‘கோட்டா கோ கம’ புரட்சிப் பாதை

0 695

எம்.எஸ்.எம்.அனஸ்

‘கோட்டா கோ கம’­வி­லி­ருந்­துதான் இப்­போ­தைய சர்ச்­சைக்­கு­ரிய அர­சியல் பேசப்­பட வேண்டும். ஏனெனில், நாடு­த­ழு­விய மக்­களின் அடிப்­படை கோரிக்­கைகள் மாற்­றத்­திற்­கான சிந்­த­னைகள் இங்­கி­ருந்­துதான் வெளிப்­ப­டு­கின்­றன. பல தடங்­கல்கள் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யிலும் அந்­தப்­போ­ராட்­டங்கள் தொடர்­வ­தற்கு முக்­கிய காரணம் அதற்கு இருக்­கின்ற மக்கள் ஆத­ரவு என்­பதை நாம் மறுக்க முடி­யாது.

10 ஆவது நாளன்று அங்கு விஜயம் செய்த அர­ச­றி­வி­யல்­துறை பேரா­சி­ரியர் நவ­ரத்ன பண்­டார, ‘இலங்கை அர­சியல் எதிர்­கா­லத்­தையும் அர­சியல் சாசன (System Change) மாற்­றத்­தையும் செய்ய இருப்­ப­வர்கள் கவ­னத்தில் எடுக்க வேண்­டிய ஆழ­மான கோரிக்­கைகள் இங்கு முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கைக்­கான புதிய அர­சியல் கலா­சா­ரத்­திற்­காக அந்த இளைஞர் கூட்டம் இர­வு­ப­க­லாக போராடி வரு­கின்­றது. அந்த கூட்­டத்தின் மீது யாரா­வது தாக்­கு­தல்கள் நடத்­தலாம். ஆனால், ஒரு­போதும் இல்­லா­ம­லா­காது, அவர்கள் மீண்டும் வரு­வார்கள். அந்த போராட்ட வீரர்­களின் கோரிக்­கை­களை நாடு நன்கு அறிந்­தி­ருக்­கி­றது. மேலும் கோட்டா கோ கம காலி­மு­கத்­திடல் சுற்­றாடல் ஒரு தனி அர­சாக ஆதர்ஷ நாடாக திகழ்­கின்­றது’ என்று கூறி­யது இந்த நிமிடம் வரையும் யதார்த்­த­மா­கவே இருந்து வரு­கி­றது.

இப்­போது 50 நாட்­களை எட்­டி­யி­ருக்கும் இந்த போராட்டம் இலங்கை அர­சியல் கலா­சா­ரத்தை மாற்ற விரும்பும் மக்­களின் போராட்­ட­மாகும்.

‘கோட்டா கோ கம’ என்­பது கம (ஊர்) அல்ல, அது ரட்ட (நாடு). அது நாட்டின் பொது சட்­டங்­களை விதி­களை பொருட்­ப­டுத்­தாத இடம். தமிழில் தேசி­ய­கீதம் ஒலிக்­கி­றது. பாங்­கோசை ஒலிக்­கி­றது. முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் ஒளி­யேற்­றப்­ப­டு­கி­றது. கிறிஸ்­தவச் சடங்­கு­களில் பாதி­ரிமார் பங்­கேற்­கின்­றனர். வெசாக் பண்­டி­கையும் பிரித் பாரா­ய­ணங்­களும் அந்தப் பூமி­யில்தான் நடக்­கி­றது.

அது ஒரு தனித்­து­வ­மான, புதிய இயக்கம், அமைப்பு, மக்­களின் அர­சியல் எதிர்­பார்ப்பு. இங்கு எழுப்­பப்­படும் கோஷங்கள், பதா­கைகள், கோரிக்­கைகள் என்ன நடக்க வேண்டும், நாடு எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்­பன பற்­றிய சிந்­த­னைகள் இங்கு பேசப்­ப­டு­கின்­றன, கலந்­து­ரை­யா­டப்­ப­டு­கின்­றன. அங்கு பெரும்­பான்­மை­யா­ன­வர்­க­ளாக நிற்போர் சிங்­க­ள­வர்கள் தான். தமி­ழர்கள், முஸ்­லிம்கள், கிறிஸ்­த­வர்கள் அதில் சுய­மாகக் கலந்து எதிர்ப்புச் செயற்­பாட்டில் இணைந்­தி­ருப்­பது முக்­கிய அம்சம். ஆனால், காலி­மு­கத்­திடல் கோட்டா கோ கம இந்த நாட்டு அர­சியல் தவ­ற­விட்­டுள்ள அலட்­சி­யப்­ப­டுத்­தி­யுள்ள விட­யங்கள் பற்றிச் சிந்­திக்கத் திற­னுள்ள இளை­ஞர்கள் அங்கு கூடி உள்­ளனர்.

தொழிற்­சங்­க­வா­திகள், வைத்­தியர், சட்­டத்­த­ர­ணிகள் போன்ற தொழில்­வாண்­மை­யா­ளர்கள் மூத்த ஊட­க­வி­ய­லா­ளர்கள், மூத்த எழுத்­தா­ளர்கள், கலை­ஞர்கள், இளம் நடி­கர்கள், ஓவி­யர்கள், அதி­பர்கள், ஆசி­ரி­யர்கள், ஆண்கள், பெண்கள் என்ற இந்த நாட்டின் கல்வி அறி­வுள்ள அனு­ப­வ­முள்ள நாட்டின் குறை­பா­டு­களை எடுத்­துக்­கூ­றவும் பிரச்­சி­னை­க­ளுக்கு வழி தேடவும் ஆற்றல் உள்­ள­வர்­களைக் கொண்ட கிராமம் அது.

இவை எல்­லா­வற்­றையும் விட ஒடுக்­கப்­பட்ட, பாதிக்­கப்­பட்ட, புறக்­க­ணிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கா­கவும், சிறு­பான்­மை­யோ­ருக்­கா­கவும் மக்­க­ளிடம் புதை­யுண்டு கிடக்கும் அர­சியல் பொரு­ளா­தாரக் குமு­றல்­களைப் பிர­தி­ப­லிப்­ப­வர்­க­ளாக அல்­லது பிர­தி­நி­தி­க­ளாக கோட்டா கோ கம மக்கள் குரல் எழுப்பி வரு­கின்­றனர்.

அவர்கள் இளை­ஞர்கள். ஆனால் புதிய தலை­மு­றையைப் பிர­தி­ப­லிப்­ப­வர்கள். நாட்டில் அர­சியல், சமய, இன மோதல்­க­ளுக்குப் பலி­யான, பலி­யா­கி­வரும் இளை­ஞர்­க­ளுக்கு மாற்­ற­மா­ன­வர்கள். அளுத்­கம, திகன, மினு­வாங்­கொட கல­வ­ரங்­களில் இன­வாத அல்­லது இன­வாத அர­சி­ய­லுக்குப் பலி­யாகி ராவ­ண­ப­லய, சிங்­ஹலே போன்ற இன­வாத இயக்­கங்­களின் கைக்­கூ­லி­க­ளாக பெற்றோல் குண்­டு­க­ளு­டனும், கத்தி, பொல்­லு­க­ளு­டனும் அலைந்து அப்­பாவி மக்­க­ளையும் சொத்­துக்­க­ளையும் அடித்தும் எரித்தும் அழிவை ஏற்­ப­டுத்­தி­ய­வர்­களின் செயல்­களை நிரா­க­ரிக்கும் ஒரு புதிய தலை­மு­றை­யினர்.

‘கோட்டா கோ கம’ வானத்தில் இருந்து விழுந்­த­தல்ல. நல்ல மக்கள், நல்ல இளை­ஞர்கள் , கலை­ஞர்கள் இந்த நாட்டில் இருப்­ப­தாக நாங்கள் சிறு­பான்மை மக்கள் நம்பி வந்­துள்ளோம். ஆனால் அவர்கள் வெளியே வர­வில்லை. வெளி­வ­ரா­த­வாறு அவர்­களின் குரல்­வ­ளைகள் நசுக்­கப்­பட்ட வர­லாற்­றையும் நாம் அறிவோம். கண்­முன்னே நடக்கும் அநி­யா­யங்­களை மானிட விரோதச் செயல்­களைப் பார்த்தும் செயல்­ப­டா­த­வாறு அவர்கள் கைகள் கட்­டப்­பட்­டி­ருந்­தன.

முதலில் பிறந்து 20 நாட்­க­ளே­யான குழந்­தையின் ஜனாஸா கொவிட் 19 ஐ காரணம் காட்டி அநி­யா­ய­மாக எரி­யூட்­டப்­பட்­ட­தி­லி­ருந்து அரச வெறுப்பு நாடு­மு­ழுக்க பர­வி­யது, சிங்­க­ள­வர்­களும் அதிர்ச்­சி­ய­டைந்­தனர். அதை தொடர்ந்து இந்த அரசை நேர­டி­யாக எதிர்த்­த­வர்கள் விவ­சா­யி­கள்தான். ‘காப­னிக்கப் பொஹற’ (அசே­தனப் பசளை) ஏற்­ப­டுத்­திய அழுத்­தத்­தி­லி­ருந்து விடு­தலை கோரி விவ­சா­யிகள் வீதிக்கு வந்­தனர். தேவை­யான உரம் கிடைக்­கா­ததால் விவ­சாயச் செய்­கை­களில் இருந்து விவ­சா­யிகள் வெளி­யே­றினர். விவ­சாய அமைச்சர் மஹிந்­தா­னந்­தவின் உருவ பொம்­மை­களை நாடு­மு­ழுக்க எரித்­தனர். ஒரு மாதம் செல்­வ­தற்கு முன்­னரே எதிர்ப்­புக்கள் மஹிந்­தா­னந்­த­வி­லி­ருந்து ராஜ­ப­க்ஷாக்­களை நோக்கி திரும்­பி­யது. மக்கள் ராஜ­பக்ஷ அரசை கண்­டித்­தனர். ஆள­மு­டி­யா­விட்டால் வீட்­டுக்குப் போ என்று விவ­சாய நிலங்­களில் நின்றும் வீதி­களில் நின்றும் கத­றினர். கோ கோட்டா (Go Gotta) எண்­ணக்­கரு விவ­சாய பூமி­யி­லி­ருந்­துதான் முளைத்தது. விவ­சா­யிகள் அடி­மட்ட மக்கள். இழப்­ப­தற்கு எது­வு­மில்­லாத சாதா­ரண மக்கள். ஆண்­டது போதும் வெளி­யே­றுங்கள் என்று ராஜ­ப­க்ஷாக்­களைப் பார்த்து அவர்கள் நாடு முழுக்க எழுப்­பிய கோஷம்தான் பெருந்­தீயாய் நாடு முழுக்கப் பர­வி­யது.

டிசம்பர், ஜன­வ­ரி­களில் இது செய்­தி­களும் தொலைக்­காட்­சி­களும் மட்­டும்தான். எரி­பொருள் தட்­டுப்­பாடு, சமையல் எரி­வாயு தட்­டுப்­பாடு, அத்­தி­யா­வ­சியப் பொருள்­களின் விலை ஏற்றம், உள்­நாட்டுப் பணத்தின் பெறு­மதி இழப்பு, பொருட் கொள்­வ­ன­வுக்­கான டொலர் கையி­ருப்பு இன்மை, வெளி­நாட்டுக் கடன்­களைக் கட்­டு­வ­தற்கும் டொலர் இல்லை என்ற மத்­தி­ய­வங்­கியின் அறி­விப்பு, மைல் கணக்கில், நாட்­க­ணக்கில் மக்கள் வரி­சையில் நின்ற வேத­னை­களும் இவற்­றுடன் இணைந்து புரட்­சிக்­கான பூர்­வீகச் சூழல்கள் இடப்­பட்டு விட்­டன.

சமையல் எரி­வாயு வெடித்­ததும் மக்கள் இறந்­ததும் அநேகர் காயம் அடைந்­ததும் பெற்றோல் வரிசை,  சமையல் எரி­வாயு வரி­சை­களில் நின்று எட்டுப் பேர் மர­ணித்­ததும், வரி­சை­களில் மக்கள் சாகாமல் செத்­ததும் வேடிக்­கை­யான செய்­திகள் அல்ல. அர­சாங்கம் எதற்கு? என்று மக்கள் கேள்வி எழுப்­பி­னார்கள்.

அப்­போ­துதான் கொழும்­பிலும் சில நகர்ப்­பு­றங்­க­ளிலும் அமை­தி­யான (கட்சி சார்­பற்ற) மக்­களின் அமைதிப் போராட்­டங்கள் ஆரம்­ப­மா­கின. அவர்கள் பெரும்­பாலும் நடுத்­தரக் குடும்­பங்­களைச் சேர்ந்த படித்­த­வர்கள், நகர்ப்­பு­றத்­த­வர்கள். பொது­வாக அடுத்­தவர் பிரச்­சி­னை­களின் போது அதிகம் பதற்­றப்­ப­டா­த­வர்கள். வீதிக்கு வந்­த­வர்கள் கைகளில் மெழு­கு­வர்த்­தி­க­ளோடும் சுலோக அட்­டை­களை ஏந்­தி­ய­வாறும் அமை­தி­யாக பாதை­யோ­ரங்­களில் நீண்ட வரி­சை­களில் நின்­றனர். தொடர்ச்­சி­யாக நின்­றனர். மத்­திய வகுப்­பி­னரின் மெளனம் உடைந்த கட்டங்கள் இவை.

கோட்டா கமவின் பூர்வீகத்தின் ஒரு பகுதி இது. மத்தியதர வகுப்பின், கட்சி சார்பற்றவர்களின் நாட்டின் அரசியல் பொருளியல் வீழ்ச்சியைப் பற்றிய தீவிரமான சிந்தனைகளுடன்  அமைதிப் போராட்டத்துக்கு ஒரு குழு தயாரானது.

நாங்கள் கொழும்புக்கு வருவோம். பாராளுமன்றத்தையும் ஆட்சியாளர்களின் வீடுகளையும் முற்றுகையிடுவோம் என்று கோஷம் எழுப்பிய விவசாயிகள் கொழும்பு வரவில்லை. ஆனால் கொழும்பை முற்றுகையிட கோட்டா கோ கம வாசிகளால் முடிந்தது. நாடு முழுக்க ஒலித்த ‘போதும் வெளியேறுங்கள்’ என்ற கோஷம் ஜனாதிபதியின் செயலகத்தையே அதிர வைத்தது. இந்தப் போராட்டம் இலங்கை அரசியலின் புதிய அத்தியாயமாகியது. அதன் தாக்கங்களையே இப்போது நாம் தேசிய அரசியலில் கண்டுகொண்டிருக்கிறோம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.