ஹஜ் பயண ஏற்பாடுகளின் சிக்கல்கள் குறித்து பேச்சு

0 415

நெருக்­க­டி­யான சூழலில் ஹஜ் பயண ஏற்­பா­டு­களில் ஏற்­படும் சிக்கல்கள் தொடர்பில் ஹஜ் முகவர்கள் சங்க பிரதிநிதிகள் நேற்­றைய தினம் சுற்­றா­டல்­துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ­மட்டை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர்.

அமைச்சின் அலு­வ­ல­கத்தில் நடந்த இச்­சந்­திப்பில், இம்­முறை ஹஜ் பயண ஏற்­பா­டு­களைச் செய்­வ­தற்­கான வழி­வ­கை­கள் பற்­றியும், இதி­லுள்ள சிக்கல்­களை களை­வது குறித்தும் அமைச்­ச­ருடன் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக புனித ஹஜ்­ஜுக்கு இலங்­கை­யி­லி­ருந்து எவரும் செல்­ல­வில்லை. இந்­நிலை யில், இம்­முறை 1585 பேருக்கு ஹஜ் ­க­ட­மையை நிறை­வேற்ற வாய்ப்­புக்­கி­டைத்­துள்­ளது.

எனினும், நாட்டில் ஏற்­பட்­டுள்ள டொலர் நெருக்­கடி உள்­ளிட்ட சில விட­யங்­களால், பயண ஏற்­பா­டு­களில் ஏற்­பட்­டுள்ள தடங்­கல்­க­ளுக்கு தீர்­வு­காண்­பது பற்­றியே அமைச்­ச­ருடன் கலந்­து­ரை­யா­டப்­ப­பட்­டது.

பயண கட்­ட­ணங்­களை டொலரில் செலுத்த வேண்­டி­யுள்­ளதால், மேற்­கொள்ள வேண்­டிய நடை­மு­றைகள் மற்றும் கொரோனா தடுப்­பூ­சிகள் ஏற்­றுதல் உள்­ளிட்­ட­வற்றை அரசின் அனு­ம­தி­யுடன் ஏற்­பாடு செய்து தரு­மாறு அமைச்­சரைச் சந்­தித்த, ஹஜ் பயண ஏற்­பா­டுகள் அமைப்­பினர் கேட்டுக் கொண்­டனர். இந்தப் பேச்சு வார்த்­தையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஸர்ரப், அலி­சப்ரி ரஹீம் ஆகி­யோரும் உட­னி­ருந்­தனர்.
இந்த சந்­திப்பில் ஹஜ் முகவர் சங்க தலைவர் எம்.ஜி.எம் ஹிஸாம் உட்பட எம்.ஆர்.எம் பாரூக், எம்.ஓ.எப்.ஜெஸீம், எச். எம். அம்ஜாடீன் மற்றும் எம்.எப்.என்.எம்.உஸாமா ஆகியோர் கலந்து கொண்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.