1 மில்லியன் யாத்திரிகர்களுக்கு சவூதி அமைச்சு அனுமதியளிப்பு

கொவிட் 19 தொடர்பில் கடும் கட்டுப்பாடுகள்

0 342

இவ்­வ­ருடம் சவூதி அரே­பிய ஹஜ், உம்ரா அமைச்சு ஒரு மில்­லியன் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு அனு­மதி வழங்­க­வுள்­ள­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது. 8 இலட்­சத்து 50 ஆயிரம் வெளி­நாட்டு யாத்­தி­ரி­கர்­க­ளும் ஒரு இலட்­சத்து 50 ஆயிரம் உள்­நாட்டு யாத்­தி­ரி­கர்­களும் அனு­ம­திக்­கப்­படவுள்ளனர்.

யாத்­தி­ரி­கர்கள் 65 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளா­கவும், கொவிட் 19 தடுப்­பூ­சி­களை முழு­மை­யாக பெற்­றுக்­கொண்­ட­வர்­க­ளா­கவும், அவர்கள் நாட்­டினை விட்டும்  யாத்­தி­ரைக்­காக வெளி­யேறும் முன்பு கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளா­னவர் இல்லை எ.பி.சி.ஆர் பரி­சோ­தனை மூலம் உறுதி செய்து கொள்­ளப்­பட்­ட­வ­ரா­கவும் இருக்க வேண்­டு­மென அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

அத்­தோடு ஐரோப்பா, அமெ­ரிக்கா மற்றும் அவுஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­களைச் சேர்ந்த யாத்­தி­ரி­கர்கள் இவ்­வ­ருட ஹஜ் கட­மைக்­கான பதி­வு­களை மின்­னு­வியல் (Electronically ) ஊடாக ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் சவூதி ஹஜ் உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது.  -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.