சவூதி அரசின் அழைப்பின் பேரிலேயே ஞானசார தேரர் அங்கு விஜயம் செய்தார்

இளவரசரை சந்திக்கவில்லை; தீவிரவாதம் குறித்து பேசினோம் என்கிறார் டிலந்த

0 368

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஞான­சார தேரர் தலை­மை­யி­லான பொது பல சேனா அமைப்பின் பிர­தி­நி­திகள் அண்­மையில் சவூதி அரே­பி­யா­வுக்கு விஜயம் செய்­தமை உண்­மையே என அவ்­வ­மைப்பின் முன்னாள் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே விடி­வெள்­ளி­யிடம் உறு­திப்­ப­டுத்­தினார். இந்த விஜ­யத்தில் தானும் பங்­கேற்­ற­தாகக் குறிப்­பிட்ட அவர், சவூதி அரே­பிய அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரி­லேயே தாம் அங்கு சென்­ற­தா­கவும் குறிப்­பிட்டார்.
எனினும் இந்த விஜ­யத்­தின்­போது தாம் சவூதி இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்­மானைச் சந்­திக்­க­வில்லை என்றும் இது தொடர்பில் ஆங்­கில ஊடகம் ஒன்றில் வெளி­யான தக­வல்­களில் உண்­மை­யில்லை என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இந்த விஜயம் தொடர்பில் டிலந்த விதா­னகே தொடர்ந்தும் விடி­வெள்­ளிக்கு கருத்து வெளி­யி­டு­கையில்,

பொது­பல சேனா அமைப்பின் பிர­தி­நி­திகள் சிலர் சவூதி அரே­பி­யாவின் ரியாத் நகரில் சவூதி அரே­பிய உயர்­மட்ட குழு­வி­ன­ருடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டோம்.
இப்­பேச்­சு­வார்த்­தையில் பங்­கேற்­கு­மாறு சவூதி அரசு, பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர­தே­ர­ருக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தது. இச்­சந்­திப்பில் பொது­பல சேனாவின் முன்னாள் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் என்ற வகையில் நானும் கலந்து கொண்­டி­ருந்தேன்.

ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் சவூதி அரே­பி­யாவில் இரண்டு இர­வுகள் உட்­பட 3 தினங்கள் தங்­கி­யி­ருந்­தனர். காவி உடை­யுடன் ரியாத் விமான நிலை­யத்­தி­லி­ருந்து வெளி­யே­றிய ஞான­சா­ர­தே­ர­ருக்கு அங்கு வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. பதா­தை­களை ஏந்தி சிலர் வர­வேற்­றனர்.

சவூதி மக்கள் விமான நிலை­யத்­துக்கு வந்து எம்­முடன் சினே­க­மாக உரை­யா­டி­னார்கள். எம்­மிடம் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­றவு பற்றிக் கேட்­டார்கள்.

நாம் சவூ­தியில் தங்­கி­யி­ருந்த சந்­தர்ப்­பத்தில் சவூதி அரே­பிய பெண்கள் ஞான­சார தேரரை சந்­தித்து பேசி­னார்கள். எங்­க­ளுடன் இணைந்து புகைப்­ப­டமும் எடுத்­துக்­கொண்­டார்கள். சவூதி வர்த்­தகர் ஒருவர் எம்மைச் சந்­தித்து “ஏன் சவூ­திக்கு விஜயம் செய்­வ­தற்கு தாம­தித்து விட்­டீர்கள்? ஏற்­க­னவே நீங்கள் எமது நாட்­டிற்கு விஜயம் செய்­தி­ருக்க வேண்டும்” என்றார். கூட்­டங்­களில் ஞான­சார தேர­ருக்கு அருகில் பெண்­களும் அமர்ந்­தி­ருந்­தார்கள்.

சவூதி அரே­பிய மன்­னரின் அரண்­மனை உட்­பட பல முக்­கிய இடங்­க­ளுக்கு எம்மை அழைத்துச் சென்­றார்கள். எனினும் நாம் இள­வ­ரசர் சல்­மானை சந்­திக்­க­வில்லை. தீவி­ர­வாத சிந்­த­னை­களை ஒழிப்­ப­தற்­கான நிலை­யத்­திற்கும் எம்மை அழைத்துச் சென்று அங்கு மேற்­கொள்­ளப்­படும் செயற்­பா­டு­களை விளக்­கி­னார்கள். வேறு சில நிறு­வ­னங்­க­ளுக்கும் நாம் அழைத்துச் செல்­லப்­பட்டோம்.

நாங்­களும் சவூதி அரே­பிய அதி­கா­ரி­களும் இரு நாடு­க­ளிலும் தீவி­ர­வா­தத்தை இல்­லாமற் செய்­வது குறித்தும் தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­பட்­டுள்ள இளை­ஞர்­களை இனங்­கண்டு அவர்­களை புன­ருத்­தா­பனம் செய்து நல்­வ­ழிப்­ப­டுத்­து­வது தொடர்­பிலும் கருத்­து­களைப் பரி­மாறிக் கொண்டோம். சவூதி அதி­கா­ரிகள் இது தொடர்­பி­லான எமது அனு­ப­வங்­களைக் கேட்­ட­றிந்து கொண்­டார்கள். சவூதி அரே­பி­யாவில் தீவி­ர­வா­தத்தை ஒழிப்­பது தொடர்பில் மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­களை அவர்கள் எம்­முடன் பகிர்ந்து கொண்­டார்கள்.

பேச்­சு­வார்த்­தையின் போது சவூதி அரே­பியா அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு உதவி செய்­கி­றது என எமது கூட்­டங்­களில் ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட தட­வைகள் ஏசி­யி­ருக்­கிறோம் என்­ப­தையும் அவர்­க­ளுக்குக் கூறினோம்.

அளுத்­கம வன்­செ­யல்­களின் பின்­ன­ணியில் நாம் இருக்­க­வில்லை என்­பதை தெளி­வு­ப­டுத்­தினோம். இது தொடர்பில் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மிக்­கு­மாறு பல தட­வைகள் கோரிக்கை விடுத்தும் அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை என்­பதை நாம் சுட்டிக் காட்­டினோம்.

முஸ்­லிம்­களின் கலா­சார உடையை நாம் எதிர்க்­க­வில்லை. முழு­மை­யாக முகத்தை மூடி ஆடை அணி­வ­தையே நாம் எதிர்த்தோம். அத்­தோடு ஹலால் விட­யத்தில் ஹலால் சான்­றிதழ் வழங்­கப்­ப­டு­வ­தையே நாம் எதிர்த்தோம். ஹலா­லுக்­காக கட்­டணம் அற­வி­டப்­ப­டு­வது தவிர்க்­கப்­பட வேண்டும் என்றே கூறினோம். ஆனால் ஊட­கங்­களே எமது செயற்­பா­டு­களை திரி­பு­ப­டுத்தி பிர­சாரம் செய்­தன என்­பதை சவூதி அரே­பிய அதி­கா­ரி­க­ளிடம் விளக்­கினோம்.

புத்த பெருமான் மனித மாமிசம் புசித்­த­தாக அப்துர் ராஸிக் நிந்­தனை செய்த சம்­ப­வத்­தையும் கூறினோம். இது தொடர்பில் அப்­போ­தைய ஜனா­தி­ப­திக்கு முறை­யிட்டும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. என்­றாலும் நாம் அப்துர் ராஸிக்கைத் தாக்­க­வில்லை என்­ப­தையும் விளக்­கினோம்.

ஞான­சார தேரர் புனித குர்­ஆனை அவ­ம­தித்த குற்­றச்­சாட்டு தொடர்பில் சவூதி அதி­கா­ரிகள் எம்­மிடம் வின­வினர். அதற்கும் பதி­ல­ளித்தோம். குர்­ஆனின் சிங்­கள மொழி­பெ­யர்ப்­பு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே ஞான­சார தேரர் கருத்து வெளி­யிட்­ட­தாகத் தெரி­வித்தோம்.

இலங்­கையில் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்ட போது தாக்­கி­ய­வர்கள் யாராக இருந்­தாலும் பொது­ப­ல­சேனா மீதே குற்றம் சுமத்­தப்­பட்­டது என்­ப­தையும் கூறினோம்.
சவூதி அரே­பியா இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு நல்ல விட­யங்­களைச் செய்­வ­தற்கே உதவி செய்­கி­றது. ஆனால் அவ்­வு­த­விகள் இங்கு தவ­றாக செல­வ­ளிக்­கப்­ப­டு­கி­றது. அடிப்­ப­டை­வா­தத்­துக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்றோம்.

உல­க­ளா­விய பொரு­ளா­தார பிரச்­சினை மற்றும் குடும்­பத்தில் இளை­ஞர்­க­ளுக்கு உரிய இடம் வழங்­கப்­ப­டாமை கார­ண­மா­கவே அவர்கள் அடிப்­ப­டை­வா­தத்தின் பால் ஈர்க்­கப்­ப­டு­கி­றார்கள். தீவி­ர­வா­தி­க­ளாக மாறு­கி­றார்கள். அவர்­களை இனங்­கண்டு புன­ருத்­தா­பனம் செய்­யப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் சவூதி அரே­பியா இருப்­ப­தாக அவர்கள் தெரி­வித்­தார்கள்

எமது நாட்டின் தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு உதவி செய்­வ­தற்கு அவர்கள் கரி­சனை கொண்­டுள்­ளார்கள்.

எமது சவூதி அரே­பிய விஜ­யத்தை பலர் பல­வாறு விமர்­சிக்­கி­றார்கள். நாம் ஒரு ஒப்­பந்­தத்தின் கீழ் செயற்­ப­டு­வ­தாக குற்றம் சுமத்­து­கி­றார்கள். எமது நாட்டில் நல்­லது செய்­வதை விமர்­சிப்­பதே வழக்­க­மா­கி­விட்­டது. எமது கழுத்தை வெட்ட வேண்டும் என்­கி­றார்கள்.

காவி­யு­டை­யுடன் சவூதி அரே­பி­யா­வுக்கு விஜயம் செய்வது ஆபத்தானது என பலர் எச்சரித்தார்கள். நானும் பயந்து கொண்டே சென்றேன். ஆனால் ஞானசார தேரர் எதற்கும் பயப்படவில்லை. சவால்களை எதிர்கொள்வதாகக் கூறினார்.
உண்மையில் சவூதி அரேபியா மாற்றம் கண்டுவிட்டது. ஆனால் அது 100 வீதமான மாற்றமல்ல. சவூதி மக்கள் மிகவும் அன்பானவர்கள், எம்முடன் சுமுகமாக பழகினார்கள்.

சவூதி அதிகாரிகள் இலங்கையில் எமது செயற்பாடுகளை ஆராய்வதாகக் கூறினார்கள். அங்கும் நாம் இதையே எதிர்பார்க்கிறோம். எமக்குள்ளான ஒத்துழைப்புகள் மனித சமுதாயத்துக்கு நிச்சயம் பயனுள்ளவையாக அமையும். அடிப்படைவாதத்திற்கு எதிராக நாம் எவ்வாறு செயற்படுவது என்பதை ஆராய வேண்டும் என்றார். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.