முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவதற்கு பிக்குகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது

தேர்தலுக்கு முன் வகுப்புகள் நடந்தன என்கிறார் தம்மானந்த தேரர்

0 368

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
தேர்­த­லுக்கு சில மாதங்­க­ளுக்கு முன்பு முஸ்­லிம்­களைப் பற்றி தவ­றான கருத்­துக்­களைப் பரப்­பு­வ­தற்­காக பெளத்த பிக்­கு­மார்­க­ளுக்கு கருத்­த­ரங்­குகள் நடத்­தப்­பட்­டன. அக்­க­ருத்­த­ரங்­கு­களில் இஸ்­லாமி தீவி­ர­வா­தத்­தினை அடிப்­ப­டை­யாகக் கொண்ட  போகோ ஹராம் அமைப்பின் வீடி­யோக்கள் காண்­பிக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து பெளத்த பிக்­கு­மார்கள் தங்­க­ளது மத­போ­த­னை­களின் (பன) போது இஸ்­லா­மிய தீவ­ர­வாதம் தொடர்பில் 10–15 நிமி­டங்கள் பேச­வேண்டும் என அறி­வு­றுத்­தப்­பட்­டது என வல்­பொல ராகுல பெளத்த கற்கை நிலை­யத்தின் தலைவர் கல்­கந்தே தம்­மா­னந்த தேரர் தெரி­வித்தார்.

ஆங்­கில ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய செவ்­வி­யொன்­றிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்; அதி­கா­ரத்­தி­லி­ருக்கும் ஆட்­சி­யா­ளர்­களும், அடுத்­த­டுத்து ஆட்­சிக்கு வந்­த­வர்­களும் தங்­க­ளது வெற்­றிக்கு சிங்­கள பெளத்த கொள்­கை­க­ளையே கேட­ய­மாக பயன்­ப­டுத்தி வந்­துள்­ளார்கள். ஆனால் இம்­முறை சிங்­கள பெளத்த கொள்­கைகள் பயங்­க­ர­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதா­வது முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அவர்கள் தொடர்ச்­சி­யாக முஸ்­லிம்கள் ஆபத்­தா­ன­வர்கள் என்று பிர­சாரம் செய்து சிங்­கள பெளத்த மக்­களை ஒரு பிரி­வாக, ஒரு தொகு­தி­யாக வேறு­ப­டுத்த முயற்­சித்­த­துடன் ஏனைய இனங்கள் அவர்­க­ளது எதி­ரி­க­ளாக வகைப்­ப­டுத்­தி­னார்கள். இந்த அர­சாங்கம் சிங்­கள பெளத்­தர்­களை தனது அதி உச்ச நன்­மைக்­காக கேட­ய­மாக பயன்­ப­டுத்­தி­யது.
ஜனா­தி­பதி ருவான்­வெ­லி­சா­யாவில் சத்­திய பிர­மாணம் செய்து கொண்­டதை நாம் கண்டோம். மே 9 ஆம் திக­திக்கு முன்­னைய தினம் முன்னாள் பிர­தமர் அனு­ரா­த­பு­ரத்­துக்கு விஜயம் செய்தார். அலரி மாளி­கையின் முன்னால் போராட்­டக்­கா­ரர்கள் கோஷ­மெ­ழுப்­பி­ய­போது அதனை திசை திருப்­பு­வ­தற்­காக பிரித்தை ஒலிக்கச் செய்­தார்கள். இந்­நி­லையில் ராஜ­ப­க்ஷாக்கள் பெளத்­தத்தை ஆயு­த­மாக பயன்­ப­டுத்­தி­னார்கள் என நீங்கள் கரு­து­கி­றீர்­களா-? என்ற கேள்விக்கு தேரர் பதிலளிக்கையில்,

அவர்கள் சம­யத்தை பயன்­ப­டுத்­தி­னார்கள் என்று எவ்­வாறு கூற முடியும். அவர்கள் நீதி நெறி­களை மதிக்­க­வில்லை.

முஸ்லிம் சமூ­கத்­தைப்­பற்றி தவ­றான தக­வல்­களைப் பரப்­பு­வ­தற்­காக பெளத்த பிக்­கு­மார்­க­ளுக்கு கருத்­த­ரங்­கு­களை நடத்­தி­னார்கள். இந்தக் கருத்­த­ரங்­கு­களில் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்­தினை அடிப்­ப­டை­யாகக் கொண்ட போகோ ஹராம் அமைப்பின் வீடி­யோக்­களை காண்­பித்­தார்கள். இத­னை­ய­டுத்து பெளத்த பிக்­கு­மார்­க­ளுக்கு தங்­க­ளது மத­போ­த­னை­களின் (பன) போது இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் தொடர்பில் 10 – 15 நிமி­டங்கள் பேச­வேண்­டு­மென அறி­வு­றுத்­தி­னார்கள்.

இந்த ஏற்­பா­டுகள் தேர்­த­லுக்கு சில மாதங்­க­ளுக்கு முன்பு மேற்­கொள்­ளப்­பட்­டன. பல பகு­தி­க­ளி­லி­ருந்தும் அநே­க­மான பெளத்த குரு­மார்கள் இது தொடர்பில் என்­னிடம் முறை­யிட்­டார்கள். தங்­களால் நிகழ்த்­தப்­பட்ட மத­போ­த­னை­க­ளின்­போது பயங்­க­ர­வாதம், அடிப்­ப­டை­வாதம், தொடர்­பாக பேசு­வ­தற்கு நேரம் ஒதுக்கிக் கொண்­ட­தா­கவும் கூறி­னார்கள்.

மத­போ­த­னைகள் ஒரு போதும் இவ்­வாறு தவ­றாக கையா­ளப்­ப­டக்­கூ­டாது. சாதா­ரண மக்கள் சமா­தானம், சாந்தி பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவே பிக்கு ஒரு­வரை தங்களது வீட்டுக்கு அழைப்பர். ஆனால் இந்த அரசாங்கம் மக்கள் மத்தியில் வெறுப்பினை பரப்புவதற்காக குருமார்களை சமய அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் பற்றி பேசும்படி நிர்ப்பந்தித்துள்ளது.

பெளத்தம் இவ்வாறு வன்முறையாக பயன்படுத்தப்பட்டதை இதற்கு முன்பு நான் ஒருபோதும் காணவில்லை. அத்தோடு முரடர்களை குருமார்போன்று பல இடங்களில் நிறுத்தியிருந்தனர் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.