உலமா சபையின் தலைமைப் பதவியைத் தொடர்வாரா ரிஸ்வி முப்தி?

0 454

றிப்தி அலி

“அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர் பத­வி­யினை பொறுப்­பேற்­பது தொடர்­பான இறுதித் தீர்­மா­னத்­தினை ஏழு நாட்­க­ளுக்குள் அறி­விப்பேன். இப்­ப­தவி எனக்கு பாரிய சுமை­யா­ன­தொன்­றாகும். இந்தத் தெரிவு தொடர்பில் எனது குடும்­பத்­தி­ன­ரு­டனும், நண்­பர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டிய பின்­னரே, அதனைப் பொறுப்­பேற்­பது தொடர்­பி­லான இறுதி முடி­வினை அறி­விப்பேன்”

கடந்த சனிக்­கி­ழமை (18) கண்­டியில் நடை­பெற்ற அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் நிர்­வாகத் தெரிவின் பின்னர் ஏழா­வது தட­வை­யாக மீண்டும் தலை­வ­ராக தெரி­வு­செய்­யப்­பட்ட அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி, தான் ஆற்­றிய உரை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருந்தார்.

சுமார் 8,000க்கு மேற்­பட்ட உறுப்­பி­னர்­களைக் கொண்ட ஜம்­இய்­யத்துல் உல­மாவின் நிர்­வாகத் தெரிவு அதன் யாப்பின் பிர­காரம் ஒவ்­வொரு மூன்று வரு­டங்­க­ளுக்­கொரு முறை நடை­பெ­று­வது வழ­மை­யாகும். இதன் அடிப்­ப­டையில் நாட்டின் பொரு­ளா­தார நெருக்­கடி நிலை­மை­க­ளுக்கு மத்­தி­யிலும் ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பொதுக்­கூட்டம் கண்டி, கட்­டு­கலை ஜும்ஆ பள்­ளி­வா­சலில் கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்­றது.

இந்த பொதுக் கூட்­டத்தில் கலந்­து­கொள்­வ­தற்­காக நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள 139 கிளை­க­ளுக்கும் அழைப்­பி­தழ்கள் அனுப்­பி­வைக்­கப்­பட்­டன. எனினும் இந்த பொதுக் கூட்டம் தொடர்பில் எந்­த­வொரு ஊடக அறிக்­கையோ, ஊட­கங்­க­ளுக்­கான அழைப்­பி­தலோ ஜம்­இய்­யத்துல் உல­மா­வினால் வழங்­கப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இது போன்றே கடந்த 2013ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பொதுக் கூட்­டமும் ஊட­கங்­க­ளுக்கு மறைக்­கப்­பட்­டது. எனினும், அப்­போது ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலை­வ­ராக றிஸ்வி முப்தி தெரி­வு­செய்­யப்­பட்­ட­தற்கு அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ பாராட்­டினார் என்ற செய்­தியின் மூலமே குறித்த கூட்டம் நடை­பெற்ற விடயம் முஸ்லிம் சமூ­கத்­திற்கு தெரி­ய­வந்­தமை இவ்­வி­டத்தில் நினை­வு­ப­டுத்­தத்­தக்­க­தாகும்.

எப்­ப­டி­யா­யினும், இந்த வரு­டத்­திற்­கான பொதுக் கூட்டம் தொடர்­பான தகவல் சமூக ஊட­கங்­களில் வெளி­யா­னதை அடுத்து, ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலை­மைத்­துவ மாற்­றத்தின் அவ­சியம் தொடர்­பி­லான பதி­வுகள் பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் உள்­ளிட்ட சமூக ஊடங்­களில் பரப்­பப்­பட்­டன. குறிப்­பாக ரிஸ்வி முப்தி அப் பத­விக்குப் பொருத்­த­மற்­றவர் எனவும் இளம் தலை­மு­றையைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கு அப் பதவி வழங்­கப்­பட வேண்டும் என்றும் பலரும் கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். மறு­புறம் அனு­பவம், மொழி­யாற்றல் உள்­ளிட்ட மேலும் பல தகை­மை­களில் அடிப்­ப­டையில் ரிஸ்வி முப்­தியே அப் பத­வியைத் தொடர வேண்டும் என்ற கருத்தை மற்­றொரு சாரார் வலி­யு­றுத்­தினர்.
இவற்­றுக்கு மத்­தி­யி­லேயே இக்­கூட்டம் திட்­ட­மிட்ட படி சனிக்­கி­ழமை காலை ஆரம்­பிக்­கப்­பட்­டது. முத­லா­வது அமர்வில் செய­லாளர் அறிக்கை, பொரு­ளாளர் அறிக்கை மற்றும் யாப்பு திருத்தம் போன்ற நிகழ்­வுகள் பிர­தா­ன­மாக இடம்­பெற்­றன.

எனினும் யாப்புத் திருத்­தத்தின் போது மாத்­திரம் சிறு சல­ச­லப்­பொன்று சபையில் ஏற்­பட்­ட­தா­கவும் எனினும் இத்­தி­ருத்­தங்கள் சபை­யோ­ரினால் ஏக­ம­ன­தாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­தா­கவும் அறிய முடி­கி­றது.

மூத்த உல­மா­வான அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத், சுக­யீனம் கார­ண­மாக தற்­போது ஓய்­வி­லுள்­ள­மை­யினால் கடந்த பொதுக் கூட்­டத்தில் அவ­ருக்­காக உரு­வாக்­கப்­பட்ட தலை­வ­ருக்கு சம­னான அதி­கா­ரங்­க­ளு­ட­னான ‘பிரதித் தலைவர்’ எனும் பதவி இந்த பொதுக் கூட்­டத்தில் நீக்­கப்­பட்­டது.

அத்­துடன் அர­சியல் கட்­சி­களின் செயற்­கு­ழு­வினை ஒத்­த­தாக ஜம்­இய்­யத்துல் உல­மாவின் நிர்­வாகக் குழுவின் எண்­ணிக்­கையும் தற்­போது அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ராக எம்.எச்.எம். அஷ்ரப் இருந்த போது காணப்­பட்ட அதி­யுயர் பீட உ றுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கை­யான 23, தற்­போ­தைய தலைவர் ரவூப் ஹக்­கீமின் வரு­கை­யினை அடுத்து 99 ஆக அதி­க­ரிக்­கப்­பட்­டது.

இதே­போன்று இது வரை காலமும் 33ஆக காணப்­பட்ட ஜம்­இய்­யதுல் உல­மாவின் நிறை­வேற்றுக் குழு உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை இந்த முறை 51ஆக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. முன்னர் 25 பேர் தேர்தல் மூலமும் எட்டுப் பேர் நிய­மனம் ஊடா­கவும் ஜம்­இய்­யத்துல் உல­மாவின் செயற்­கு­ழு­விற்கு தெரிவு செய்­யப்­ப­டுவர். எனினும், புதிய யாப்பின் பிர­காரம் 30 பேர் தேர்தல் மூலமும் 21 பேர் நிய­மனம் ஊடா­கவும் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். இவை இரண்­டுமே யாப்புத் திருத்­தத்தில் இடம்­பெற்ற முக்­கிய மாற்­றங்­க­ளாகும்.
இதே­வேளை, அஸர் தொழு­கை­யினைத் தொடர்ந்து புதிய நிர்­வாகத் தெரிவு ஆரம்­ப­மாகி இரவு 9.00 மணி வரையும் நீடித்­தது.

இந்த நிர்­வாகத் தெரிவு வாக்­கெ­டுப்­பிற்கு முன்­ன­தாக மத்­திய குழு முன்­னி­லையில் றிஸ்வி முப்தி விசேட உரை­யொன்­றினை நிகழ்த்­தினார். இதன்­போது விசேட வேண்­டு­கோ­ளொன்­றி­னையும் முன்­வைத்­தி­ருந்தார்.

அதா­வது, புதிய நிர்­வா­கத்தில் தன்னை மீண்டும் தலை­வ­ராக தெரி­வு­செய்ய வேண்டாம் என்­பதே அந்த வேண்­டு­கோ­ளாகும். எனினும், குறித்த வேண்­டு­கோ­ளி­னையும் மீறி ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலை­வ­ராக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி மீண்டும் தெரி­வு­செய்­யப்­பட்டார்.

இதே­வேளை, செய­லா­ள­ராக அஷ்ஷெய்க் எம். அர்கம் நூரா­மிதும், பொரு­ளா­ள­ராக அஷ்ஷெய்க் ஏ.ஏ.அஹ்மத் அஸ்­வரும் தெரிவு செய்­யப்­பட்­டனர். கடந்த 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பொரு­ளா­ராக செயற்­பட்ட ஏ.எல்.எம். கலீல் மௌலவி, குறித்த பத­வி­யி­லி­ருந்து ஓய்­வு­பெ­று­வ­தாக இம்­முறை அறி­வித்­தி­ருந்தார்.
இதனை அடுத்தே, குறித்த பத­விக்கு அஹ்மத் அஸ்வர் தெரி­வு­செய்­யப்­பட்டார். இவர், எகிப்தின் அல் – அஸ்ஹர் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கலா­நிதி பட்­டத்­தினை நிறை­வு­செய்­துள்ளார்.

இதே­வேளை, ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலைவர் பத­விக்கு மிகவும் பொருத்­த­மா­ன­வர்கள் என முஸ்லிம் சமூ­கத்­தினால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட அஷ்ஷெய்க் ஏ.சீ அகார் முஹம்மத் மற்றும் அஷ்ஷெய்க்; எம்.எச்.எம். யூஸுப் முப்தி ஆகியோர் இந்த பொதுக் கூட்­டத்தில் கலந்­து­கொள்­ள­வில்லை. எனினும், அவர்கள் இரு­வரும் ஜம்­இய்­யத்துல் உல­மாவின் நிறை­வேற்றுக் குழுவின் உறுப்­பி­னர்­க­ளாக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.
இதே­வேளை, கடந்த செயற்­கு­ழுவில் உப தலை­வ­ராக செயற்­பட்ட அம்­பாறை மாவட்ட ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலை­வ­ரான எஸ்.எச். ஆதம்­பாவா, இம்­முறை குறித்த பத­விக்கு தெரிவு செய்­யப்­ப­ட­வில்லை.

அதே­போன்று, கடந்த செயற்­கு­ழுவில் உப செய­லா­ள­ராக செயற்­பட்ட அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முர்சித் முழப்­பரும் இம்­முறை குறித்த பத­விக்கு தெரி­வு­செய்­யப்­பட்­ட­வில்லை. அவரின் வெற்­றி­டத்­திற்கு அஷ்ஷெய்க் ஏ.சீ.எம். பாசீல் ஹுமைதி தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார்.

இதே­வேளை, கடந்த செயற்­கு­ழுவில் உறுப்­பி­னர்­க­ளாக இருந்த ஐந்து பேர் புதிய செயற்­கு­ழு­விற்­கான ்தேர்தலில தெரி­வு­செய்­யப்­ப­ட­வில்லை. எனினும் இவர்கள் நிய­மன உறுப்­பி­னர்­க­ளாக செயற்­கு­ழு­விற்கு உள்­வாங்­கப்­ப­டலாம்.

கடந்த செயற்­கு­ழுவில் உறுப்­பி­னர்­க­ளாக செயற்­ப­டாத அஷ்ஷெய்க் எம். ரிபாஹ், அஷ்ஷெய்க் என்.டீ.எம். லரீப் மற்றும் அஷ்ஷெய்க் ஏ.எல். அப்துல் கப்பார் ஆகியோர் புதிய செயற்­கு­ழுவில் உறுப்­பி­னர்­க­ளாக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இந்தத் தெரி­வினை அடுத்து மத்­திய சபையில் உரை­யாற்­றிய அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, “ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலை­வர்­க­ளாக தெரி­வு­செய்­யப்­படக் கூடிய உமர்தீன் மௌலவி உள்­ளிட்ட பலர் இங்­குள்­ளனர். அவர்­களை தெரி­வு­செய்­தி­ருக்க முடியும். எனினும் இப்­ப­த­வி­யினை பொறுப்­பேற்­பது தொடர்­பான இறுதித் தீர்­மா­னத்­தினை ஏழு நாட்­க­ளுக்குள் அறி­விப்பேன்” என்றார்.

கட்டுகலை ஜும்ஆ பள்ளிவாசலில் றிஸ்வி முப்தி அறிவித்த எழு நாட்களுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மாத்திரமே உள்ளன. தான் இப் பதவியில் தொடர்வதா இல்லையா என்ற தனது தீர்மானத்தை அவர் பகிரங்கமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை உள்ளுர் மட்டத்திலும் சரி தேசிய மட்டத்திலும் சரி நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் பல வருடங்களாக ஒரே நபர்களே தொடரும் நிலை நீடிக்கிறது. இது குறித்து சமூகத்தில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந் நிலையில் மேற்படி நிறுவனங்கள் பொருத்தமான நபர்களை, இளம் தலைமுறையிலிருந்து தெரிவு செய்து முக்கிய பதவிகளில் அமர்த்த வேண்டும். அதன் மூலமே நவீன சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் மேற்படி அமைப்புகளைக் கட்டியெழுப்பலாம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.