பொருளாதார நெருக்கடி: ஹஜ் வாய்ப்பை இழக்கும் இலங்கை முஸ்லிம்கள்!

0 389

ஏ.ஆர்.ஏ.பரீல்

ஐம்பெருங்­க­ட­மை­களில் ஒன்­றான ஹஜ் யாத்­திரை இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு மூன்றாவது வருடமாகவும் கானல்­நீ­ராகிப் போயுள்­ளது.

இவ்­வ­ருடம் சவூதி அரே­பி­யாவின் ஹஜ் விவகார அமைச்சு இலங்­கைக்கு 1585 கோட்­டாவை வழங்­கியும் அது கைந­ழு­விப்­போ­யுள்­ளது.

கடந்த இரு­வ­ரு­டங்­க­ளாக உல­க­ளா­விய ரீதியில் பர­விய கொவிட் 19 வைரஸ் தொற்று கார­ண­மாக ஹஜ் யாத்­திரை வாய்ப்­பினை நாம் இழந்­தி­ருந்தோம். என்­றாலும் இவ்­வ­ரு­ட­மேனும் ஹஜ் கட­மையை நிறை­வேற்­றிக்­கொள்­ளலாம் என்றே பலர் எதிர்­பார்த்­தி­ருந்­தனர். இவ்­வா­றான நிலையில் நாட்டில் ஏற்­பட்­டுள்ள மிகவும் மோச­மான பொரு­ளா­தார நெருக்­கடி, டொலர் தட்­டுப்­பாடு என்­பன ஹஜ் யாத்­தி­ரைக்கும் தடை­யினை ஏற்­ப­டுத்­தி­விட்­டமை முஸ்­லிம்­களை துய­ரத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

2022ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் யாத்­தி­ரைக்கு சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சு இலங்­கைக்கு 1585 ஹஜ் கோட்­டாவை வழங்கி அதற்கான வழி­காட்­டல்­க­ளையும் அனுப்பி வைத்­தது.

ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­ப­வர்கள் 65 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளா­கவும் மூன்று கொவிட் 19 தடுப்­பூ­சி­களைப் பெற்­றுக்­கொண்­ட­வர்­க­ளா­கவும் இருக்க வேண்­டு­மெ­னவும் நிபந்­தனை விதித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் அரச ஹஜ் குழுவும் ஹஜ் பயண ஏற்­பா­டுகள் மேற்­கொள்­வது தொடர்பில் கடந்த சில நாட்­க­ளாக கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யது.

ஹஜ் யாத்­தி­ரைக்­கான ஒதுக்­கீடு மற்றும் அதற்­கான ஏற்­பா­டு­களைத் தொடர்­வ­தற்­கான திட்­டங்­களைப் பற்றி ஏற்­க­னவே இத­னுடன் தொடர்­பான அமைச்­சான புத்த சாசன மற்றும் மத கலா­சார அலு­வல்கள் அமைச்­சுக்கும் திணைக்களம் அறி­வித்­தி­ருந்­தது.
ஹஜ் முக­வர்­க­ளுக்­கி­டையில் கோட்டா பகிர்­வது பற்­றியும் ஆலோ­சிக்­கப்­பட்டு வந்­தது. எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடி யாத்திரையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு இடமளிக்கவில்லை.

டொலர் தட்­டுப்­பாடு
நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு மத்­தியில் ஹஜ் பயண முக­வர்கள் எவ்­வாறு ஒரு ஹஜ் யாத்­தி­ரி­க­ருக்கு 4000 டொலர் (14 இலட்சம் ரூபா) என்ற ரீதியில் சுமார் 6.3 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை (2.2 பில்­லியன் ரூபா) திரட்­டு­வார்கள் என்ற கேள்வி எழுப்­பப்­பட்­டது. ஹஜ் முக­வர்­க­ளினால் வழங்­கப்­படும் சேவை­களைப் பொறுத்து ஒவ்­வொரு யாத்­தி­ரி­க­ருக்கும் விமா­னக்­கட்­ட­ணத்தை தவிர்த்து 6000 டொலர் (21 இலட்சம் ரூபா) வரை செல்லும் என இத்­தொ­ழிற்­துறை வட்­டா­ரங்கள் தெரி­வித்­தி­ருந்­தன. இது பொது­வாக 20– 27 நாட்­க­ளுக்கு உணவு, போக்­கு­வ­ரத்து, தங்­கு­மிடம் மற்றும் சவூதி அரே­பிய வரி­களை உள்­ள­டக்­கி­ய­தாகும்.

இன்­றைய சூழலில் நாட்டில் எரி­பொருள், எரி­வாயு, உணவு, மருந்­துகள் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை இறக்குமதி செய்ய டொலர் இல்­லாத நேரத்தில் ஹஜ் யாத்­தி­ரைக்கு தேவை­யான சுமார் 6 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருக்கும் அதி­க­மான தொகையை வழங்குவதற்கு போதுமான டொலர்கள் மத்திய வங்கியிடம் இல்லை என்பதே சிக்கலுக்குப் பிரதான காரணமாகும்.

சுற்­றாடல்துறை அமைச்­ச­ருடன்
கலந்­து­ரை­யாடல்
நாட்டில் நிலவும் பொரு­ளா­தார நெருக்­கடி, டொல­ருக்­கான தட்­டுப்­பாட்­டுக்கு மத்­தியில் இவ்­வ­ருட ஹஜ் பயண ஏற்­பா­டு­களை எவ்­வாறு முன்­னெ­டுக்க முடியும் என்­பது தொடர்பில் ஹஜ் முக­வர்கள் சங்க பிர­தி­நி­திகள் கடந்த வாரம் சுற்­றாடல் துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ­மடை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­னார்கள். அமைச்சின் அலு­வ­ல­கத்தில் இடம் பெற்ற இச்­சந்­திப்பில் இவ்­வ­ருட ஹஜ் பயண ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பதில் உள்ள சிக்­கல்­களை எவ்­வாறு களை­வது என்­பது பற்றி ஆரா­யப்­பட்­டது.
விட­யத்­துக்கு பொறுப்­பான புத்­த­சா­சன மத­வி­வ­கா­ரங்கள் மற்றும் கலா­சார அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­க­வுடன் கலந்­து­ரை­யாடி அர­சாங்­கத்தின் அனு­ம­தியைப் பெற்­றுத்­த­ரு­மாறு ஹஜ் முக­வர்கள் சங்க பிர­தி­நி­திகள் அமைச்சர் நஸீர் அஹ­மட்டை வேண்­டிக்­கொண்­டி­ருந்­தார்கள். ஹஜ் முக­வர்கள் சங்க தரப்பில் எம்.ஜி.எம்.ஹிஸாம். எம்.ஆர்.எம்.பாரூக், எம்.ஓ.எப்.ஜெஸீம், எச்.எம். அம்­ஜதீன், எம்.எப்.என்.எம்.உஸாமா ஆகியோர் இதில் பங்­கு­கொண்­டி­ருந்­தனர்.

அமைச்சர் நஸீர் அஹமட்
‘நாட்டில் டொலர் பிரச்­சினை இருக்­கி­றது. இதே­வேளை ஹஜ் யாத்­தி­ரையும் முஸ்­லிம்­களின் முக்­கிய கட­மை­யாகும். இந்­நி­லையில் விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­க­வுடன் பேச்­சு­வார்த்தை நடாத்தி வரு­கிறேன். அத்­தோடு அமைச்­ச­ர­வை­யிலும் இது­பற்றி கலந்­து­ரை­யா­ட­வுள்ளேன்‘ என அமைச்சர் நஸீர் அஹமட் இதன்போது தெரி­வித்­தி­ருந்தார்.

ஹஜ் முக­வர்கள் சங்க பிர­தி­நி­திகள்
அமைச்சர் விது­ர­வுடன் சந்­திப்பு
இந்த இக்­கட்­டான நிலையில் அகில இலங்கை ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் தலைவர் ரிஸ்மி ரியால், ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் தலைவர் எம்.ஜி.எம்.ஹிஸாம் உட்­பட பிர­தி­நி­திகள் புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விது­ர­விக்­கி­ரம நாயக்­கவைச் சந்­தித்து இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­னார்கள்.
இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்கு அரசு தடை விதிக்­க­வில்லை. ஆனால் அதற்­கான டொலரை அரச வங்­கியில் வைப்­பி­லி­டு­மாறு கோரி­யது. அதாவது 1585 ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கு­மான மொத்த கட்­டணமான 6.5 மில்­லியன் டொலரை வங்­கியில் வைப்­பி­லி­டு­மாறு அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க முகவர் சங்க பிர­தி­நி­தி­களை வேண்­டி­யுள்ளார். இதற்­கான நிதியை திரட்டும் பொறுப்பை ஹஜ் ­ப­யண முக­வர்­க­ளி­டமே சுமத்­தினார். வங்­கி­க­ளிடம் டொலர் இல்­லா­மையால் அவர்­களால் இவ்­வி­ட­யத்தில் உத­வு­வது பிரச்­சி­னை­யாக உள்­ளது என்­ப­தையும் அமைச்சர் சுட்டிக் காட்­டினார்.

ஹஜ் முக­வர்­களின் கூட்டம்
இலங்கை ஹஜ் முக­வர்கள் கடந்த திங்­கட்­கி­ழமை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் ஒன்று கூடி நிலை­மை­களை ஆராய்ந்து இறுதித் தீர்­மா­ன­மொன்­றினை மேற்­கொண்­டனர்.

நாடு மிக மோச­மான பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்­குண்­டுள்­ளமை, மருந்து வகை­க­ளுக்­கான தட்­டுப்­பாடு, எரி­பொருள், எரி­வாயு, பால்மா மற்றும் அத்­தி­யா­வ­சிய பொருள்­க­ளுக்­கான தட்­டுப்­பாடு என்­ப­ன­வற்­றுக்கு மத்­தியில் இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தி­லி­ருந்தும் தவிர்ந்­தி­ருப்­ப­தே பொருத்தமானது என இதன்போது தீர்­மா­னம் எட்டப்பட்டது.

நாட்டின் நெருக்­கடி நிலை­மைக்கு டொலர் தட்­டுப்­பாடே காரணம் என்­பதால் இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­க­ளி­லி­ருந்தும் தவிர்ந்­தி­ருக்க தீர்­மா­னித்­தனர். இந்த தீர்­மானம் ஏக­ம­ன­தாக எடுக்­கப்­பட்­டது. நாடு எதிர்­கொண்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து மீள்­வ­தற்கு முஸ்லிம் சமூகம் வழங்குகின்ற ஒத்­து­ழைப்­பாக இது அமையும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்­கையின் வெளி­நாட்டு நாணய கையி­ருப்பு பூச்சியமாக இருப்­பதால் அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பொருட்கள் மற்றும் செயற்­பா­டு­க­ளுக்கு டொலர்­களை வழங்க முடி­யாது என்று மத்திய வங்கி ஆளுநர் பல சந்­தர்ப்­பங்­களில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

திணைக்கள பணிப்பாளர்
இப்ராஹிம் அன்ஸார்
இதேவேளை இவ்வருட ஹஜ் யாத்திரையிலிருந்தும் ஹஜ் முகவர்கள் தவிர்ந்திருப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் பாராட்டியுள்ளார்.

முஸ்லிம்கள் தங்களது புனிதமான கடமையை நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலன்கருதி தியாகம் செய்துள்ளார்கள். இதன்மூலம் முஸ்லிம்கள் நாட்டுப் பற்றுள்ளவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சவூதி ஹஜ் அமைச்சுக்கு அறிவிப்பு
இந் நிலையில், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இவ்வருடம் இலங்கையர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதில்லை என புத்தசாசன, மத மற்றும் கலாசார அமைச்சு வெளிவிவகார அமைச்சின் ஊடாக சவூதி ஹஜ் அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.