நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாகும்

21க்கு யோசனை முன்வைத்துள்ளோம் என்கிறார் அதாவுல்லாஹ்

0 617

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
“சிறு­பான்மை மக்­க­ளுக்கும், சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கும் ஒரு பாது­காப்­பான முறையே நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­யாகும். இந்த ஜனா­தி­பதி முறையை முற்­றாக மாற்­று­வ­தனால் புதிய அர­சியல் யாப்பு கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என தேசிய காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஏ.எல்.எம். அதா­வுல்லா தெரி­வித்தார்.

21 ஆவது திருத்­தச்­சட்டம் தொடர்பில் அவ­ரிடம் கட்­சியின் நிலைப்­பாடு தொடர்பில் வின­வி­ய­போதே அவர் விடி­வெள்­ளிக்கு இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் “ஏற்­க­னவே 10 அர­சியல் கட்­சிகள் இணைந்து சமர்ப்­பித்­துள்ள 21 ஆவது திருத்த சட்டம் தொடர்­பான முன்­மொ­ழி­வு­க­ளுக்கு தேசிய காங்­கிரஸ் உடன்­ப­டு­கி­றது. அத்­தோடு நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷவின் திருத்­தங்கள் தொடர்பில் நாமும் முன்­மொ­ழி­வு­களை சமர்ப்­பித்­துள்ளோம். குறிப்­பாக ஆணைக்­கு­ழுக்­களில் நியா­ய­மான நீதி­யான வளப்­பங்­கீட்டு ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட வேண்டும். இது எமது அடிப்­படை உரி­மை­களை இலக்­காகக் கொண்­ட­தாகும்.

ஜனா­தி­பதி முறை என்று வரும்­போது அவர்தான் அர­சாங்கம். ஜனா­தி­பதி 113 வாக்­கு­களால் தோற்­க­டிக்­கப்­பட்டால் அவர் நீதி­மன்றம் செல்­லலாம். 150 வாக்­கு­களால் தோற்­க­டிக்­கப்­பட்டால் அவர் பதவி விலக வேண்டும் என்ற அடிப்­ப­டையில் எமது முன்­மொ­ழி­வுகள் அமைந்­துள்­ளன. ஆனால் இப்­போ­துள்ள நடை­முறை ஜனா­தி­பதி வில­கு­வ­தென்­பது நீண்­ட­வொரு வழி­மு­றை­யாகும்.

நீதி­ய­மைச்சர் விஜே­ய­தாஸ ராஜ­ப­க்ஷவின் யோச­னைப்­படி பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்று சபைக்கு 10 பேர் நிய­மிக்­கப்­ப­டுவர். இச்­ச­பைக்கு மேல­தி­க­மாக 4 உறுப்­பி­னர்கள், சிறு­பான்மை இனங்­களை பிர­தி­நி­தித்துவப்­ப­டுத்தும் வகையில் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்று கூறி­யி­ருக்­கிறோம்.

எல்லா மக்­களும் வாழக்­கூ­டிய அர­சியல் யாப்­பொன்று அமை­யும்­போது தான் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை முற்­றாக நீக்க வேண்டும். இப்­போ­துள்ள அர­சியல் யாப்பு முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­த­ன­வினால் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாகும். இந்த யாப்பில் 21 திருத்­தங்கள் 17,18,19,20 என்ற திருத்­தங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. 19 ஆவது திருத்தத்தில் அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டுமென்பதில் பிரச்சினைகள் எழுந்தன.

எனவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக மாற்றுவதென்றால் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படவேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.