இறுதி நேரத்தில் கிட்டிய ஹஜ் வாய்ப்பு

0 624

ஏ.ஆர்.ஏ.பரீல்

இவ்­வ­ருடம் இலங்­கை­யர்­க­ளுக்கு ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தற்­கான அனு­ம­தி­யினை அர­சாங்கம் வழங்­கி­ய­தை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் பெரும் மகிழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. நாட்டின் ஹஜ் முக­வர்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அகில இலங்கை ஹஜ் முக­வர்கள் சங்கம் மற்றும் ஹஜ் உம்ரா முக­வர்கள் சங்கம் ஆகிய இரு­ மு­க­வர்கள் சங்­கங்­களும் இவ்­வ­ருட ஹஜ் பயண ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தில்லை என ஏற்­க­னவே தீர்­மா­னித்­தி­ருந்த நிலை­யிலே அர­சாங்கம் முஸ்­லிம்­களின் ஹஜ் கட­மைக்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

நாட்டில் நிலவும் பொரு­ளா­தார நெருக்­கடி மற்றும் அந்­நிய செலா­வணி பற்­றாக்­குறை கார­ண­மாக நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் நன்மை கருதி தாங்கள் இவ்­வ­ருடம் ஹஜ் பயண ஏற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தில்லை என ஹஜ் முக­வர்கள் ஏக­ம­ன­தாக தீர்­மா­னித்­தி­ருந்­தனர். இது தொடர்­பாக சவூதி அரே­பி­யாவின் ஹஜ், உம்ரா அமைச்­சுக்கும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லை­யிலே இலங்கை மக்­களின் ஹஜ் கட­மையின் அவ­சியம் குறித்து சுற்­றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் புத்­த­சா­சன மற்றும் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சர் விதுர விக்­கி­ரம நாயக்­க­வுடன் பேச்சுவார்த்தை நடத்­தினார். இத­னை­ய­டுத்தே அதற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டது.

கடந்த 7 ஆம் திகதி பத்­த­ர­முல்­லையில் செத்­சி­ரி­பா­யவில் அமைந்­துள்ள புத்­த­சா­சனம் மற்றும் கலா­சார அமைச்சில் இந்தக் கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது. கலந்­து­ரை­யா­டலில் புத்த சாசனம் மத மற்றும் கலா­சார அமைச்சர் விதுர விக்­கி­ரம நாயக்க, சுற்­றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பைசல் காசீம், காதர் மஸ்தான், இஷாக் ரஹ்மான், முஷாரப் முது­நபீன், மர்ஜான் பளீல், அகில இலங்கை ஹஜ் முக­வர்கள் சங்கம் மற்றும் ஹஜ், உம்ரா முக­வர்கள் சங்கம் என்­ப­ன­வற்றின் பிர­தி­நி­திகள், புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அமைச்சின் செய­லாளர் சோம­ரத்ன விதா­ன­ப­தி­ரன, மேல­திக செய­லாளர் நாயனா நாத­வி­தா­ரன மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்சார் ஆகி­யோரும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு தலா 1500 டொலர்கள் வீதம் வெளி­நாட்­டி­லி­ருந்து ஹஜ் முகவர் அல்­லது ஹஜ் யாத்­தி­ரிகரால் வங்­கியில் வைப்­பி­லிட வேண்டும் என்ற நிபந்­தனை அமைச்சர் விதுர விக்­கி­ரம நாயக்­க­வினால் விதிக்­கப்­பட்­டது. அத்­தோடு இலங்­கைக்கு இவ்­வ­ருடம் கிடைக்­கப்­பெற்­றுள்ள 1585 ஹஜ் கோட்­டா­வுக்­கான யாத்­தி­ரி­கர்களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லுவல் திணைக்­க­ளத்தில் 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்­டணம் செலுத்தி தங்­களைப் பதிவு செய்து கொண்­ட­வர்­க­ளி­லி­ருந்து தெரிவு செய்­வ­தெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அத்­தோடு ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தாம் விரும்­பிய ஹஜ் முக­வர்கள் ஊடாக பய­ணத்தை மேற்­கொள்ள முடி­யு­மெ­னவும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

விடு­முறை தினங்­க­ளிலும் திணைக்­களம் பணியில்
இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்­காக சவூதி அரே­பியா வழங்­கி­யுள்ள 1585 கோட்­டாவை முழு­மை­யாகப் பூர்த்தி செய்து கொள்­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் சனி,ஞாயிறு மற்றும் நோன்­மதி தினங்­களில் முழு மூச்­சாக இயங்கி வந்தது. திணைக்­க­ளத்தின் ஹஜ் பிரிவைச் சேர்ந்த அதி­கா­ரிகள் இப் பணிகளை முன்னெடுத்தனர். அவர்கள் ஹஜ் யாத்­தி­ரைக்­காக பதி­வுக்­கட்­டணம் 25 ஆயிரம் ரூபா செலுத்தி பதிவு செய்து கொண்­டுள்ள விண்­ணப்­ப­தா­ரி­களை தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு ஹஜ் யாத்­தி­ரையை உறுதி செய்து கொள்­வதில் தொட­ராக ஈடு­பட்டனர்.

ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தற்­காக 2020 ஆம் ஆண்டு வரை 4500 பேர் பதி­வுக்­கட்­ட­ண­மாக தலா 25 ஆயிரம் ரூபாவை திணைக்­க­ளத்தில் செலுத்தி காத்­தி­ருக்­கின்­றனர். கடந்த இரு வரு­டங்கள் உலகில் பர­விய கொவிட் 19 வைரஸ் தொற்று நோய்­கா­ர­ண­மாக இலங்­கை­ய­ருக்கு ஹஜ் யாத்­தி­ரைக்­கான வாய்ப்பு கிடைக்­க­வில்லை.

மேலும் ஹஜ் யாத்­தி­ரைக்­காக 2022 இல் 120 பேர் பதி­வுக்­கட்­டணம் செலுத்தி தங்­களை பதிவு செய்து கொண்­டுள்­ளனர். இவ்­வாறு பதிவுக் கட்­டணம் செலுத்தி பதிவு செய்து கொண்­ட­வர்­க­ளி­லி­ருந்தே யாத்­தி­ரி­கர்கள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

ஒரு மில்­லியன் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு அனு­மதி
கடந்த காலங்­களில் நில­விய கொவிட் 19 தொற்று நோய் அச்­சு­றுத்­தலை கருத்திற் கொண்டு இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் எண்­ணிக்­கையை சவூதி அரே­பிய ஹஜ், உம்ரா அமைச்சு ஒரு மில்­லி­ய­னாக கட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதில் வெளி­நாட்டு யாத்­தி­ரி­கர்கள் 8 இலட்­சத்து 50 ஆயிரம் பேரை அனு­ம­திக்­க­வுள்­ளது. இதே­வேளை யாத்­தி­ரி­கர்­களின் வய­தெல்­லை­யையும் 65 ஆக நிர்­ண­யித்­துள்­ளது. எனவே 65 வய­துக்கு மேற்­பட்டோர் இவ்­வ­ருடம் ஹஜ் கட­மைக்­காக யாத்­திரை மேற்­கொள்ள முடி­யாது.

ஹஜ் கட்­டணம்
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமோ அரச ஹஜ் குழுவோ இவ்­வ­ருட ஹஜ் கட்­ட­ணத்தைத் தீர்­மா­னிக்­க­வில்லை. கட்­ட­ணத்தை ஹஜ் முக­வர்­களே தாம் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு சவூதி அரே­பி­யாவில் வழங்­க­வுள்ள தங்­கு­மிட வசதி மற்றும் ஏனைய ஏற்­பா­டு­களை கருத்­திற்­கொண்டு தீர்­மா­னித்தனர். இவ்­வ­ருட ஹஜ் கட்­டணம் 20 –25 இலட்­சங்­க­ளுக்கு உட்­பட்­ட­தாக இருக்கும் என ஹஜ் முக­வர்கள் தெரி­வித்­தனர்.

பதிவு செய்­யப்­பட்­டுள்ள
முகவர் நிலை­யங்கள்
இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­காக 73 முகவர் நிலை­யங்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. 73 முகவர் நிலை­யங்­களின் விப­ரங்கள் திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­ள­வுள்ள ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் குறிப்­பிட்ட பதிவு செய்­யப்­பட்­டுள்ள முகவர் நிலை­யங்கள் ஊடா­கவே தங்­க­ளது பயண ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்­டு­மென முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் யாத்­தி­ரி­கர்­களை அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

மேலும் ‘பதிவு செய்­யப்­ப­டாத முகவர் நிலை­யங்கள் ஊடாக யாத்­தி­ரி­கர்கள் மேற்­கொள்ளும் பயண ஏற்­பா­டு­க­ளுக்கு திணைக்­களம் எவ்­வி­தத்­திலும் உத்­த­ர­வாதம் வழங்­காது. பதிவு செய்­யப்­ப­டாத முகவர் நிலை­யங்­களைத் தொடர்பு கொண்டு தாம் ஏமாற்­றப்­ப­டு­வ­தி­லி­ருந்தும் யாத்­தி­ரி­கர்கள் தவிர்ந்து கொள்ள வேண்­டு­மெ­னவும் அவர் கோரி­யுள்ளார்.

மேல­திக விப­ரங்­க­ளுக்­காக திணைக்­க­ளத்தின் ஹஜ்­ பி­ரிவைச் சேர்ந்த அதி­கா­ரி­களைத் தொடர்பு கொள்ளும் படியும் வேண்­டி­யுள்ளார்.

கடந்த காலங்­களில் ஹஜ் ஏற்­பா­டு­க­ளின்­போது குறிப்­பிட்ட சில முக­வர்கள் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளி­ட­மி­ருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு இறு­தியில் அவர்­களைக் கைவிட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். அவ்­வா­றான ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்குத் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.

ஹஜ் யாத்­திரை தொடர்­பான ஒப்­பந்தம் ஒன்றில் ஒவ்வொரு யாத்­தி­ரி­கரும் கையொப்­ப­மிடும் வகை­யி­லான ஏற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த ஒப்­பந்­தத்தில் யாத்­தி­ரிகர், ஹஜ் முகவர் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஆகியோர் கைச்­சாத்­தி­டு­வார்கள். -குறிப்­பிட்­டுள்ள ஒப்­பந்­தத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள சேவைகள் மற்றும் நிபந்­த­னைகள் முக­வ­ரினால் மீறப்­படும் பட்­சத்தில் முக­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மெ­னவும் இப்­றாஹிம் அன்ஸார் தெரி­வித்­துள்ளார்.

யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான வைத்­திய சேவை
கடந்த காலங்­களில் போன்று இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான வைத்­திய சேவை திணைக்­க­ளத்தின் ஊடாக ஏற்­பாடு செய்­யப்­படமாட்­டாது. ஹஜ் முகவர் குழுக்­களே டாக்­டர்­களை அழைத்துச் செல்ல வேண்­டு­மென அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. டாக்­டர்­க­ளுக்­கான பேஸா விசா திணைக்­க­ளத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­படும். எனவே யாத்­தி­ரி­கர்­களின் வைத்­திய சேவை­களை முகவர் குழுக்­களே பொறுப்­பேற்­கவுள்­ளன.

ஹஜ் தூதுக் குழு
வரு­டாந்தம் ஹஜ் யாத்­தி­ரை­யின்­போது ஹஜ்­ தூ­துக்­கு­ழு­வொன்றும் சவூதி அரே­பி­யா­வுக்கு விஜயம் மேற்­கொள்­வது வழ­மை­யாகும். இவ்­வ­ருடம் ஹஜ் தூதுக்­குழு விஜயம் மேற்­கொள்­ள­வேண்­டுமா என ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கின்­றது. தூதுக்­கு­ழுவின் விஜ­யத்­துக்­கான நிதி­யினை ஹஜ் நிதி­யி­லி­ருந்தே ஒதுக்க வேண்­டி­யுள்­ளது. இது தொடர்பில் புத்­த­சா­சன மத மற்றும் கலா­சார அமைச்சர் மற்றும் அமைச்சின் செய­லா­ள­ருடன் கலந்­து­ரை­யாடி அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்­படும் எனவும் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் தெரி­வித்தார்.

சமூக சேவை­யாக கரு­துங்கள்
ஹஜ் யாத்­தி­ரைக்­கான ஏற்­பா­டு­களை இலா­ப­மீட்டும் தொழி­லாகக் கரு­தாது சமூக சேவை­யாக கரு­துங்கள். நாடு நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலையில் ஒவ்வோர் யாத்திரிகரும் கடினமாக உழைத்து சேமித்த பணத்தினாலே யாத்திரையை மேற்கொள்கின்றனர் என்பதை ஒவ்வொரு முகவரும் கவனத்தில் கொள்ள வேண்டுமென புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஹஜ் முகவர்களை வேண்டியுள்ளார்.

இதே வேளை, ஹஜ் ஒரு புனிதமான கடமையாகும். ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் வாழ்க்கையில் ஹஜ் கடமையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்ற கனவுடனேயே வாழ்கின்றனர். எனவே இந்த யாத்திரை ஏற்பாடுகளை முன்னெடுக்கும் முகவர்கள் இதனை சமூக சேவையாகக் கருத வேண்டும். இலாபமீட்டும் வர்த்தகமாக எண்ணக்கூடாது. யாத்திரிகர்களிடமிருந்து நியாயமான கட்டணத்தை அறவிட வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வருட ஹஜ் ஏற்பாடுகளை திறம்பட முன்னெடுத்து யாத்திரிகர்களுக்கு சிறந்த சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்காக திணைக்கள அதிகாரிகள் பணிப்பாளரின் தலைமையில் இயங்கி வருகின்றனர்.

கொவிட் 19 தடுப்­பூசி பெற்­றி­ருப்­பது கட்­டாயம்
இவ்­வ­ருடம் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்றும் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் கொவிட் 19 வைரஸ் நோயி­லி­ருந்தும் பாது­காப்பு பெற்­றுக்­கொள்ளும் வகை­யி­லான மூன்று தடுப்­பூ­சி­க­ளையும் ஏற்­றிக்­கொண்­டி­ருப்­பது கட்­டாயம் என சவூதி அரே­பிய ஹஜ் உம்ரா அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் கொவிட் 19 தொடர்­பான ஏற்­க­னவே சவூ­தியில் அமுல்­ப­டுத்­தி­யி­ருந்த சில விதி­மு­றை­களை அகற்­றிய பின்பே கொவிட் 19 தடுப்­பூசி பெற்­றி­ருப்­பது கட்­டா­ய­மென அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே வேளை மூடிய இடங்­களில் முகக்­க­வசம் அணிய வேண்டும் என்ற விதி­மு­றையும் நீக்கப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்ளும் யாத்­தி­ரி­கர்கள் பொது சுகா­தார அதி­கார சபை­யினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கொவிட் 19 தடுப்­பூ­சி­களை கட்­டாயம் ஏற்­றிக்­கொண்­டி­ருக்க வேண்டும் என சவூதி ஹஜ் உம்ரா அமைச்சு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

இதே வேளை இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் யாத்­திரை மேற்­கொள்ளும் பய­ணிகள் அனை­வரும் இத­னைக்­க­வ­னத்திற் கொள்ள வேண்­டு­மெ­னவும் அவர்கள் தாம் மூன்று கொவிட் 19 தடுப்­பூ­சி­களை ஏற்­றிக்­கொண்­ட­தற்­கான உரிய ஆவ­ணங்­களை தம்­முடன் எடுத்து வர­வேண்­டு­மெ­னவும் ஜித்­தாவை தள­மாகக் கொண்­டுள்ள இலங்­கையின் கொன்­சி­யூலர் ஜெனரல் பலாஹ் மெள­லானா வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

மேலும் இவ்­வ­ருடம் 65 வய­துக்கு மேற்­பட்ட பய­ணிகள் ஹஜ் கட­மைக்கு அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்கள் எனவும் பய­ணிகள் தம்­முடன் 5 வய­துக்கு குறைந்த பிள்­ளை­களை அழைத்­து­வர வேண்­டா­மெ­னவும் கோரி­யுள்ளார்.

இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்கள் தொடர்பில் ரியா­தி­லுள்ள இலங்­கையின் தூதுவர் பக்கீர் ஹம்சா சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். இலங்கை ஹாஜி­களுக்கு மக்கா மற்றும் அர­பாவில் தங்­கு­மிட வச­தி­களை ஏற்­பாடு செய்­வதற்கான நட­வ­டிக்­கை­களையும் அவர் மேற்­கொண்­டுள்ளார்.

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வதில் முதல் தட­வை­யாக யாத்­திரை மேற்­கொள்பவர்­க­ளுக்கே சவூதி ஹஜ் உம்ரா அமைச்சு முத­லிடம் வழங்­கி­யுள்­ளது. அத்­தோடு கொவிட் 19 தடுப்­பூ­சிகள் மூன்­றினைப் பெற்­றி­ரா­த­வர்­களின் விண்­ணப்­பங்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன எனவும் கொன்­சி­யூலர் ஜெனரல் மெளலானா தெரி­வித்தார்.

ஆர்வம் குறைவு
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­காக 73 ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­யி­ருந்­தாலும் அவற்றில் 46 முகவர் நிலை­யங்­களையே தெரிவு செய்­துள்­ளது. இவற்றில் 9 ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கே ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கான அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கி­யுள்ளது. தெரிவு செய்­யப்­பட்ட 9 முகவர் நிலை­யங்­க­ளுடன் இணைந்தே ஹஜ் பயண ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான அனு­ம­தியை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் வழங்­கி­யுள்­ளது.

இதே வேளை இவ்­வ­ருடம் இலங்­கைக்கு 1585 ஹஜ் கோட்டா கிடைக்­கப்­பெற்­றாலும் நாட்டில் நிலவும் பொரு­ளா­தார மற்றும் டொலர் நெருக்­கடி கார­ண­மாக ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களில் பெரும்­பா­லானோர் பய­ணத்தில் ஆர்வம் காட்­ட­வில்லை என திணைக்­கள அதி­கா­ரிகள் தெரி­வித்­தார்கள். இவ்­வ­ருட ஹஜ் கட்­டணம் எதிர்­பா­ராத அளவில் 20 –25 இலட்ச ரூபா­யாக உயர்ந்­துள்­ள­மையே இதற்குக் கார­ண­மாகும்.

ஹஜ் பயண முகவர் சங்கம்
நாட்டில் நிலவும் பொரு­ளா­தார நெருக்­கடி, அந்­நிய செலா­வணி பற்­றாக்­குறை கார­ண­மாக இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தில்லை என்று ஹஜ் முகவர் சங்­கங்கள் தீர்­மா­னித்­தி­ருந்­தாலும் சுற்­றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹ­மட்டின் முயற்­சி­யினால் அர­சாங்­கத்தின் அனு­மதி இதற்­காக பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

அமைச்சர் நஸீர் அஹமட் புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­க­வுடன் கலந்­து­ரை­யாடி அனு­ம­தியைப் பெற்­றுக்­கொ­டுத்தார். இத­னை­ய­டுத்து முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் குறு­கிய காலத்தில் மும்­மு­ர­மாகச் செயற்­பட்டு ஹஜ் பயண ஏற்­பா­டு­களைப் பூர்த்தி செய்­தது.

இதற்­காக ஹஜ் பயண முகவர் சங்கம் தனது பாராட்­டுக்­க­ளையும் நன்­றி­க­ளையும் தெரி­வித்­துள்­ளது. சங்­கத்தின் தலைவர் எம்.ஜி.எம்.ஹிஸாம் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சார்பில் அமைச்­சர்கள் விதுர விக்­கி­ரம நாயக்க, நஸீர் அஹமட் மற்றும் திணைக்­கள பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார், மற்றும் திணைக்­கள ஊழி­யர்­க­ளுக்கு நன்­றி­களைச் சமர்ப்­பிப்­ப­தாகக் கூறினார்.

கடந்த இரண்டு வரு­டங்கள் இலங்கையர்கள் தங்கள் ஹஜ் கனவுகளை சுமந்து எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பித்தவர்களில் பலர் கனவுகளுடனே வபாத்தாகி விட்டார்கள். அவர்களது கனவுகளை அல்லாஹ் அங்கீகரித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வருடம் இறுதி நேரத்தில் இலங்கையர்களுக்கு ஹஜ் வாய்ப்பு கிட்டியுள்ளது. யாத்திரிகர்கள் நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் சகவாழ்வுக்காகவும், விஷேட துஆ பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். இதுவே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.