ரூ. 1700 மில்லியன் செலவில் கூரகல புனித பூமி அபிவிருத்தி

இராணுவ தளபதி திறந்துவைத்தார்

0 436

‘‘1700 மில்­லியன் ரூபா செலவில் கூர­கல புனி­த­பூமி அபி­வி­ருத்தி செய்­யப்­பட்டு வெசாக் நோன்­மதி தினத்­தன்று திறந்து வைக்­கப்­பட்­டது. வெசாக் அரச தேசிய நிகழ்­வு­களும் இடம் பெற்­றன. ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லையும் புனர்­நிர்­மாணம் செய்து அன்­றைய தினமே திறந்து வைக்க திட்­ட­மிட்­டி­ருந்தேன். ஆனால் பள்­ளி­வாசல் நிர்­வாகம் மற்றும் சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை‘‘ என நெல்­லி­கல சர்­வ­தேச பெளத்த நிலை­யத்தின் ஸ்தாபகர் வத்­து­ர­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் ‘விடி­வெள்ளி‘ க்குத் தெரி­வித்தார்.

கடந்த வெசாக் நோன்­மதி தினத்­தன்று 15 ஆம் திகதி கூர­கல புனித பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட பிர­மாண்­ட­மான தாது கோபுரம், போதிய, தர்ம மண்­டபம் உட்­பட பல நிர்­மா­ணங்கள் திறந்து வைக்­கப்­பட்­டன. நிகழ்வில் இரா­ணுவ தள­பதி சவேந்­திர சில்வா உட்­பட அரச அதி­கா­ரிகள் கலந்து கொண்­டனர்.

கடந்த 15ஆம் திகதி இடம்­பெற்ற வெசாக் அரச தேசிய நிகழ்வில் சுமார் ஒன்­றரை இலட்சம் மக்கள் கலந்து கொண்­டனர். இதே வேளை மறு­தி­ன­மான கடந்த 16 ஆம் திகதி சுமார் 6 இலட்சம் மக்கள் புனித பூமியை தரி­சிக்க வருகை தந்­த­தாக வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்; கூர­கல புனி­த­பூமி பெளத்­தர்­க­ளுக்கு சொந்­த­மா­ன­தாகும். இங்கு அனைத்து மக்­களும் இன, மத பேத­மின்றி வந்து தரி­சிக்­கலாம்.

இப்­பி­ர­தேசம் தலதா மாளி­கை மற்றும் ருவன் வெலி­சாய, சிவ­னொளி பாத­மலை போன்­ற­தாகும்.

இங்கு அமைந்­துள்ள ஜெய்­லானி பள்­ளி­வா­சலை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு நான் திட்­ட­மிட்­டி­ருந்தேன். அங்­குள்ள தகரக் கொட்­டிலை அகற்­றி­விட்டு தொழுகை மண்­டபத்தை எனது செலவில் அமைத்துத் தரு­வ­தாகக் கூறினேன். சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்குக் கடி­தமும் அனுப்பி வைத்தேன். வெசாக் நோன்­மதி தினத்­தன்றே பள்­ளி­வா­ச­லையும் தொழுகை மண்­ட­பத்­தையும் திறந்து வைக்­க­வி­ருந்தேன். ஆனால் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் ஒத்­து­ழைக்­காது மெள­ன­மா­கவே இருந்து விட்­டனர்.

முஸ்­லிம்கள் பயப்­ப­ட­வேண்டாம். கூர­கல பெளத்த புனித பிர­தே­சத்­துக்கு வருகை தாருங்கள். பெளத்த நிர்­மா­ணங்­களைப் பார்­வை­யி­டுங்கள். முஸ்­லிம்­க­ளுடன் எனது நட்­பு­றவு பல­மாக இருக்­கி­றது. தொல்­பொருள் பிர­தே­சங்­க­ளையும் புனித பிர­தே­சங்­க­ளையும் நாம் பாதுகாக்க வேண்டும்.

கூரகல பெளத்த புனித பிரதேசத்தை நிர்மாணிப்பதற்கு நாங்கள் அரசாங்கத்திடமிருந்து உதவி பெற்றுக்கொள்ளவில்லை. எமது மக்களே 1700 மில்லியன் ரூபாய்களை திரட்டினார்கள் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.