இலங்கை நிலைமைகளிலிருந்து இந்தியா பாடம் படிக்க வேண்டும்

எச்சரிக்கிறார் மெஹ்பூபா முப்தி

0 417

இலங்­கையில் தற்­போது ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி இந்­தி­யா­வுக்கு எச்­ச­ரிக்­கை­யாக அமைய வேண்டும் என ஜம்மு காஷ்­மீரின் முன்னாள் முதல்வர் மெஹ்­பூபா முப்தி தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யாவின் பொரு­ளா­தா­ரமும் இலங்­கையின் வழி­யி­லேயே பய­ணிப்­ப­தாக சுட்­டிக்­காட்டி தனது டுவிட்டர் கணக்கில் வெளி­யிட்­டுள்ள பதி­வி­லேயே அவர் இதனை குறிப்­பிட்­டுள்ளார்.

“இலங்­கையில் என்ன நடந்­தது என்­பது ஒரு எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும். 2014 முதல், இந்­தியா ஒரு வகுப்­பு­வாத வெறி மற்றும் கற்­ப­னை­யான அச்­சங்­க­ளுக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளது. மிகை தேசி­ய­வாதம் மற்றும் மதப் பெரும்­பான்­மை­வா­தத்தின் பாதையில் அது பய­ணிக்­கி­றது. இவை அனைத்­துக்­கு­மாக சமூக ஒற்­றுமை மற்றும் பொரு­ளா­தார பாது­காப்பை விலை கொடுக்க வேண்டி வரும்” என அவர் அதில் குறிப்­பிட்­டுள்ளார்.
இதே­வேளை மெஹ்­பூபா முப்­தியின் இந்தக் கருத்தை கண்­டித்­துள்ள இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சி, அதனை துரோகம் என்றும் வர்ணித்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.