11 வயது சிறுமி துஷ்பிரயோகம்

16 வயதுடைய இருவர் கைது

0 286

(பாறுக் ஷிஹான்)
11 வய­து­டைய சிறு­மியை துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குள்­ளாக்­கிய சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டையோர் என சந்­தே­கிக்­கப்­படும் 16 வய­து­டைய இருவர் தலை­ம­றை­வா­கி­யி­ருந்­த­ நி­லையில் அக்­க­ரைப்­பற்று பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட அட்­டா­ளைச்­சேனை பகு­தியில் உள்ள ரஹ்­மா­னி­யாபாத் பகு­தியில் கடந்த 2022.05.23 இரவு குறித்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.
11 வய­தான சிறுமி தனது குடும்­பத்­துடன் கடற்­க­ரைக்குச் சென்­றுள்ளார். கடற்­க­ரையில் விளை­யா­டிக்­கொண்­டி­ருக்­கும்­போது இடை­ந­டுவே தனது சகோ­த­ரி­யுடன் வீட்­டுக்குச் செல்­ல­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. வீட்­டி­லி­ருந்து மீண்டும் தனி­யாக அச்­சி­றுமி கடற்­க­ரை­யி­லுள்ள ஏனைய குடும்ப உறுப்­பி­னர்­க­ளுடன் இணைந்­து­கொள்­வ­தற்­காக வந்­து­கொண்­டி­ருந்­த­போது அவர் வழி­ம­றிக்­கப்­பட்டு துஸ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­பட்­டுள்ளார்.
இரவு 10.30 மணி­ய­ள­வில்­இ­டை­ம­றித்த இருவர் அருகில் உள்ள வீடு ஒன்­றுக்குள் தூக்கிச் சென்று துஸ்­பி­ர­யோ­கம் செய்­துள்­ளமை தெரி­ய­வ­ரு­கி­றது.

அத்­தோடு, சம்­ப­வத்தை யாரி­டமும் கூறக் கூடாது என மிரட்­டி­யுள்­ள­துடன், சிறு­மியை மதி­லுக்கு மேலால் தூக்கி போட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் விசா­ர­ணைகள் மூலம் தெரி­ய­வ­ரு­கி­றது.

விடயம் தொடர்பில், சிறு­மியின் உற­வி­னர்கள் அக்­க­ரைப்­பற்று பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

இந்­நி­லையில் நேற்­று­முன்­தினம் அக்­க­ரைப்­பற்று பொலிஸார் மேற்­கொண்ட விசேட தேடு­தலில் குறித்த சிறு­மியை துஸ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கி­ய­தாக சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் இருவர் கைது செய்­யப்­பட்­டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஒலுவில் பகுதியை சேர்ந்த 16 வயதுடையவர்களாவர். இரு சந்தேக நபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.