அத்தர் மஹால் விவகாரம்: நீதிமன்ற உத்தரவையும் மீறி கடை நடத்தும் குத்தகைக்காரர்

பெரிய பள்ளிவாசலுக்கு பாரிய நஷ்டம்

0 453

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொழும்பு பெரிய பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான சுமார் 250 கடைத்­தொ­கு­தி­களை உள்­ள­டக்­கிய புறக்­கோட்டை கெய்சர் வீதி­யி­லுள்ள ‘அத்தர் மஹால்’ கட்­டி­டத்தை 9 வருட குத்­த­கைக்கு பெற்­றுக்­கொண்­டவர் நீதி­மன்ற உத்­த­ர­வி­னை­யயும் மீறி தொடர்ந்தும் கட்­டி­டத்தை மூடி­வி­டாது நடாத்தி வரு­வ­தாக கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வாகம் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்­தது.

அத்தர் மஹாலை 9 வருட குத்­த­கைக்கு பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துடன் ஒப்­பந்தம் செய்து கொண்டு குத்­த­கைக்கு பெற்­றுக்­கொண்ட நபர் 2016.12.25ஆம் திகதி ஒப்­பந்த கால எல்லை காலா­வ­தி­யா­கியும் கட்­டி­டத்தை பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­திடம் கைய­ளிக்­காது சிறிய தொகையே வாடகை செலுத்தி வந்த நிலையில் பள்­ளி­வாசல் நிர்­வாகம் குத்­த­கைக்கு பெற்றுக் கொண்­ட­வ­ருக்கு எதி­ராக கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் வழக்கு தொட­ரப்­பட்­டி­ருந்து.

குறிப்­பிட்ட DLM/ 00015/19 ஆம் இலக்க வழக்கு விசா­ர­ணைகள் முடி­வுறும் வரை அத்தர் மஹால் கடைத்­தொ­கு­தியை மூடி­விடும் படி பிர­தி­வா­தி­யான குத்­த­கைக்­கா­ர­ருக்கு கொழும்பு பிர­தான மாவட்ட நீதி­மன்றின் மேல­திக நீதிவான் ஆர்.எம்.ஒகஸ்டா அத்­த­பத்து 2022.05.25 ஆம் திகதி உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் நீதி­மன்ற உத்­த­ர­வி­னையும் மீறி பிர­தி­வா­தி­யான குத்­த­கைக்­காரர் அத்தர் மஹாலை தொடர்ந்து திறந்து செயற்­ப­டுத்தி வரு­வ­தாக பள்­ளி­வாசல் நிர்­வாகம் தெரி­விக்­கி­றது.

வர்த்­தக மைய­மொன்றின் மத்­தியில் அமைந்­துள்ள இக்­க­டைத்­தொ­கு­திக்கு சிறிய தொகையே பிர­தி­வா­தியால் செலுத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் பள்­ளி­வாசல் நிர்­வாகம் குற்றம் சுமத்­து­கி­றது. பள்­ளி­வா­ச­லுக்கு சொந்­த­மான இவ்­வா­றான சொத்­துக்­க­ளி­லி­ருந்த கிடைக்­கப்­பெறும் வரு­மா­னத்தின் மூலமே முஸ்லிம் சமூ­கத்­துக்கு பல­த­ரப்­பட்ட சமூக சேவைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அத்தர் மஹால் 7 மாடி­யுடன் கூடிய சுமார் 250 கடை­களை உள்­ள­டக்­கி­யது. குறிப்­பிட்ட இந்தக் கட்­டிடம் கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலால் கொள்­வ­னவு செய்­யப்­பட்­ட­தாகும். 1980 ஆம் ஆண்டு அப்­போ­தைய பிர­தமர் ஆர்.பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கு (Stadium) நிர்­மா­ணிப்­ப­தற்கு கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தின் கீழ் இயங்கும் மாளி­கா­வத்தை மைய­வா­டிக்குச் சொந்­த­மான 28 ஏக்கர் காணியை சுவீ­க­ரிப்புச் செய்தார். அதற்­கான நஷ்டஈடு வழங்­கப்­பட்­டது. இந்த நஷ்டஈட்டு நிதியின் மூலமே இந்தக் கட்­டிடம் அன்று கொள்­வ­னவு செய்­யப்­பட்­டது. அன்று இக்­கட்­டிடம் ஒரு ஹோட்­ட­லாக இயங்கி வந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அத்தர் மஹாலை 2008.02.01 ஆம் திகதி ஒப்­பந்த அடிப்­ப­டையில் 9 வருட குத்­த­கைக்கு பெற்­றுக்­கொண்ட நபர், கடை­களை கூடிய வாட­கைக்கு வழங்­கிய நிலையில் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்கு சிறிய தொகை­யையே வாட­கைப்­ப­ண­மாக செலுத்தி வந்­துள்ளார். இந்­நி­லையில் பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஒப்­பந்­தத்தை ரத்துச் செய்­தது. என்­றாலும் குத்­த­கைக்கு பெற்­றுக்­கொண்­டவர் கட்­டி­டத்தை பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­திடம் மீள ஒப்­ப­டைக்­காது தொடர்ந்து செயற்­பட்­ட­தா­லேயே அவ­ருக்கு எதி­ராக மாவட்ட நீதி­மன்றில் வழக்கு தொட­ரப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். கொழும்பு பெரிய பள்­ளி­வா­ச­லுக்கு சொந்­த­மான வக்பு சொத்­துக்கள் மூலம் பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்­டிய பெரு­ம­ளவு வரு­மானம் முஸ்லிம் சமூ­கத்தின் கல்வி மற்றும் சமூக நலன்­புரி திட்­டங்­க­ளுக்கு பயன்­ப­டுத்த வேண்­டி­ய­தாகும். ஆனால் இச்­சொத்­துக்கள் ஒரு சிலரால் நியா­ய­மற்ற முறையில் அ-னு­ப­விக்­கப்­ப­டு­கி­றது. பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்கு சிறிய தொகையே தொடர்ந்தும் பல தசாப்த கால­மாக செலுத்­தப்­பட்டு வரு­கி­றது. இத்­தோடு சில சொத்­துக்கள் சட்ட விரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.