சண்டை பிடிப்பதற்கு சபை எதற்கு?

0 488

நாட்டின் பொரு­ளா­தார மற்றும் அர­சியல் நிலை­மைகள் மிகப் பார­தூ­ர­மான பின்­ன­டைவைச் சந்­தித்­துள்ள நிலையில், புதிய பிர­த­ம­ராக ரணில் விக்­ர­ம­சிங்­கவை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச நிய­மித்­துள்ளார். ராஜ­பக்­சாக்­க­ளுக்கு எதி­ரான மக்­களின் கோபம் வன்­மு­றை­யாக வெடித்­ததைத் தொடர்ந்து, அவர்கள் அனை­வரும் பாது­காப்­பான இடங்­களில் தஞ்­ச­ம­டைந்­தனர். இந்­நி­லையில் நாட்டின் அரச இயந்­தி­ரத்தைப் பொறுப்­பெ­டுத்து நடத்­து­வ­தற்கு முன்­வ­ரு­மாறு எதிர்க்­கட்­சி­க­ளுக்கு ஜனா­தி­பதி அழைப்­பு­வி­டுத்தார்.

எனினும் பிர­தான எதிர்க்­கட்சித் தலை­வ­ரான சஜித் பிரே­ம­தாச அதற்கு முன்­வ­ர­வில்லை. இந் நிலையில் பழுத்த அர­சியல் அனு­பவம் கொண்ட ரணில் விக்­ர­ம­சிங்க, அப்­பொ­றுப்பை ஏற்றுச் செயற்­பட முன்­வந்தார். இதற்கு முன்னர் ஐந்து தட­வைகள் பிர­த­ம­ராகப் பதவி வகித்­தவர் என்ற வகையில் அவ­ரது அனு­பவம் இந்த இக்­கட்­டான கால­கட்­டத்தில் நாட்டை வழி­ந­டத்த உதவும் என எதிர்­பார்க்க முடியும்.

நாடு எதிர்­கொண்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­கடி குறித்து பல மாதங்­க­ளுக்கு முன்­னரே சபையில் எதிர்­வு­கூ­றிய ஒரே­யொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக ரணில் விக்­ர­ம­சிங்­கவே விளங்­கு­கிறார். எனினும் மக்­களின் ஆத­ரவைப் பெறாத, பொதுத் தேர்­தலில் படு­தோல்­வி­ய­டைந்த கட்சி என்ற வகை­யிலும் தேசியப் பட்­ட­டியல் மூலம் பாரா­ளு­மன்றம் நுழைந்­தவர் என்ற வகை­யிலும் ரணிலின் எச்­ச­ரிக்­கை­களை அர­சாங்கம் கவ­னத்தில் கொள்­ள­வில்லை. மாறாக பொரு­ளா­தாரம் குறித்த எந்­த­வித தகை­மையும் அனு­ப­வ­மு­மில்­லாத பசில் ராஜ­பக்ச மற்றும் அஜித் கப்ரால் போன்­ற­வர்­களின் முட்­டாள்­த­ன­மாக யோச­னை­களைப் பின்­பற்றித் தீர்­மா­னங்­களை எடுப்­ப­தி­லேயே ஜனா­தி­பதி குறி­யா­க­வி­ருந்தார். இன்று நிலை­மைகள் எல்­லை­மீறிச் சென்­ற­பி­றகே ஜனா­தி­பதி இருப்­ப­வர்­களில் பொருத்­த­மான ஒரு­வ­ருக்கு பிர­தமர் பத­வியை வழங்­கு­கின்ற தீர்­மா­னத்தை எடுத்­தி­ருக்­கிறார்.

இருந்­த­போ­திலும் ரணில் விக்­ர­ம­சிங்க, எந்­த­வித அழுத்­தங்­க­ளு­மின்றி அமைச்­ச­ர­வையை வழி­ந­டாத்திச் செல்­வ­தற்கு பொது ஜன பெர­மு­ன­வினர் எந்­த­ளவு ஒத்­து­ழைப்பு வழங்கப் போகி­றார்கள் என்­ப­தி­லேயே நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டியின் மீட்சி தங்­கி­யுள்­ளது எனலாம். நேற்று முன்­தினம் சபையில் அக் கட்­சி­யினர் நடந்து கொண்ட விதம் இந்த சந்­தே­கத்தை மேலும் வலு­வ­டையச் செய்­கி­றது. குறிப்­பாக பசில் ராஜ­பக்ச தொடர்ந்தும் தனது அர­சியல் சித்து விளை­யாட்­டுக்­களைக் காட்ட முனைவார் என்­பதில் சந்­தே­க­மில்லை. மே 9ஆம் திக­தி­யுடன் திரு­கோண­மலை கடற்­படை முகா­முக்குள் ஒளிந்­து­கொண்ட மஹிந்த ராஜ­பக்ச, நேற்­றுதான் முதன்­மு­றை­யாக பொது வெளியில் தோன்­றினார். பாரா­ளு­மன்ற அமர்­விலும் கலந்து கொண்டார். தனது தந்தை ஒரு­போதும் அர­சி­யலில் இருந்து ஒதுங்கப் போவ­தில்லை என்றும் தொடர்ந்தும் அவர் பொது ஜன பெர­மு­னவை வழி­ந­டாத்­துவார் என்றும் நாமல் ராஜ­பக்ச எம்.பி. நேற்றுத் தெரி­வித்­தி­ருக்­கிறார். ஆக, இந்த நாட்டைப் படு­பா­தா­ளத்தில் தள்­ளிய ராஜ­பக்ச குடும்­பமும் அவர்­களைப் பின்­பற்றும் ஏனைய அர­சி­யல்­வா­தி­களும் தொடர்ந்தும் அர­சியல் செய்யப் போகி­றார்கள் என்­ப­தையே இந்த நகர்­வுகள் குறித்து நிற்­கின்­றன.

மறு­புறம் எதிர்க்­கட்­சி­களும் பாரா­ளு­மன்­றத்தில் தேவை­யற்ற பிரச்­சி­னை­களைக் கிளப்பி சபையின் நேரத்­தையும் பணத்­தையும் வீண­டிப்­ப­தி­லேயே காலத்தைக் கடத்­து­கின்­றன. தற்­போ­தைய உட­னடித் தேவை­யா­க­வுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டிக்குத் தீர்வு காண்­பது தொடர்பில் அவர்கள் முறை­யான யோச­னை­களை முன்­வைத்து அழுத்­தங்­களை வழங்­கு­வ­தாகத் தெரி­ய­வில்லை.

இது மஹிந்த, கோத்தா, ரணில், சஜித், அனுர என வேறு­பா­டு­காட்டிக் கொண்­டி­ருப்­ப­தற்­கான நேர­மல்ல. இலங்­கை­யர்கள் என்ற அடிப்­ப­டையில் நாட்டைத் தூக்கி நிறுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான நேரம்.

பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து மீள்­வ­தற்­காக நஷ்டத்தில் இயங்கும் பல நிறு­வ­னங்­களை தனி­யார்­ம­யப்­ப­டுத்த வேண்டும் என்ற யோச­னையை பிர­தமர் ரணில் முன்­வைத்­துள்ளார். குறிப்­பாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறு­வனம் பாரிய நட்­டத்தில் இயங்­கு­கி­றது. இறு­தி­யாக 2008 ஆம் ஆண்டு எமிரேட்ஸ் நிறு­வ­னத்­தினால் நிர்­வ­கிக்­கப்­பட்­ட­போது, 4428 மில்­லியன் ரூபாவை இலா­ப­மாகப் பெற்ற அந் நிறு­வனம் 2020 ஆம் ஆண்டு 47198 மில்­லியன் ரூபா நஷ்டத்தைச் சந்­தித்­துள்­ளது. அப்­ப­டியால் இந்­நி­று­வ­னத்தை தொடர்ந்தும் இவ்­வா­றான பாரிய நட்­டத்தில் நடத்திச் செல்ல வேண்­டுமா அல்­லது தனி­யா­ரிடம் ஒப்­ப­டைத்து மீண்டும் இலாபமீட்டச் செய்ய வேண்­டுமா என்­பது பற்­றிய கொள்கைத் தீர்­மா­னங்­களை எடுப்­பதே பாரா­ளு­மன்­றத்தின் பணி­யாகும். இவ்­வா­றான விவா­தங்கள், கலந்­து­ரை­யா­டல்­களை விடுத்து பிர­யோ­ச­ன­மற்ற விட­யங்­களில் கவனம் செலுத்­து­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

பாரா­ளு­மன்­றமே சட்­ட­மி­யற்றும் அதி­காரம் கொண்ட நிறு­வனம் என்ற வகையில் பொரு­ளா­தார மீட்சிக்கான வழிகளை உடன் கண்டறிந்து, தேவையான சட்டங்களை இயற்றி அல்லது திருத்தி தீர்வுகளைக் காண அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதைவிடுத்து சிறுபிள்ளைகள் போல ஒருவரையொருவர் விரல் நீட்டிக் குற்றம்சாட்டி விளையாடிக் கொண்டிருப்பதற்கான தருணம் இதுவல்ல. பாராளுமன்ற அமர்வுகளைச் சரிவரப் பயன்படுத்தி தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். மக்கள் 225 பேரையும் தெரிவு செய்து அனுப்பியது சண்டைபிடிப்பதற்கு அல்ல. மாறாக சாத்தியமான தீர்மானங்களை எடுப்பதற்கே என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.