(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்வருட ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அமைச்சின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் தெரிவித்தார்.
ஹஜ் விவகாரம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரு ஹஜ் முகவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன் இரண்டாம் கட்டமாக திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 86 ஹஜ் முகவர்களுடனான கலந்துரையாடலொன்று நாளை வெள்ளிக்கிழமை திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது.
மேலும் வழமையாக சவூதி அரசு மற்றும் திணைக்கள அதிகாரிகள் கையொப்பமிடும் உடன்படிக்கை இவ்வருடம் இணையவழியில் கையொப்பமிடப்படவுள்ளது.
ஹஜ் யாத்திரை தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் ஒருவார காலத்துக்குள் பூர்த்தி செய்யப்படும் என்றார்.- Vidivelli