட்சைகள், ஆசிரியர்களின் கல்வித்தகைமைகள் ஒரு ஒழுங்கு முறையின் கீழ் கொண்டுவரப்படும் என்றார்.

அரபுக்கல்லூரிகளின் மறுசீரமைப்பு தொடர்பில் சமூகம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அரபுக்கல்லூரிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.